நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தனது 46வது சதத்தை பூர்த்தி செய்தார் இந்திய வீரர் விராட் கோலி. மற்றும் சர்வதேச போட்டிகளில் 74வது சதம்.
இதன் மூலம் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை முறியடித்தவர், மற்றொரு புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
ஜனவரி 15 ஆம் தேதியில் மட்டும் இதுவரை 4 முறை சதமடித்திர்க்கிறார் கோலி.
நேற்று இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 390 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவதாக களமிறங்கிய இலங்கை அணி வெறும் 73 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம், ஒரு நாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல் அணி என்ற பெருமையை அடைந்துள்ளது இந்திய அணி.
நேற்றைய போட்டியில், அதிகபட்சமாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சதம் விளாசினர். விராட் 166 ரன்கள் குவித்தார். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்தது.
முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட்டுக்கு இது 46வது சதம். இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியை சதத்துடன் தொடங்கிய கிங் கோலி, கடைசி போட்டியையும் சதத்துடன் நிறைவு செய்திருக்கிறார்.
அந்த முதல் சதத்திலேயே பல சாதனைகளை முறியடித்திருந்த கோலி, இந்த 46வது சதம் மூலமாகவும் தனது பெயரின் பக்கத்தில் சில சாதனைகளை சேர்த்துக்கொண்டுள்ளார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இவற்றில் 8 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும்.
இன்று அடித்த சதத்தின் மூலம் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை தகர்த்துள்ளார் விராட் கோலி.
இதனால், ஜனவரி 15ஆம் தேதியை விராட் கோலி டே என அறிவிக்கக் கோரி ரசிகர்கள் ட்விட்டரில் ஆரவாரம் செய்து வருகின்றனர்
சச்சின் 20; கோலி 21
ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்
சச்சின் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் அடித்திருந்தார்.
தற்போது கோலி இலங்கைக்கு எதிராக பத்து சதங்கள் அடித்துள்ள நிலையில், ஒரே அணிக்கு எதிராக அதிக சென்சுரிக்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் விராட்.
தவிர இலங்கைக்கு எதிராக சச்சின் அடித்திருந்த 8 சதங்கள் என்ற எண்ணிக்கையை கடந்து தற்போது 10 சதங்களை தன் வசம் வைத்திருக்கிறார் கிங் கோலி!
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை இலங்கையின் மஹிலா ஜெயவர்த்தனே 12,650 ரன்கள் எடுத்திருந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அடித்த 5வது அதிகபட்ச ஸ்கோர். இந்த சாதனையும் நேற்றைய போட்டியில் கோலியால் முறியடிக்கப்பட்டது
இன்னும் 4 சதங்கள் அடித்தால், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்று கோலோச்சி நிற்பார் விராட் கோலி.
கிட்ட தட்ட மூன்று ஆண்டுகளால் அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த கோலியை விமர்சிக்காத ஆளில்லை. கிரிக்கெட் ஜாம்பவான்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அவர் மீது கண்டனங்களை தெரிவித்துவந்தனர், மற்றும் அவர் ஓய்வு பெற வேண்டும் என கருத்துகள் தெரிவித்தனர்.
ஆனால் இன்று கோலி அடுத்தடுத்து அடிக்கும் சதங்கள், அதன் மூலம் தகர்க்கும் முன்னாள் வீரர்களின் சாதனைகளை பார்த்து விமர்சித்த கூட்டமெல்லாம் வாயடைத்து நின்றிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust