இரவில் பூச்சிகள் விளக்கை சுற்றி பறக்க காரணம் இதுதான் - அறிவியல் என்ன சொல்கிறது?  Insects / Representation
அறிவியல்

இரவில் பூச்சிகள் விளக்கை சுற்றி பறக்க காரணம் இதுதான் - அறிவியல் என்ன சொல்கிறது?

இந்த பூச்சிகளுக்கு அப்படி வெளிச்சத்தில் என்னதான் கிடைக்கிறது? என நாம் யோசித்திருப்போம். கணிக்க முடியாத இந்த நிகழ்வுக்குன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன தெரியுமா?

Antony Ajay R

இருட்டில் நாம் மொபைலை எடுத்தாலே சுற்றி பூச்சிகள் சூழ்ந்துகொண்டு நச்சரிக்கத் தொடங்கிவிடும். ஒருமுறையாவது இந்த அசௌகரியத்தை நாம் அனுபவித்திருப்போம்.

அந்துப்பூச்சிகள், ஈசல்கள் விளக்கு வெளிச்சத்துக்கு ஈர்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. டங்ஸ்டன் விளக்குகளை உபயோகப்படுத்திய 90'ஸ் கிட்டாக நீங்கள் இருந்தால் நிச்சயம் இதன் தீவிரம் புரியும்.

இந்த பூச்சிகளுக்கு அப்படி வெளிச்சத்தில் என்னதான் கிடைக்கிறது? என நாம் யோசித்திருப்போம். கணிக்க முடியாத இந்த நிகழ்வுக்குன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன தெரியுமா?

ஒரு ஆராச்சியாளர் குழு ஏன் பூச்சிகளுக்கு வெளிச்சத்தின் மீது இப்படியொரு ஈர்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.

நீண்ட காலமாக இதற்கு சொல்லபபட்டு வந்த விளக்கம் என்னவென்றால், "இரவில் திரியும் பூச்சிகள் எல்லா வெளிச்சமும் நிலவில் இருந்து அல்லது வானியல் பொருட்களில் இருந்து வருவதாக கருதுகின்றன. இவற்றை வைத்து தான் பூச்சிகள் செல்லும் வழியைத் தீர்மானிக்கும் என்பதனால் அவை வெளிச்சத்தை சுற்றி சுற்றி வரும்" என்பதாகும்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியளாலர்கள், பூச்சிகள் செயற்கையான ஒளி வானத்தில் இருளில் இருந்து வருவதாக நினைத்துக்கொள்ளும் என்கின்றனர். இதனால் மேலும் கீழுமாக அதனை பார்க்கின்றன. பின்னர் அவற்றின் உள்ளுணர்வின் அடிப்படையில் வெளிச்சத்தை நோக்கி பறக்கின்றன.

விளக்குகளைச் சுற்றி தும்பி, பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் ஒவ்வொன்றும் என்னென்ன பாதையில் பறக்கின்றன என்பதை ஆய்வு செய்துள்ளனர்.

இதற்காக அதி நவீன கேமராக்களைப் பயன்படுத்தி பூச்சிகள் பறக்கும் பாதையின் 3டி மாடலை உருவாக்கினர்.

பகலில் பூச்சிகள் சூரியனின் நிலையை வைத்து திசையை அறிந்து சூரிய ஒளிக்கு முதுகைக் காட்டியபடிப் பறக்கும். இரவில் செயற்கை விளக்குகளுக்கு இடையில் இந்த திறனை பூச்சிகள் இழக்கின்றன.

இரவில் திறனை இழப்பது பகலிலும் பூச்சிகளின் பயணத்தை பாதிக்கிறது. செயற்கை விளக்குகளால் பூச்சிகள் அதிக அளவில் அழிந்துவருவதாக அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?