Rachin Ravindra: சாதனைகளை உடைக்கும் இளம் சிங்கம் - இந்தியாவுக்கு எதிராக கெத்து காட்டுவாரா?
Rachin Ravindra: சாதனைகளை உடைக்கும் இளம் சிங்கம் - இந்தியாவுக்கு எதிராக கெத்து காட்டுவாரா? Twitter
ஸ்போர்ட்ஸ்

Rachin Ravindra: சாதனைகளை உடைக்கும் இளம் சிங்கம் - இந்தியாவுக்கு எதிராக கெத்து காட்டுவாரா?

Antony Ajay R

இந்தியா உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளப்போவது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.

இந்த சீசனில் ஏற்கெனவே ஒருமுறை நியூசிலாந்தை வென்றிருந்தாலும் அரை இறுதி மிகப் பெரிய சவாலாக இருக்கப்போவது உறுதி.

குறிப்பாக உலகில் உள்ள எல்லா பௌளர்களும் அஞ்சும் வீரராக அங்கு உருவாகியிருக்கிற ரச்சின் ரவீந்திரா மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறார்.

முதல் உலகக்கோப்பை சீசனில் விளையாடும் 23 வயது இளைஞருக்கு ஏன் இவ்வளவு பில்ட் அப் என நினைக்கிறீர்களா? ரச்சின் ரவீந்திரா பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

பெங்களூருவில் பிறந்தவர் ரச்சின் ரவீந்திரா. இவரது தந்தை ரவீந்திர கிருஷ்ண மூர்த்தி சாஃப்ட்வேர் இஞ்சினியர். இவர் நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டனில் குடியேறியிருக்கிறார்.

ரவீந்திர கிருஷ்ண மூர்த்தி கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவருக்கு விருப்பமான ஹீரோக்களான ராகுல் ட்ராவின், சச்சின் டெண்டுல்கர் பெயர்களை இணைத்து ரச்சின் என மகனுக்கு சூட்டியுள்ளார்.

ரச்சினின் அப்பா ஒரு கிரிக்கெட் கிளப் நடத்துகிறார். அந்த கிளப்புக்காக ஏற்கெனவே சென்னை,பெங்களூரு, அனந்தபூர், ஹைத்ராபாத், விசாகாப்பட்டினம் ஆகிய இந்திய மைதானங்களில் விளையாடியிருக்கிறார் ரச்சின்.

15 வயதிலேயே ரச்சின் 19 வயது இளைஞர்களுடன் இயல்பாக விளையாடுவாராம். எல்லாம் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியின் கோச்சிங்.

பேட்டிங் பேக்கப்பாக நியூசிலாந்து அணியால் எடுக்கப்பட்டவர், இப்போது இந்த சீசனில் அதிக ரன்குவித்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். முதல் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சேம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். முதல் உலகக்கோப்பை தொடரிலேயே 3 சதங்கள் விளாசியிருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய ஜாம்போவான்கள் 25 வயதுக்குள் செய்த சாதனைகளை அதிரடியாக முறியடித்து வருகிறார்.

தனது பெயருக்கு ஏற்றது போல உலகமே வியக்குபடி விளையாடி வருகிறார் ரச்சின். 2021ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தான் முதல்முதலாக களமிறங்கினார் ரச்சின். அப்போது பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் உலகக்கோப்பை தொடரை தனது திறமையை வெளிக்கொண்டுவரும் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் திறமையான ஸ்பின் பௌளராகவும் இருக்கிறார் ரச்சின் ரவிந்திரா.

பெங்களூருவில் பிறந்த இவருக்கு சின்ன சாமி அரங்கில் 108 ரன்கள் அடித்தபோது பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிச்சயமாக இவருக்கு ஐபிஎல் 2024ல் அதிகப்படியான போட்டி இருக்கும் என எதிர்பாக்கலாம்.

இப்போது இந்திய அணிக்கு எதிராக களமிறங்கப்போகிறார் ரச்சின். கடந்த இந்தியா-நியூசிலாந்து போட்டியில் அதிரடியாக 78 ரன்கள் விளாசியவரை ஷமி வீழ்த்தினார். ஆனால் மீண்டும் ரச்சினை நம் பௌளர்களால் வீழ்த்த முடியுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?