Christmas canva
இந்தியா

Travel: கோவா முதல் கேரளா வரை: கிறிஸ்துமஸை கொண்டாட 5 கூல் டெஸ்டினேஷன்ஸ்!

இந்த வின்டர் ஹாலிடேஸை உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் குதூகலமாக கொண்டாட இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்

Keerthanaa R

டிசம்பர் மாதம் வந்தாலே உடனே நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தான்.

வித விதமான கேக்குகள், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பரிசுகள், வீட்டில் தொங்கவிடப்படும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என கோலாகலமாக இருக்கும். மற்றொரு புறம் டிசம்பர் என்பது ஹாலிடே சீசனும் கூட.

இந்த வின்டர் ஹாலிடேஸை உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் குதூகலமாக கொண்டாட இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்

மணாலி:

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மற்ற நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படி இந்தியாவிலும் ஸ்னோஃபாலுடன் கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த இடம் மணாலி.

அதிக சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் தலமாகவும் மணாலி இருக்கிறது. வெள்ளை போர்வை உடுத்திய பனிமலைகள், பைன் மரங்கள் உங்களுக்கு நிச்சயம் கிறிஸ்துமஸ் வைபை கொடுக்கும்.

கேரளா:

God's Own Country ஆன கேரளா கிறிஸ்துமஸை கொண்டாட ஒரு சிறந்த சாய்ஸ். நள்ளிரவில் கேரல்ஸ் (carols), அதன் பின்னர் சிறப்பு விருந்து, பான் ஃபையர் (bonfire) என பட்டியல் நீள்கிறது. லேடி ஆஃப் டோலோர்ஸ் தேவாலயம், செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் மற்றும் எடத்துவா தேவாலயம் ஆகிய இடங்களையும் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்

ஷில்லாங்:

கத்தோலிக் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருக்கும் ஷில்லாங்கில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் ஷில்லங்கில் நள்ளிரவு பிரார்த்தனைகள் பிரபலம். நூற்றாண்டுகால பழமையான Fir மரத்தினை அலங்கரித்து இங்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது

பாண்டிச்சேரி:

இந்தியாவில் விமர்சையாக, பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பாண்டிச்சேரியும் ஒன்று. வண்ணமயமான லைட்டுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்கள் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும், இங்கு நிலவும் மிதமான வானிலை, அமைதியான கடற்கரைகள் கொண்டாட்டங்கள் முடிந்து மனதை இளகச்செய்யும் வகையில் அமைந்திருக்கும்

கோவா:

பல தரப்பட்ட விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கு கோவா ஒரு சிறந்த தலம். இரவு நேர பார்ட்டிகள், அரிய, பல தரப்பட்ட உணவு வகைகள், அழகிய கடற்கரைகள் என கொண்டாட்டத்தின் மறு பெயராக இருக்கிறது கோவா.

இங்கும் பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் மக்கள் ஒன்றுகூடி carols பாடுவதும், நள்ளிரவு கூட்டு பிரார்த்தனைகள் நடக்கும்.

உங்கள் கிறிஸ்துமஸ் ட்ரிப்புக்கு எந்த இடத்தை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?