Surrogacy Canva
இந்தியா

Surrogacyக்கு இந்திய சட்டம் அனுமதிக்கிறதா? வாடகைத் தாய் என்றால் என்ன? விரிவான தகவல்கள்

Gautham

சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், தானும் மனைவி நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரானதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, அதற்குள் குழந்தை பிறந்ததா என்ற விவாதம் இணையத்தில் சூடுபிடித்தது.

நடிகை கர்பமாக இருந்தது போல எந்த ஒரு புகைப்படமோ காணொளியோ வெளியாகவில்லையே, கர்ப காலத்தில் கொண்டாடும் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் குறித்து கூட எதுவும் பேசப்படவில்லையே என இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டதையும் நம்மால் பார்க்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த நட்சத்திர தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகச் செய்திகள் உலா வருகின்றன.

Nayanthara - Wikki become parents to twin boys

இது குறித்தும், கால இடைவெளி குறித்தும் பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியத்திடம் கேள்வி எழுப்பிய போது, வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் மருத்துவ சேவைகள் துறை இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று கூறினார்.

தற்போது பேசுபொருளாக இருக்கும் இந்த வாடகைத் தாய் என்றால் என்ன? இது குறித்து இந்திய சட்ட திட்டங்கள் சொல்வதென்ன? இந்த கட்டுரையில் பார்க்கலாம்...

வாடகைத் தாய் என்பவர் யார்?

ஒரு பெண் வேறொருவருக்காக கருவை தன் வயிற்றில் சுமந்து, பெற்றுக்கொடுக்க சட்ட ரீதியாக ஒப்புக் கொள்வதைத் தான் வாடகைத் தாய் (Surrogacy) என்கிறோம். அந்த வாடகைத் தாய் பெற்றெடுக்கும் குழந்தை, யாருடைய கருவில் இருந்து உருவாக்கப்பட்டதோ அல்லது யார் அந்த பெண்ணிடம் வாடகைத்தாயாக இருக்கச் சொல்கிறார்களோ அவர்களுடைய குழந்தையாக வளரும்.

ஏன் வாடகைத் தாயை நாடுகிறார்கள்?

1. மருத்துவ காரணத்தால் அல்லது மற்ற காரணங்களால் கர்ப்பம் தரிக்க முடியாமல் போவது,

2. கர்ப்பமாக இருந்தால் தாய் அல்லது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகலாம் என்கிற நிலையில் இருப்பது,

3. ஓரின ஈர்ப்பாளர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவது... போன்றவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

வணிக ரீதியில் வாடகைத் தாயாக இருக்க, 2002ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது.

இரண்டு வகையான வாடகைத் தாய்:

ஒரு குடும்பத்தில் வாரிசு இல்லை என்கிற நிலை வரும் போது, இயற்கையான முறையில் கருவை ஒரு பெண்ணின் வயிற்றில் உருவாக்குவதை conventional surrogacy அல்லது natural surrogacy என்கிறார்கள்.

இதில் வழக்கம் போல, ஒரு ஆணும் பெண்ணும் புணர்ந்து கரு உருவாகும். இப்படி இயற்கையான முறையில் வாடகைத் தாயாக ஒருவர் இருப்பதை இந்திய சட்டம் அனுமதிப்பதில்லை. சொல்லப்போனால் இப்படி வாடகைத்தாயாக இருப்பது சட்டத்துக்கு புறம்பான செயல்.

இரண்டாவது முறைதான் Host surrogacy. இதை Gestational Surrogacy என்றும் சொல்கிறார்கள். இந்த முறையில் ஒரு கரு (embryo) ஐ வி எஃப் முறையில் உருவாக்கப்பட்டு, ஒரு வாடகைத் தாயின் வயிற்றில் செலுத்தப்படும். அக்கரு வளர்ந்து குழந்தையாக பெற்றெடுக்கப்படும். இந்தியாவில் சட்டப்பூர்வமாக இந்த முறைக்கு மட்டுமே அனுமதியுண்டு.

விவாதிக்கப்படும் பிரச்னை:

வாடகைத் தாய் என்கிற விஷயத்தை எளிதில் விளக்கிவிட முடிகிறது. ஆனால் எதார்த்தத்தில் அது மிகப்பெரிய பிரச்னையாகவே தொடர்கிறது. பல நாடுகள் வாடகைத் தாய் திட்டம் இயற்கைக்கு முரணானது என இன்று வரை அனுமதிப்பதில்லை.

அனுமதிக்கும் மற்ற நாடுகளும் பல வகையான வாடகைத் தாய் திட்டங்களை வகுத்துள்ளன. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அல்லது உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றங்களே வாடகைத் தாய் திட்டத்தை கட்டுப்படுத்துகின்றன.

சட்டப்படி வணிக ரீதியிலான வாடகைத் தாய்மைக்கு இந்தியாவில் இந்த ஆண்டு முதல் அனுமதி கொடுக்கப்பட்டாலும், எந்த ஒரு சட்டமும் நெறிமுறைப்படுத்துவதில்லை. வெறுமனே ஐ சி எம் ஆர் அமைப்பின் வரையறைகள் & வழிகாட்டு நெறிமுறைகள் மட்டுமே இருக்கின்றன.

இருப்பினும் இந்தியாவில் வாடகைத் தாய் தொடர்பாக பல சட்ட ரீதியிலான, மன ரீதியிலான பிரச்னைகள் எழுவதைப் பார்க்கலாம்.

வாடகைத் தாய்களாகச் செல்லும் பெண்களுக்கு சட்டத்தில் என்ன மாதிரியான பாதுகாப்புகள் இருக்கின்றன அல்லது உரிமைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது அடுத்த பெரிய கேள்வியாக எழுகிறது.

ஏழை தேசங்களில் அல்லது ஏழை குடும்பங்களில் வாழும் பெண்கள் வாடகைத் தாயாக சுரண்டப்படுவது ஒரு முக்கியப் பிரச்னை. இதுபோல வாடகைத் தாய்மார்களின் பிரச்னையை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

பிற பிரச்னைகள் என்னென்ன?

வாடகைத் தாயாக இருக்கும் பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு போன்ற விஷயங்களைத் தாண்டி, இந்தியாவிலேயே வணிக ரீதியில் வாடகைத் தாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடகைத் தாய், தான் சுமக்கும் குழந்தையைப் பெற்றெடுத்த உடன் அதை உரியவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றுவிடுகிறார். ஆனால் குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பது, மரபணு ரீதியில் பல வேறுபாடுகள் இருப்பது, குழந்தையின் செல்களைப் பாதுகாக்கும் மெம்பரேன் பாதிக்கப்படுவது என பிறக்கும் குழந்தைகளுக்கே பல பிரச்னைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு பெண் வாடகைத் தாயாக இருக்க ஒப்புக் கொண்டால் அதை இந்திய சமூகம் கொச்சையாகப் பார்க்கும் எதார்த்தத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதுவும் இளம் பெண்களாக, திருமணம் ஆகாதவராக அல்லது திருமணமாகி பல காரணங்களால் அதுவரை குழந்தை பெற்றுக் கொள்ளாதவராக இருந்தால், வாடகைத் தாயாக இருக்கும் பெண்கள் இன்னும் மோசமாக விமர்சிக்கப்படுவார்.

புதிய மசோதா

கடந்த 2016ஆம் ஆண்டு வாடகைத் தாய் மசோதா இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கவில்லை.

அதில் வணிக ரீதியிலான வாடகைத் தாய் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கரு அல்லது கரு முட்டை கொடுப்பவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் (அதை நிரூபித்துவிட்டு) மட்டுமே வாடகைத் தாய் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சட்டத்தில் லிவ் இன் முறையில் வாழும் இணைகள், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்பவர்கள், ஓரு பால் ஈர்ப்பாளர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல திருமணம் செய்து கொள்ளாத பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் வாடகைத் தாயாக இருக்கக் கூடாது என்றும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாடகைத்தாய் தொடர்பான பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டம் இல்லாதது இந்த முறையைச் சுற்றியுள்ள மிக முக்கியமான சட்ட சிக்கல்களில் ஒன்றாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?