FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன? டிவிட்டர்
ஸ்போர்ட்ஸ்

FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

Antony Ajay R

கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தார் நாட்டில் இன்று தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்கின்றன. நவம்பர் 20ம் தேதி தொடங்கி டிசம்பர் 18ம் தேதிவரை நடைபெறும் இந்த போட்டிகளுக்கான தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதாவது பல சர்ச்சைகளைத் தாண்டி ஒருவழியாக தொடரைத் தொடங்கி விட்டது கத்தார்.

2022ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் 2010ம் ஆண்டு பெற்றது. அன்று முதலே கத்தாரை பல சர்ச்சைகள் சூழ்ந்துகொண்டன. கத்தார் உலகக் கோப்பை நடத்த சரியான நாடு அல்ல என்று முன்னாள் ஃபிஃபா தலைவர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர். கத்தாரை விடாது துரத்தும் முக்கிய சர்ச்சைகள் குறித்துக்காணலாம்.

பொருளாதார ரீதியில் மோசமான முடிவு

உலகக் கோப்பை போட்டியை நடத்த கத்தார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருப்பதாக ஃபோர்ப்ஸ் வலைத்தளம் தெரிவித்திருக்கிறது. கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக செலவு செய்யப்பட்ட தொடர் இதுதான். கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யா செலவு செய்ததை விட 15 மடங்கு அதிகம். பொருளாதார ரீதியில் கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவது மிகவும் தவறான முடிவு எனப் பல பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக 2014 போட்டியை நடத்திய பிரேசில் மிக மோசமான பின்விளைவுகளைச் சந்தித்தது.

கடந்த தசாப்தங்களில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய நாடுகள் பெரும்பாலும் நட்டத்தையே அனுபவித்தன. குறிப்பாக 2010ல் தென்னாப்ரிக்க மக்கள் ஃபிஃபாவுக்கு எதிராக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ரஷ்யா வல்லரசுடு நாடாக இருந்தாலும் பின்னடைவையே சந்தித்தது.

ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பலி

கத்தார் பாலைவனத்தில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியது. மைதானங்கள் புதிதாக கட்டமைக்கப்பட்டன. பாலைவன வெப்பத்தைக் குறைக்க பல புதிய தொழில்நுட்பங்களை மைதானத்தில் பயன்படுத்துகிறது. இந்த பணிகளுக்காக 30,000 புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றினர். இவர்கள் இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டனர்.

தொழிலாளர்களை கத்தார் நடத்தியவிதம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக அதிக நேரம் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் மக்களை வேலை வாங்கியதாகக் கூறப்படுகிறது. கத்தாரின் உயர் வெப்பநிலையில் தொடர்ந்து 12 மணி நேரம் வரை மக்கள் வேலை வாங்கப்பட்டனர். இதில் 6000 பேர் வரை உயிரிழந்தனர் என்று தி கார்டியன் அறிக்கை கூறுகிறது.

கத்தார் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் இறப்பு இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டிருப்பதையும் சர்வதேச தொழிலாளர் சங்கம் கண்டித்துள்ளது.

எல்.ஜி.பி.டி.க்யூ விவகாரம்

கத்தார் ஓரினச் சேர்கையாளர்கள் விவகாரத்தில் எதிர்மறையான கருத்தைக் கூறுவது முக்கிய பிரச்னையாக எழுந்துள்ளது. தன் பாலினத்தவர்கள் இடையிலான உறவுகள் கத்தாரில் சட்டவிரோதமாகும். இதற்கு, அபராதம் முதல் மரண தண்டனை வரை வழங்கப்பட அந்த நாட்டில் வாய்ப்பிருக்கிறது.

கத்தாரின் முன்னாள் கால்பந்து வீரர் காலித் சல்மானின் நேர்காணல் ஒன்றில், "தன் பாலின உறவுகள் மனநலத்தைக் கெடுக்கும்" என்று கூறியிருந்தது பேச்சுபொருளானது.

கத்தார் அதிகாரிகள் மற்றும் அரசு தன் பாலினத்தவருக்கு எதிரான மனநிலையில் இருப்பது ரசிகர்கள் பலர் போட்டிகளைப் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ளது.

One love

ஓரினச் சேர்கையாளர்கள் உரிமைக்கு ஆதரவாக சர்வதேச இயக்கங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் கத்தாரை கண்டித்திருக்கிறது. தவிர போட்டியாளர்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கின்றனர். டென்மார்க் அணியானது, தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில், நாடு மற்றும் பிராண்ட் லோகோ தெளிவாகத் தெரியாத வகையில் ஆடை அணிய உள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட 9 இதர நாடுகளின் அணித் தலைவர்கள் ஒன் லவ் என்பதை குறிக்கும் வானவில் லோகோ கொண்ட கைபட்டையை அணிய உள்ளனர்.

Female Fans

பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு?

 கத்தார் நாட்டில் நடைபெறும் இக்கால்பந்து போட்டியை வெளிநாடுகளிலிருந்து காண வரும் பெண் ரசிகர்கள்,  நாட்டின் விதிகளை மதிக்கும் படி உடைகளை அணிந்து வர வேண்டும் கவர்ச்சியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதை கடைப்பிடிக்க தவறும் பெண்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. மேலும்  மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வெளியேற்றம்

கால்பந்து போட்டிகளில் விதிமீறல்கள் போன்ற காரணங்களால் சில அணிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் முறையாக சர்வதேச அரசியல் காரணமாக ரஷ்யாவை நீக்கியிருக்கிறது ஃபிஃபா.

லீக் ஆட்டங்களில் ரஷ்யாவை எதிர்த்து விளையார மாட்டோம் என  செக் குடியரசு மற்றும் ஸ்வீடன் நாடுகால் தெரிவித்திருந்ததால் ஃபிஃபா இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவு எடுக்கப்படாவிட்டால் பிற அணிகள் உக்ரைனுக்கு ஆதரவாக கலகம் செய்ய வாய்ப்பிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை சர்ச்சைகள் கத்தார் இந்த உலகக்கோப்பை நடத்துவதன் பின்னணியில் உள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டி எந்த தரப்பினருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதே உண்மை. மனஸ்தாபம் இல்லாத எவரையும் மைதானத்தில் பார்க்க முடியாது. இதில் LGBTQ போன்ற நுண்மையான அரசியல் காரணிகள் எப்போதும் கால்பந்து மைதானத்தை கலகம் ஏற்படுத்தும் போர்க்கலமாக்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?