நார்வே முதல் ஸ்வீடன் வரை: நள்ளிரவிலும் சூரியன் மறையாத நாடுகள் குறித்து தெரியுமா? Twitter
அறிவியல்

நார்வே முதல் ஸ்வீடன் வரை: நள்ளிரவிலும் சூரியன் மறையாத நாடுகள் குறித்து தெரியுமா?

ஒரு நாளில் சூரியன் மறையாமலே கூட இருக்கலாம் என்பது தமிழ்நாட்டில் வாழும் நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் உலகின் சில பகுதிகளில் 70 நாட்களுக்கும் மேலாக கூட சூரியன் மறையாமல் இருக்குமாம்.

Antony Ajay R

ஒரு நாளுக்கு 24 மணி நேரம். பகல், இரவு என இரண்டு சட்டங்களுக்குள் அடக்கினால் 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் இருக்கும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஒரு நாளில் சூரியன் மறையாமலே கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் வாழும் நமக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் உலகின் சில பகுதிகளில் 70 நாட்களுக்கும் மேலாக கூட சூரியன் மறையாமல் இருக்கும்.

இது உங்களுக்கு சுவாரஸ்யமான அல்லது குழப்பமான தகவலாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அந்த இடங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

நார்வே

நார்வே பூமியின் ஆர்டிக் வட்டம் எனும் வட துருவ பகுதியில் இருக்கிறது. இங்கு மே மாதம் முதல் ஜூலை இறுதி வரையில் சூரியன் மறைவதில்லை. இந்த நிகழ்வுக்கு மிட் நைட் சன் என்று பெயர். 

குறிப்பாக நார்வேயின் சால்வாபார்ட் பகுதியில் ஆகஸ்ட் 10 முதல் 23 வரை தொடர்ந்து சூரியன் உச்சத்தில் இருக்கும். இந்த நாட்களில் அங்கு சென்றால் மஞ்சள் வெயில் மாலையிலே என பாடிக்கொண்டே திரியலாம்.

நுனாவுட், கனடா

கனடாவின் வடமேற்கு பகுதியில் ஆட்ரிக் வட்டத்தில் இருந்து 2 டிகிரி விலகியிருக்கிறது நுனாவுட். இங்கும் இரண்டு மாதங்களுக்கு சூரியன் மறையாமல் இருக்கும். 

குளிர்காலத்தில் தொடர்ந்து 30 நாட்களுக்கு இருள் நிலவும்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து ஒரு அதிசய நாடு தான். ஐரோப்பாவில் இருக்கும் இரண்டாவது பெரிய தீவு இதுவாகும். இங்கும் சம்மரில் வானம் தெளிவாக நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். 

ஜூன் மாதத்தில் சூரியன் மறையவே மறையாது. இதை ஏன் அதிசய நாடு எனக் கூறினேன் என்றால், இங்கு கொசுக்களே கிடையாது.

பாரோ, அலாஸ்கா

பனி மூடிய மலைகளுக்கு புகழ்பெற்ற இந்த நாட்டில் மே முதல் ஜூலை மாதங்களில் சூரியன் மறையவே மறையாது. இதற்கு ஈடாக நவம்பர் மாதம் முழுவதும் சூரியன் உதிக்கவே உதிக்காது. 

இந்த நீண்ட இரவை துருவ இரவு அல்லது போலார் நைட் என்கின்றனர். 

கடுமையான குளிரும் இருளும் அந்த மக்களை வாட்டி எடுத்துவிடும்.

பின்லாந்து

ஆயிரக்கணக்கான ஏரிகளும் தீவுகளும் உள்ள பின்லாந்து ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் கிட்டத்தட்ட 73 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும். 

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் தான் மதிப்புமிக்க பொருளாக இருக்கும். இங்குள்ள மக்களும் கோடைக்காலத்தில் குறைவாகவும் குளிர்காலத்தில் அதிகமாகவும் உறங்குகின்றனர். 

சுவீடன் 

மே முதல் ஆகஸ்ட் வரை சுவீடனில் நள்ளிரவு வரை சூரியன் இருக்கும். பின்னர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் உதித்துவிடும். தொடர்ச்சியாக 6 மாதம் வரை அதிக நேரம் சூரிய வெளிச்சம் நிலவும். 

சூரியன் இருக்கும் ஒவ்வொரு பகலும் நீளமானதாக இருப்பதனால் இங்கு எல்லா நேரமும் வெளியில் உலாவிக்கொண்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம்.

இந்த மாதிரியான துருவப்பகுதிகளுக்கு செல்லும் போது வடதுருவ ஒளியைக் காணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கலாம். 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?