Phobia pexels
அறிவியல்

அட இதுக்கெல்லாமா பயப்படுவாங்க? - 5 வினோத Phobia -க்கள்

Keerthanaa R

தெனாலி படத்தில், "எல்லாம் சிவ மயம்" என்று சொல்வதை போல "எல்லாம் பய மயம்" என்று சொல்லியிருப்பார் கமல். அதை விளக்கும்படி, எண்ணியே பார்க்கமுடியாத விஷயங்களுக்கெல்லாம் அவருக்கு பயம் இருக்கும்.


அப்படி இதற்கெல்லாமா பயப்படுவார்கள் என்பது போன்ற, உலகில் இருக்கும் வினோதமான ஃபோபியாக்களின் பட்டியல் இதோ

Trypophobia

1. டிரைப்போ ஃபோபியா (Trypophobia)

இது, ஒழுங்கற்ற வடிவங்கள் அல்லது ஓட்டைகளைக் கண்டால் ஏற்படும் பயம். அமெரிக்க மனநல சங்கத்தின் நோயறிதல் மற்றும் புள்ளிவிவர கையேட்டில் இதை ஒரு நோயாக கண்டறியப்படாவிட்டாலும், பலரும் தங்களுக்கு இதுபோன்ற ஒரு ஃபோபியா இருப்பதாக கூறுகின்றனர்.


இது ஒரு விதமான பயம் என்பதையும் தாண்டி, இந்த வடிவங்கள் ஓட்டைகளை கண்டால் ஏற்படும் வெறுப்பு என்கிறார்கள் இவர்கள்

Dysmorphophobia

2.டிஸ்மார்ஃபோ ஃபோபியா (Dysmorphophobia)


இது, மனிதர்கள் இயல்பாகவே தங்கள் உடலில், அல்லது தோற்றத்தில் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் தன்மை. நிஜத்தில் அவர்களது தோற்றத்தில் எந்த ஒரு குறையும் இல்லை என்றாலும், இவர்கள் இப்படி மன ரீதியாக நினைத்துக்கொள்வார்களாம்.


மனதிற்கு சிகிச்சை பெற்றால் போதும் !

hexakosioihexekontahexaphobia

3.ஹெக்சாகோசியோஹெக்சேகோன்டாஹெக்சாஃ போபியா (hexakosioihexekontahexaphobia)


முழுதாக ஒரே முயற்சியில் உச்சரிக்கக் கூட முடியாத இந்த ஃபோபியா, 666 என்ற எண்ணைக் கண்டால் வரும் பயம்.

இந்த 666 ஐ பேய்களின் நம்பர் என்று தான் நமக்கு சிறுவயது முதல் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது சாத்தனின் நம்பர் என்று நம்பப்படுகிறது. அந்த பயத்திற்கு பெயர் தான் இந்த hexakosioihexekontahexaphobia.

Neophobia

4.நியோஃபோபியா (Neophobia)

புதிய விஷயங்கள் குறித்த பயத்தின் பெயர் தான் நியோஃபோபியா. நியோ என்ற வார்த்தையின் அர்த்தம் புதியது என்பதாகும். இந்த பயம் உள்ளவர்கள் பெரிதும் மாற்றத்தை விரும்பாதவர்களாகவும், தங்களுக்குப் பழகிவிட்ட விஷயங்களை வைத்தே நாட்களை ஓட்டிவிடுவார்கள் என்பதும் கூற்று.

Pogonophobia

5. போகோனோஃபோபியா (Pogonophobia)


தாடிகளின் மேல் இருக்கும் வெறுப்புத்தன்மைக்கு தான் Pogonophobia என்று பெயர். கிரேக்க மொழி போகோன் என்ற வார்த்தைக்கு தாடி என்று பொருள்.


இதேபோல X-Ray, கண்ணாடி, சுத்தம் செய்தல், நிறங்கள் போன்ற விஷயங்களை குறிக்கும் ஃபோபியாக்களும் உள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?