சுனில் கவாஸ்கர்: அறிமுக தொடரிலேயே 774 ரன்கள் - இந்தியாவுக்கு மார்ச் 10 ஏன் முக்கியம்? Twitter
ஸ்போர்ட்ஸ்

சுனில் கவாஸ்கர்: அறிமுக தொடரிலேயே 774 ரன்கள் - இந்தியாவுக்கு மார்ச் 10 ஏன் முக்கியம்?

முதல் 10000 ரன்கள் அடித்த வீரர், முதல் 30 சதங்கள் அடித்த வீரர் என அவரது அடுத்தடுத்த சாதனைகளை அடுக்கிகொண்டு போகலாம். அடுத்த ஒரு தசாப்தத்துக்கு கிரிக்கெட் உலகம் விடாமல் உச்சரித்த பெயராக சுனில் கவாஸ்கர் இருந்தது. இன்றும் அப்படியே

Antony Ajay R

1971, மார்ச் 10 இந்திய கிரிக்கெட் வராலாற்றில் மிகவும் முக்கியமான நாளாக இடம் பிடித்திருக்கிறது.

சுனில் கவாஸ்கர் இந்தியாவுக்காக வெஸ்ட் இண்டிஸ் அணியை வென்ற நாள் இது. இந்திய கிரிக்கெட்டு என்று தனி மரியாதை கிடைத்த நாள்.

65. 67*. 116. 64. 1. 117*. 124. 220 என அறிமுக டெஸ்ட் சீரிஸிலேயே 774 ரன்களைக் குவித்த ஒரே வீரர் கவாஸ்கர் மட்டுமே. எப்படி இந்த சாதனை சாத்தியமாகி சரித்திரம் எழுதப்பட்டது எனபதைக் காணலாம்.

அந்த காலத்தில் வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் கிரிக்கெட்டின் லார்ட்களாக கருதப்பட்டனர். கேரி சோபர்ஸ், லான்ஸ் கிப்ஸ், கீத் பாய்ஸ் மற்றும் ஜாக் நோரிகா என தலை சிறந்த வீரர்களை எதிர்கொண்டார் அறிமுக பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர்.

மூன்றாவது போட்டியில் ஓப்பனராக களமிறங்கிய கவாஸ்கர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

அவரது நிதானமான பாணியை முறியடிக்க எந்த பௌலராலும் முடியவில்லை. 6வது இன்னிங்ஸிலும் சதம், அதன் பிறகும் சதம், அதன் பிறகு இரட்டை சதம் என கவாஸ்கர் ஹீரோவாக உருவானார்.

கவாஸ்கரின் வெற்றி ஒரு ஆசிய நாடான இந்தியா சாம்பியனை தோற்கடித்து தானும் இந்த ஆடுகளத்தில் முக்கியமான அணி என நிலைநிறுத்திக்கொள்ள உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் அந்த ஒரு வெற்றி கிரிக்கெட் வரலாற்றின் உச்சம் என்றே கருதினர். கவாஸ்கரை சூப்பர் ஹீரோவாக கொண்டாடினர். ஆனால் பலருக்கும் தெரியாது அது அடுத்தடுத்த வெற்றிகளுக்கான முதல் சிறிய விதைதான் என்பது.

அன்று தொடங்கிய கவாஸ்கரின் ஆட்டம் எதிரணிகளை தொடர்ந்து வாட்டியது.

முதல் 10000 ரன்கள் அடித்த வீரர், முதல் 30 சதங்கள் அடித்த வீரர் என அவரது அடுத்தடுத்த சாதனைகளை அடுக்கிகொண்டு போகலாம்.

அடுத்த ஒரு தசாப்தத்துக்கு கிரிக்கெட் உலகம் விடாமல் உச்சரித்த பெயராக சுனில் கவாஸ்கர் இருந்தது. இன்றும் அப்படியே கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நாயகனாக இருக்கிறார் கவாஸ்கர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?