நியூசிலாந்தில் மட்டுமே காணப்படக் கூடிய கிவி பறவை பற்றி பலருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருக்கலாம்.
உலகில் இருக்கும் சில பறக்காத பறவைகளில் கிவியும் ஒன்று. கோழி அளவு இருக்கும் இந்த பறவைகள்,பழுப்பு நிற முடியுடன் காணப்படும்.
இதன் இறக்கைகளை சாதாரணமாக பார்க்க முடியாது ஏனெனில் எந்த விஷயத்துக்குமே தேவைப்படாத அவை பரிணாம வளர்ச்சியில் மிகவும் சிறியதாக மாறிவிட்டன.
இரவு நேர வேட்டையாடிகளான இந்த பறவைக்கு தேவையான இரை நியூசிலாந்து காடுகள் முழுவதும் மண்ணில் கொட்டிக்கிடக்கின்றன.
அதன் நீளமான அலகை பயன்படுத்தி மண்ணில் புதைந்திருக்கும் புழுக்களை பிடித்து உண்ணும்.
பெரும்பாலும் மீசை போல வாயை சுற்றியிருக்கும் மயிர் மற்றும் நுகர்தலின் மூலமே உணவை கண்டறிகிறது.
அலகின் நுனியில் மூக்குதுவாரம் இருக்கும் ஒரே பறவை கிவி மட்டும் தான்.
இதனால் இதன் கண்களையும் இந்த பறவைகள் உபயோகிப்பது இல்லை. கிவி பறவைகளில் 3ல் 2க்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது.
இன்னும் சில நூறு ஆண்டுகளில் கிவியின் கண்களும் காணாமல் போகலாம் என்கின்றனர் உயிரியலாளர்கள். தேவைப்படாத உறுப்புக்காக ஏன் ஆற்றல் செலவாக வேண்டும்? என்பதே பரிணாமத்தின் கேள்வி!
மொத்தமாக பிடௌன் கிவி, லிட்டில் ஸ்பாட்டட் கிவி, கிரேட் ஸ்பாட்டட் கவி, ரோவி, டோகேகா என 5 வகை கிவி பறவைகள் இருக்கின்றன.
பொதுவாக பறவைகளுக்கு லேசான எலும்புகள் தான் இருக்கும். ஆனால் கிவி பறவைக்கு மச்சையுடன் கூடிய வலிமையான எலும்புகள் உள்ளன.
இதனால் உடல் எடை அதிகமாக இருக்கும் மற்றும் அவற்றால் வேகமாக ஓடவும் முடியும்.
கிவி பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ஜோடியை மட்டுமே பெற்றிருக்கும்.
பெண் கிவி மிக மிக கஷ்டப்பட்டே முட்டையிடும். ஏனெனில் அதன் எடையில் 15% உள்ள பெரிய முட்டைகள் இடவேண்டியிருக்கும்.
மிகப் பெரிய முட்டையை இடும் பறவையான ஆஸ்ட்ரிச் முட்டை அதன் எடையில் வெறும் 2% தான்.
மாஸ்டர் படத்தில் கூட விஜய் சேதுபதி ஆஸ்ட்ரிச் கஷ்டப்பட்டு முட்டையிடுவதாக வசனம் பேசியிருப்பார்... ஆனால் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டிய பறவை கிவி தான்.
முட்டையிட்ட பெண் பறவைக்கு உடல் காயங்கள் ஆறவே வெகுநாட்கள் எடுத்துக்கொள்ளும்.
அதனால் 80 நாட்கள் வரை ஆண் பறவையே முட்டையை அடைகாக்கிறது.
பொரிக்கும் போதே குஞ்சுகள் முழுவதுமாக ரோமம் வளர்ந்து பொரிக்கின்றன.
பிறந்த குழந்தைகளுக்கு மற்ற பறவைகளைப் போல கிவி உணவு ஊட்டுவது இல்லை ஏனெனில் முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவே முதல் 10 நாட்களுக்கு குஞ்சுக்கு உணவாகிறது.
வளர்ந்த குஞ்சுகள் 1 ஆண்டு வரை பெற்றோரின் கூட்டில் (பொந்து) இருக்கின்றன.
டொகேகா மற்றும் ரோவி வகை கிவிகள் பெற்றோருடன் அதிக காலம் இருந்து அடுத்த சகோதரர்கள் வளர உதவுகின்றன.
பிறக்கும் கிவி பறவைகளில் 90 விழுக்காடு சிறுவயதிலேயே இறந்துவிடுகின்றன.
முதல் 6 மதாங்களில் மரநாய் மற்றும் பூனைகளிடம் இருந்து தப்பும் குஞ்சுகளே தொடர்ந்து உயிர்வாழ முடியும்.
இப்போது உலகில் 60000க்கும் மேலான கிவி பறவைகள் இருக்கின்றன. மனிதர்களின் பராமரிப்பு இல்லை என்றால் இந்த கிவி பறவைகள் இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாக அழிந்துவிடும்.
ஏனெனில் பறக்கத் தெரியாத இந்த பறவைகளிடம் தற்காப்பு செயல்பாடுகள் என எதுவுமில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust