உலகிலேயே மிகச் சிறிய மர ஸ்பூன் - கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்! World's Smallest Wooden Spoon
இந்தியா

உலகிலேயே மிகச் சிறிய மர ஸ்பூன் - கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

வித்தியாசமாக உலகின் மிகச் சிறிய மரக்கரண்டி ஒன்றை செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரைச் சேர்ந்த நபர்.

Antony Ajay R

இந்தியா உணவுப் பழக்கத்துக்கும் சமையலுக்கும் புகழ் பெற்ற நாடு. ஏன் சமையல் கருவிகளுக்கும் கூட.

காஷ்மீர் முதல் குமரி வரை பலவகையான உணவுகளை சமைக்க பல வகையான கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் மக்கள்.

மண் பானையையும் மரக் கரண்டியையும் பயன்படுத்துவது நம் கலாச்சாரம் என்றாலும் நவீன யுகத்தின் நான்ஸ்டிக் கரண்டி வரை நம் சமையல் அறையில் இருக்கத் தான் செய்கிறது.

இதில் வித்தியாசமாக உலகின் மிகச் சிறிய மரக்கரண்டி ஒன்றை செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரைச் சேர்ந்த நபர்.

2 மில்லிமீட்டர் நீளம் உள்ள இந்த ஸ்பூனைக் கொண்டு இரண்டு சர்கரைக் கட்டிகளைக் கூட தூக்க முடியாது.

நவ்ரதன் ப்ரஜபதி என்ற கலைஞர் தான் இந்த ஸ்பூனை செய்துள்ளார்.

கின்னஸ் சாதனைப் படைத்த பின்னரான உணர்வை அவர், "உலகின் மிகச் சிறந்த கிரீடம் என் தலையில் இருப்பது போல உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும், சிறிய பொருட்கள் செய்யும் மினியேச்சர் கலையில் தீவிரமாக செயல்பட்டு ஒரு மியூசியம் அமைக்க வேண்டும் என்பது அவரது கனவாம்.

பிரபலமான மனிதர்களின் மினியேச்சர் சிலைகள் செய்வதன் மூலம் பிரபலமடைந்திருக்கிறார் ப்ரஜபதி.

பகவான் மகாவீரர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உள்ளிட்ட நபர்களின் சிலைகளை பென்சில் முனையில் செதுக்கிய போது சமூக வலைத்தளங்களில் வைரலானார்.

2006ம் ஆண்டு மிகச் சிறிய லாந்தர் விளக்கை உருவாக்கி லிம்கா உலக சாதனைகளில் இடம் பிடித்தார் நவ்ரதன் ப்ரஜபர்தி.

சிறிய மர ஸ்பூனுக்கான உலக சாதனை இதற்கு முன்னர் கௌரிசங்கர் கும்மதிதலா என்ற தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் வைத்திருந்தார். இவர் 2021ம் ஆண்டு 4.5 மில்லி மீட்டர் நீளமுள்ள ஸ்பூனை வடிவமைத்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?