MS Dhoni: சென்னை அணி கேப்டனாக 200வது மேட்சில் ’தல’ தோனி - இதுவரை படைத்த சாதனைகள் என்ன? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

MS Dhoni: சென்னை அணி கேப்டனாக 200வது மேட்சில் ’தல’ தோனி - இதுவரை படைத்த சாதனைகள் என்ன?

Keerthanaa R

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் இன்று விளையாடுகிறார் எம்எஸ் தோனி.

இதன் மூலம் ஒரு அணியை அதிக முறை வழிநடத்திய கேப்டன் என்கிற பெருமையையும் அடைகிறார்.

தவிர, ஐபிஎல்லில் இதுவரை அவர் 213 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது 8 அணிகள் அறிமுகமானது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அப்போது முதல் தோனி தான் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.

இடையில் ஓரிரு போட்டிகளுக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு சிஎஸ்கே கேப்டன்சியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தபோது ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அணி தொடர் தோல்விகளை சந்திக்க, மீண்டும் கேப்டனானார் தோனி. தொடர்ந்து இந்த சீசனிலும் அணியை தலைமை தாங்கும் தோனி, இன்று சிஎஸ்கே கேப்டனாக தனது 200வது போட்டியில், சென்னையில் களமிறங்குகிறார்.

எல் கிளாசிக்கோ என்று போற்றப்படும் சென்னை மும்பை அணிகள் போட்டி கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்தது. அதில் வென்ற அதே வெற்றிக்களிப்புடன் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் உள்ளனர் சிஎஸ்கே வீரர்கள்.

2008ஆம் ஆண்டின் சேம்பியன்களான ராஜஸ்தானும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்த பருவத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆர்ஆர் அணி , 4 புள்ளிகளுடன், பாயிண்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சென்னை அணியும் 4 புள்ளிகளுடன், 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெரும் அணி முதலிடத்துக்கு முன்னேறலாம்.

சி எஸ் கே கேப்டனாக தோனியின் சாதனைகள்

  • இதுவரை விளையாடிய 237 போட்டிகளில் 5,004 ரன்கள் எடுத்துள்ளார் தோனி.

  • ஐபிஎல்லில் 5000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர்

  • இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை இவரது தலைமையில் வென்றுள்ளது சென்னை அணி

  • அதிக ரன்கள் குவித்துள்ள ஐபிஎல் கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடம் (4,482 ரன்கள்).

  • ஐபிஎல் வரலாற்றில் 9 முறை இறுதிப்போட்டிக்கு தேர்வு

  • 13 சீசன்களில் 11 முறை பிளே ஆஃப் தேர்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?