"சனாதன ஒழிப்பு பேசிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" நீதிபதி கூறியதென்ன? Twitter
தமிழ்நாடு

சனாதன ஒழிப்பு: "அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கணும்" நீதிபதிக்கு உதயநிதி பதில்?

"திராவிட ஒழிப்பு மாநாட்டை" நடத்த அனுமதி கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி, "சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இரண்டு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Antony Ajay R

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. இதில் திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் உதயநிதி பேசிய கருத்துக்கள் நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திராவிட கருத்தியலுக்கு எதிராக "திராவிட ஒழிப்பு மாநாட்டை" நடத்த திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் காவல்துறையில் மனு அளித்திருக்கிறார்.

இந்த மனுவை காவல்துறை பரிசீலிக்க வில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கூறியதாவது, "சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்.

சனாதான தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது. சனாதான ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாப்பதற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்கள், அவர்கள் உறுதிமொழியை மீறி செயல்படுவதால், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி இருக்கும்.

இந்நிலையில், இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களிடையே நிலவும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் நீதிமன்றமும் தவறிழைக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, "நான் பேசியது தவறு இல்லை. நான் சொன்ன வார்த்தையை மாற்றிக்க மாட்டேன். அண்ணல் அம்பேத்கர் பேசியதவிட நான் அதிகமாக பேசவில்லை, தந்தை பெரியார் பேசியதை விட அதிகமாக பேசவில்லை, அண்ணன் எழுச்சி தமிழர் திருமாவளவன் பேசியதை விட அதிகமாக பேசவில்லை. எதாவது இருந்தால் சட்டப்படி சந்திப்போம்.

அமைச்சர் பதவி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும், சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும், இளைஞரணி செயலாளர் பதவி இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் முதல்ல மனிதனா இருக்கணும். அதற்காக எப்போதும் சனாதனத்தை எதிர்ப்போம்" என்று பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?