Hockey : 4வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா - பரபரப்பான போட்டியில் என்ன நடந்தது? Twitter
ஸ்போர்ட்ஸ்

Hockey : 4வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா - பரபரப்பான போட்டியில் என்ன நடந்தது?

Antony Ajay R

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் நான்காவது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது இந்திய அணி.

நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் இந்தியா - மலேசியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான இறுதிப்போட்டி நடைபெற்றது.

நேற்றையப் போட்டித் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை கோலாக மாற்றினார் ஜுக்ராஜ் சிங்.

அடுத்த 6 நிமிடத்தில் மலேசிய அணி கோல் அடிக்க, முதல் கால் பகுதி முடிவில் 1-1 என சமமான நிலை நிலவியது.

தொடர்ந்து 18 மற்றும் 28வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர்களைப் பயன்படுத்தி மலேசிய அணி கோல் அடிக்க 3-1 என முன்னிலைப் பெற்றது மலேசிய அணி.

இதனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அழுத்தத்துக்கு உள்ளானது இந்திய அணி.

32,36,37வது நிமிடங்களில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தாலும் எதுவும் கோலாக மாற்றப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

44வது நிமிடத்தில் இந்திய அணி இரண்டு முறை கோல் அடிக்க முயன்றும் முடியாமல் போனது. ஆட்டத்தின் கடைசி கால் நிமிடம் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

45வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை கோலாக மாற்றினார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங். தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே ஃபீல்டு கோல் அடித்தனர்.

இதனால் 3-3 என சமநிலையை எட்டியது ஆட்டம். அடுத்தடுத்து இரண்டு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தாலும் எதுவும் கோலாக மாற்றப்படவில்லை.

56வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து 4-3 என முன்னிலை வகித்தது. அடுத்த 4 நிமிடங்களும் மலேசியா டிஃபண்டர்கள் ஆட்டம்காண, இந்திய நேர முடிவில் இந்திய அணி வெற்றி பெற்றது.

2011, 2016 ஆசிய கோப்பைகளை இந்திய அணி வென்றிருந்தது. 2018ல் பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்துகொண்டது. இப்போது 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு தலா 3 லட்சமும், அணியின் முக்கிய பணியாளர்களுக்கு 1.5 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய அனிக்கு 1.10 கோடி பரிசுத் தொகை அறிவித்தார். வீரர்களுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் சேர்ந்து பதக்கங்களையும் வழங்கினார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?