பழங்கால கிரீஸ்  NS
Long Read

போர், பெண்கள் : பழங்கால கிரீஸ் குறித்த அதிர வைக்கும் 30 உண்மைகள் - Wow Facts!

கிரேக்க கலாச்சாரத்தில் ஒரு புகழ்பெற்ற Hetaeraவாக இருந்த ரொடொபிஸ் என்கிற பெண்மணி குளித்துக் கொண்டிருந்த போது, அவர் அணிந்திருந்த காலணியை ஒரு கழுகு எடுத்துச் சென்று எகிப்த் நாட்டின் பாரோ மன்னன் கையில் கொண்டு சேர்த்தது.

NewsSense Editorial Team

உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் கிரீஸும் ஒன்று. கிரீஸ் நாடு மற்றும் அந்நாட்டு மக்கள் குறித்த சில சுவாரஸ்ய விஷயங்கள் இதோ

1. யோ யோ பொம்மை

கி.மு. 440ஆம் ஆண்டு வாக்கில் உலகிலேயே மிகப் பழமையான பொம்மைகளில் ஒன்றாகக் கருதப்படும் யோ யோ பொம்மையை கிரீஸ் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. மரம், உலோகம், வண்ணம் பூசப்பட்ட டெராகோட்டா டிஸ்குகளைப் பயன்படுத்தி, கிரீஸ் கடவுளர்கள் வடிவில் யோ யோ பொம்மைகள் தயாரிக்கப்பட்டனவாம்.

2. உலகின் பழமையான எழுத்து வடிவங்கள்

உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று கிரேக்கம். இன்று நாம் பயன்படுத்தும் பல ஆங்கில சொற்களின் வேர்ச்சொல் இந்த கிரேக்க மொழியில் இருந்து வந்தது தான்.

இந்த மொழிக்கான எழுத்துகள் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே உலக அளவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அல்லது தொன்மையான எழுத்துகளில் கிரேக்கமும் ஒன்று.

3. God of Wine

நெருப்பில் இருந்து பிறந்ததாகக் கூறப்படும் டையோனைசஸ் (Dionysus) கடவுள், ஒரு காலத்தில் கிரீஸ் மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்டவர். இவரை ஒயின் கடவுள் என்றும் அழைக்கிறார்கள்.

திராட்சைக் கடவுள், மகசூல் கடவுள், கருவுற வைக்கும் கடவுள் என்றெல்லாம் போற்றி வணங்கியுள்ளார்களாம்.

4. குழியில் தள்ளப்பட்ட குழந்தைகள்

ஸ்பார்டன்ஸ் வழக்கப்படி, பலவீனமான ஆண் குழந்தைகள் ஆழமான குழிக்குள் தள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதை கிரேக்க வரலாற்று ஆய்வாளர் ப்ளூடார்ச் (Plutarch) கூறியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் இப்போதைய அறிவியல் அறிஞர்கள் அப்படி ஒரு வழக்கம் கடைபிடிக்கப்படவில்லை என்கிறார்கள்.

5. பல கடவுளர்கள்

கிரேக்க புராணங்கள் படி, Zeus என்கிற கடவுளே பெரிய கடவுளாகக் கருதப்பட்டார். ஆனால் கிரேக்கத்தில் பல கடவுள் வழிபாட்டு முறை புழக்கத்தில் இருந்தது.

ஆக henotheism என்றழைக்கப்படும் முறையில் பலரும் பல கடவுளர்களை வழிபடும் கலாச்சாரத்தை கிரேக்கர்கள் பின்பற்றினர்.

6. சொதப்புவதில் மன்னர்கள்

கிரேக்கத்தில் ஆகச் சிறந்த வீரர்கள், மனிதர்கள் கூட மிகப்பெரிய சொதப்பலான காரியங்களைச் செய்திருக்கிறார்களாம். இதில் கடவுளர்களும் அடக்கம்.

உதாரணமாக, ஏதோ ஒரு வாக்குவாதத்தினால், அச்சிலெஸ் (Achilles) தன் நண்பர்கள் கூட்டத்தை விட்டு டிரோஜன் போருக்கு மத்தியிலேயே வெளியேறினார் என்கிறது டிரைவ்பீடியா வலைதளம்.

7. ருசியற்ற உணவு

பழங்கால கிரேக்கத்தில் பிளாக் க்ரூயல் என்கிற பெயரில் பருப்புகள் மற்றும் மாட்டு ரத்தம் கலந்து ஒரு வகையான உணவு தயாரிக்கப்பட்டது.

அது சுவையற்றதாக இருந்தது. ஒரு உண்மையான ஸ்பார்டனால் தான் இந்த உணவை தினமும் சாப்பிட முடியும் என டிரோல் செய்யும் அளவுக்கு அவர்கள் உணவு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

8. Hetaeras

ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படவில்லை. பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக இருந்தனர். ஆனால் சில பெண்கள் தங்கள் உரிமைகளை சுயாதீனமாக நிலைநாட்டிக் கொண்டனர் அவர்களை Hetaeras என்று அழைத்தனர்.

Hetaeras பெண்கள், ஒரு சில பணக்கார ஆண்களோடு மட்டும் உறவில் இருக்கும் பாலியல் தொழிலாளியாம். இப்படி hetaeras ஆக வர, சிறு வயதில் இருந்தே தனிப் பள்ளியில் படிக்க வேண்டுமாம்.

9. சற்றே படுத்தபடி சாப்பிடுவது

கிரேக்கர்கள் சற்றே படுத்தபடி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இப்படி சற்றே படுத்தபடி சாப்பிடும் பழக்கம் கிமு 7ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு பிற்காலத்தில் ரோமானியர்களால் கடைபிடிக்கப்பட்டது என்கிறார்கள்.

ஆண்கள் மட்டுமே இப்படி படுத்தமேனிக்கு சாப்பிட அனுமதி உண்டாம். பெண்கள் கட்டாயம் உட்கார்ந்து மட்டுமே சாப்பிட வேண்டும்.

10. சுத்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை

பழங்கால கிரேக்கத்தில் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வீட்டுச் சுவர்களில் கூட, இறைச்சி சமைத்து ஏற்பட்ட கரும்புகை அடித்து சுவர்கள் கருத்து இருந்தது என பல வலைதளங்கள் சொல்கின்றன. எனவே ஒரு சராசரி கிரேக்கரின் வீட்டுச் சுவர்கள் எப்போதும் கருப்படித்து இருக்குமாம்.

11. ஸ்பார்டன் குழந்தைகள்

ஸ்பார்டன் பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வர்களாம். 7 வயதிலேயே ராணுவப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் குழந்தைகள், 12 வயது வரை நிர்வாணமாகத் திரிவராம்.

அவர்களுக்கான உணவை அவர்களே தேடிக் கொள்ள வேண்டுமாம். அதே நேரத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், வால் வீச்சு, வேல் வீச்சில் தேர்ச்சி பெற வேண்டுமாம்.

12. ஒலிம்பிக்கில் தடை செய்யப்பட்ட பெண்கள்

பழங்கால கிரேக்கத்தில் பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இரண்டாம் தரக் குடிமகன்களாக பெண்கள் நடத்தப்பட்டது, நீண்ட காலப் பயிற்சி காரணமாக பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்கிறார்கள்.

13. பார்த்து பார்த்து சமைக்கும் சாப்பாடுக்கு நோ

ஸ்பார்டன் குடும்பங்களில், பசிக்குச் சாப்பிடுவது மட்டுமே இருந்தது. பார்த்து பார்த்து உப்பு, புளி, மிளகாய், இனிப்பு சேர்க்கும் உணவுகளுக்கு நோ கூறினர்.

தானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு, ஒயினோடு பார்லி சாப்பிடுவது, ஆட்டுப் பாலில் செய்யப்பட்ட சீஸ் போன்றவைகளை உணவாக எடுத்துக் கொண்டனர்.

14. ஓய்வு & பொழுது போக்கு எல்லாம் ஆண்களுக்கு மட்டுமே

பழங்கால கிரேக்கத்தில், ஆண்கள் மட்டுமே இசை, நடனம் போன்ற பொழுது போக்குகளைக் கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். பெண்களுக்கு நோ சொன்னது கிரேக்க கலாச்சாரம்.

15. போர் உடை

ஒரு போருக்குச் செல்வதற்கு முன் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், மார்பை பாதுகாக்கும் கவசம், தலையைப் பாதுகாக்கும் தலைக்கவசம், கால்களைப் பாதுகாக்கும் ஒரு ராட்சத காலணி, கையில் ஒரு பெரிய கேடயத்தோடு போருக்குச் சென்றனர்.

16. ஒலிம்பிக் ட்ரூஸ்

பழங்கால கிரீஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் உலக அளவில் பலரையும் ஈர்த்தது. பல நாட்டு வீரர்களும் தங்களின் நாட்காட்டியையே ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுந்தாற் போல் வடிவமைத்துக் கொண்டனர்.

கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் எந்தவித போர் நடவடிக்கைகளும் நடக்காமல் இருக்க, போர் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன அல்லது போர் நடவடிக்கைகள் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அதைத் தான் ஒலிம்பிக் ட்ரூஸ் என்கிறார்கள்.

17. சேக்ரட் பேண்ட் ஆஃப் தெப்ஸ் (Sacred Band of Thebes)

தோல்வியே காணாத ஸ்பார்டன்கள் தைரியமிக்கவர்களாகவும், வீரம் செறிந்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் அதே ஸ்பார்டன்கள் சேக்ரட் பேண்ட் ஆஃப் தெப்ஸ் என்பவர்களால் கிமு 376ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற லுக்ட்ரா போரில் தோற்கடிக்கப்பட்டனர்.

18. சின்டிரெல்லா கதையின் கரு ரொடொபிஸ்

கிரேக்க கலாச்சாரத்தில் ஒரு புகழ்பெற்ற Hetaeraவாக இருந்த ரொடொபிஸ் என்கிற பெண்மணி குளித்துக் கொண்டிருந்த போது, அவர் அணிந்திருந்த காலணியை ஒரு கழுகு எடுத்துச் சென்று எகிப்த் நாட்டின் பாரோ மன்னன் கையில் கொண்டு சேர்த்தது. அந்த மன்னன் அவளைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் செய்து கொள்ள, Hetaera பெண் சட்டென எகிப்தின் மகாராணியானார்.

19. பெண்கள் வெறும் ஒரு பொருள்

அந்த கால கிரேக்க பெண்களுக்கு உரிமைகள் ஏதும் இல்லை. பெரிய அளவில் கணவனையே சார்ந்து இருக்க வேண்டி வந்தது. ஆணின் வீட்டில் இருக்கும் பல பொருட்களில் பெண்ணும் ஒன்று என்கிற அளவிலேயே பெண்கள் மதிக்கப்பட்டனர். அவர்கள் வெளியே செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை.

20. நல்ல கூலி

உலகின் மற்ற நாகரிகங்களோடு ஒப்பிடுகையில் பண்டைய காலத்து கிரேக்கர்கள் ஒவ்வொரு மாதமும் நல்ல சம்பளம் பெற்றனர். கிமு 4 & 5ஆம் நூற்றாண்டில் உலகின் செழிப்பான நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது கிரேக்கம்.

உதாரணத்துக்கு அந்த காலத்தில் ஒரு கிரேக்கர் சராசரியாக 12 கிலோ கோதுமையை சம்பளமாகப் பெற்றார். அதே காலத்தில் ரோமானியர்கள் சராசரியாக 3.75 கிலோ கோதுமை மட்டுமே சம்பளமாகப் பெற்றனர்.

21. கிரேக்க பெண்கள் vs ஸ்பார்டா பெண்கள்

கிரேக்க பெண்கள் அடிமை போல் நடத்தப்பட்டனர். ஆனால் ஸ்பார்டா பெண்கள் விளையாட, தங்கள் பெயரில் நிலம் வாங்க, படிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தான் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டி இருந்தது.

22. ஸ்பார்டன்களின் திருமண வாழ்கை

ஸ்பார்டாவின் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தான் அதிகமாக இருந்தது. ஆனால் பல திருமணங்களும் பெயரளவில் செய்யப்பட்டவை. ஆண்கள் பல பெண்களோடு உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய உடன் திருமணம் செய்து வைக்க ஒரு அமைப்பே இயங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

23. உப்பின் அருமை அறிந்திருந்த கிரேக்கம்

ரோமானியர்களைப் போல, கிரேக்கர்கள் உப்பின் அருமைகளை அறிந்து வைத்திருந்தனர். உப்பை வைத்து அடிமை வியாபாரம் செய்தனர். அதே போல தங்களோடு உப்பைச் சாப்பிடாதவர்களை நம்பக் கூடாது என்கிற பழமொழியில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கிரேக்கர்கள் வெறுமனே வியாபாரத்தைத் தாண்டி, உப்பு & விலங்குக் கொழுப்பு, சாம்பளைப் பயன்படுத்தி சோப்புகளைத் தயாரித்தனர்.

24. கைக் கொடுத்தல் (Shaking Hands):

இன்று நாம் முதல்முறையாக பார்க்கும் ஒருவரை அல்லது சம்பிரதாயமாக ஒருவரை வரவேற்கும் போது அவர்களுக்கு கைகொடுக்து வாழ்த்தி வரவேற்கிறோம் இல்லையா? அதை கிரேக்கர்கள் தான் கண்டுபிடித்தார்கள் என சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

பல கிரேக்க ஓவியங்கள், சிலைகள் போன்ற கலைப் படைப்புகளில் கைகொடுப்பதைப் பார்க்க முடிகிறது.

25. கிரேக்க பெண்கள் ஃபேஷன் சிந்தனை கொண்டவர்கள்

இன்று கண்களுக்கு மேல் இருக்கும் இரு புருவங்களும் ஒரே புருவம் போல் மாற்றிக் கொள்வதை "யுனிப்ரோ" என்கிறார்கள். இந்த யுனிப்ரோ டிரெண்டை எல்லாம் பழங்காலத்து கிரேக்க பெண்கள் ஏற்கனவே வைத்திருந்தார்கள். அதற்கு கரும்புகை, கருப்பு மை பவுடர், ஆட்டு முடி போன்றவைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

26. மதிய குட்டித் தூக்கம்

பண்டைய காலத்து கிரேக்க மக்கள், மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது உடல் நலத்துக்கு நல்லது என நம்பினர். அதை அவர்கள் வழக்கத்திலும் கடைபிடித்து வந்தனர்.

குறிப்பாக கோடைக் காலங்களில் இந்த குட்டித் தூக்கத்தை பெரிய அளவில் கடைப்பிடித்தனர். இந்த மதிய குட்டித் தூக்கத்துக்குப் பிறகு, எதையாவது சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

27. Idiot - சொல்லின் சொந்தக்காரர்கள்

idiōtēs என்கிற கிரேக்க சொல்லில் இருந்து தான் idiot என்கிற சொல் வந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இந்த சொல் அரசியலில் இருந்து விலகி இருப்பவரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.

சுருக்கமாக தனியாக இருக்கும் நபர் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இன்று முட்டாள்களைக் குறிக்கும் சொல்லாக idiot மாறிவிட்டது.

28. உலகுக்கு இசை கொடுத்தவர்கள்

சண்டைக்கு வர வேண்டாம், இசையையே கொடுத்தவர்கள் என்று பொருளல்ல. "music" என்கிற சொல்லைக் கொடுத்தவர்கள் கிரேக்கர்கள் தான். Muses (இந்த சொல் கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கலைகளின் கடவுளைக் குறிக்கும்) என்கிற சொல்லில் இருந்து தான் இன்றைய Music என்கிற சொல் வந்ததாம்.

29. ஆப்பிள் எரிந்து காதலை அறிவித்தல்

எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்த ஆப்பிளைக் கொண்டு அடித்து சொல்லலாமாம். இதை ப்ரோபொஸ் செய்யும் வழியாகவும் வைத்திருந்தார்களாம். வாழ்நாள் முழுக்க பெரும் செல்வத்தோடு நன்றாக வாழ வேண்டும் என ஆசிர்வதிக்கும் விதத்தில், திருமணமான புது தம்பதிகள் மீதும் ஆப்பிள் வீசி இருக்கிறார்கள்.

30. பானைத் தொப்பைக்காரர்கள்

இன்று புகைப்படங்கள் & காணொளிகளில் பார்ப்பது போல சிக்ஸ் பேக்கைத் தான் அனைவரும் வைத்திருந்தார்கள் என சில பூமர் அங்கில்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே கிரேக்கர்கள் மத்தியிலேயே பானைத் தொப்பைக் கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். சொல்லப் போனால் அப்படி பானைத் தொப்பை கொண்ட பலரும் கிரேக்கத்தில் நல்ல தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்கின்றன சில வலைதளங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?