Virat Kohli : 71வது சதத்துக்கு பிறகு விராட் செய்த ட்வீட், பிரபலங்களின் எமோஷனல் பதிவுகள் Twitter
ஸ்போர்ட்ஸ்

Virat Kohli : 71வது சதத்துக்கு பிறகு விராட் கோலியின் ட்வீட், பிரபலங்களின் எமோஷனல் பதிவுகள்

Antony Ajay R

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் தனது 71வது சதத்தை நிறைவு செய்தார் கோலி. நீண்ட இடைவெளிக்கு பிறகான இந்த 100 ரன்கள் ரசிகர்களை உற்சாகமடையச் செய்திருந்தது.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோலியின் வெற்றியை தங்கள் வெற்றியாகவே கொண்டாடினர். டிவில்லியர்ஸ் முதல் சுரேஷ் ரெய்னா வரை பல முன்னணி வீரர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியிருந்தனர்.

இந்த சதம் விராட் கோலியின் முந்தைய 70 சதங்களை விட சிறப்பானது. பல சாதனைகளை இதன் மூலம் படைத்துள்ள விராட், தன்னை மீண்டும் கிரிகெட் உலகுக்கு நிரூபித்துள்ளார்.

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிரும் விராட் கோலி இன்று பதிவிட்ட ட்வீட்டில், "ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் உறுதுணையாக இருந்ததற்கும் வெளிப்படுத்திய அன்புக்கும் நன்றி. நாங்கள் இன்னும் சிறப்பாக திரும்பி வருவோம். அது வரை ❤️" என கூறியிருந்தார்.

விராட் கோலியின் சதம் குறித்து பிரபலங்கள் கூறியது என்ன?

ஒரே சதத்தினால் மொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார் கோலி. இதனை ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணியுடன் அடித்ததாக சிலர் விமர்சித்தனர். ஆனால் இவற்றை விடப் பல மடங்கு விமர்சனங்களையும் புறக்கணிப்புகளையும் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறார்.

71வது சதத்தின் மூலம் உலகிலேயே அதிக சதம் அடித்தவர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தை சமன் செய்கிறார். முதலிடத்தில் சச்சின் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?