Rinku Singh: துப்புரவு தொழிலாளியாக இருந்த இவர் IPL ஹீரோவானது எப்படி? - நெகிழவைக்கும் கதை!
Rinku Singh: துப்புரவு தொழிலாளியாக இருந்த இவர் IPL ஹீரோவானது எப்படி? - நெகிழவைக்கும் கதை! Twitter
ஸ்போர்ட்ஸ்

Rinku Singh: துப்புரவு தொழிலாளியாக இருந்த இவர் IPL ஹீரோவானது எப்படி? - நெகிழவைக்கும் கதை!

Antony Ajay R

வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் இதற்கு அடுத்ததாக கொல்கத்தா அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக இருப்பார் ரிங்கு சிங். 

காரணம் அவர் போன மேட்சில் காட்டிய அதிரடிதான். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ் ஒரு சிங்கிள் எடுக்க பேட்டிங்குக்கு வந்தார் ரிங்கு சிங்.

அடுத்தடுத்த 5 பந்துகளை சிக்ஸருக்கு விளாசி, போட்டியை வெற்றிபெற வைத்தார். இதனால் கொல்கத்தா ரசிகர்களும் வீரர்களும் ரிங்கு சிங்கை கொண்டாடித் தீர்த்தனர். 

சச்சின், சேவாக், சுரேஷ் ரெய்னா என எல்லா கிரிக்கெட் ஜம்பவான்களும் ரிங்கு சிங்கை பாராட்டினர்.

இவ்வளவு பாராட்டையும் இப்போது அனுபவிக்கின்ற ரிங்கு சிங் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கடையில் தரையை துடைக்கும் வேலையில் சேர்ந்தார்

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகர் எனும் சிறிய ஊரில்,  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரிங்கு சிங், இன்று கிரிக்கெட் உலகமே வியந்து பார்கக்கூடிய ஆளாக உருவான  கதையைத்தான் பார்க்க போகிறோம். 

இவருடைய அப்பா ஒரு சிலிண்டர் போடும் தொழிலாளி, ரிங்குவோடு சேர்ந்து வீட்டில் மொத்தம் 5 குழந்தைகள். பெரிய குடும்பத்தை ரிங்குவின் அப்பாவால் தனி ஆளாக தாங்க முடியவில்லை. அவருக்கு ரிங்கு சிங் உதவி செய்துவந்தார். 

சிறுவனாக இருக்கும் போதே வீடு வீடாக சென்று சிலிண்டர் போட்டு வந்தார். அப்போதெல்லாம் இவருக்கு கிரிக்கெட் விளையாட நேரம் கூட கிடைக்காது. 

விளையாட சென்றதற்காக அப்பாவிடம் அடி, உதையும் அதிகமாக வாங்கியிருக்கார். அந்த நேரத்தில் அவருடைய சகோதரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

16 வயதில் இருந்தே பிரொஃபசனல் கிரிக்கெட்டராக இருந்தாலும் அவரால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. அழுக்கான, பழைய கிளவுஸ் தான் வைத்திருந்தார். இருந்தபோதும், அவருடைய விளையாட்டை ரசித்த பலர் அவருக்கு உதவினர்

அப்போதுதான் ஒரு உள்ளூர் போட்டியில் ரிங்கு சிங்கிற்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அதிரடி ஆட்டத்தினால் போட்டியில் வென்று ஒரு பைக் பரிசாக பெற்றார். 

அந்த பைக்கை அவருடைய அப்பா சிலிண்டர் விநியோகிக்க கொடுத்தார் ரிங்கு சிங். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய குடுபத்தினர் ரிங்கு சிங்குக்கு ஆதாரவளித்தார்கள். ஆனால் அவர்களிடம் பொருளாதார வசதி இல்லாததால் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல். 

என்னதான் குடும்பத்துடய ஆதரவு இருந்தாலும் பொருளாதார நெருக்கடி, குடும்ப பாரம் அவரது கனவை விட பெரியதாக இருந்தது. படிப்பில் ரிங்கு சிங் ரொம்ப சுமார். இதனால் நல்ல ஊதியம் வரும் வேலைகள் அவருக்கு கிடைக்கவில்லை. ஒரு கோச்சிங் செண்டரில், தரை துடைக்கும் வேலை (துப்புரவு பணியாளராக) சேர்ந்தார்

ஒரு கட்டத்தில் அந்த வேலையையும் விட்டுட்டு முழுவதுமாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் ரிங்கு.  உள்ளூர் போட்டிகளில் விளையாடியு ரிங்கு சிங்கின் ஸ்டைல் சுரேஷ் ரெய்னாவை நினைவுப்படுத்துவதாக எல்லாரும் பாராட்ட, சுரேஷ் ரெய்னாவுக்கும் ரிங்குவைப் பற்றி தெரிய வந்தது. 

இளம் வீரர்களை எப்போதும் ஊக்கப்படுத்தி உதவும் மனம் கொண்ட ரெய்னா ரிங்கு சிங்குக்கும் உதவிகள் செய்தார். 

ரிங்கு சிங் பற்றி ஓரளவு கிரிக்கெட் வட்டாரங்களுக்கு தெரியவர, 2017 ஐபிஎல் போட்டியில பஞ்சாப் அணிக்காக அடிப்படை தொகையான 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

அவ்வளவு பணத்தை அதுவரை அவங்களுடைய குடும்பம் பார்த்ததே இல்லை. அந்த தொகை கடன்களை சமாளிக்க உதவினாலும், கிரிக்கெட்டில் நிரந்தரமான வாய்ப்பு என்ற ஒன்று எட்டா கனியாகவே இருந்தது

எனினும் அந்த ஆண்டு முழுவதும் உத்தரபிரதேசம் அணிக்காக சிறப்பாக விளையாடினார் ரிங்கு சிங். 

2018 ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங் 80 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால எடுக்கப்பட்டார். அப்போது தான் ஊரில் நிலபுலமெல்லாம் வாங்கி அவருடைய குடும்பம் முன்னேறியது. 

ஆனால் ரிங்கு சிங் ரசிகர்களுடைய மனதை வெல்வதில் தான் முனைப்பாக இருந்தார். அதற்கான வாய்ப்பு கடந்த ஐபிஎல் சீசனில் தான் கிடைத்தது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

ரிங்கு சிங், 4,6,6,2 என 18 ரன்கள் சேர்த்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அந்த போட்டியில் தோற்றது. எனினும், ரசிகர்கள், கிரிக்கெட் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதே சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 23 பந்துகளை சந்தித்து 42 ரன்கள் குவித்தார். 

ஆனால் போன சீனனில் விட்டதை இந்த சீசனில் பிடித்தார் ரிங்கு சிங். எல்லா பக்கமும் பந்துகளை பறக்கவிட, அனைவரும் உச்சரித்த ஒரே பெயர் “ரிங்கு சிங்”

விரைவில் இவர் இந்திய அணிகாக விளையாடுவதைப் பார்ப்போமா?    

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?