தமிழக சட்டமன்றத்தில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கலில் பங்குகொள்ளாமல் எதிர்கட்சியான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்டார்,
தமிழகத்தில் எதிர்கட்சியினர் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்தல்
சட்ட ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்தல்
போதைப்பொருட்களை கட்டுப்படுத்தாததைக் கண்டித்தல்
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50000 மாணவர்கள் தேர்வு எழுதாதது, மோசமான கல்வி நிலை என கண்டித்தல்
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதைக் கண்டித்தல்
விவசாயிகளிடம் முறையாக நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்தல்
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்கு கிராம மக்களிடம் முறையாக அனுமதி பெறாமல் நிலங்களை பறிப்பதைக் கண்டித்தல்
தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவதை வலியுறுத்துதல்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தாததைக் கண்டித்தல்
மேலும் பட்ஜெட் குறித்து பேசிய அவர், "திமுக மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மூன்று முறையும் வரியை உயர்த்தியிருக்கின்றனர். அதுதான் இந்த மக்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு.
இதுவரையிலான 23 மாத ஆட்சியின் 1.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கின்றனர். இன்னும் 90 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக கூறியிருக்கின்றனர்.
ஆனாலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நீட் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்த வேண்டுமென்று கூறுகிறார். நாங்கள் நடத்திக்கொண்டிருக்கவில்லையா? எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. இந்த ரகசியத்தைச் சொன்ன உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
கடந்த ஆண்டுகளை விட ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மகளிருக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இப்போது தகுதியான குடும்பத்தலைவிகளுக்குத் தான் வழங்கப்படும் எனக் கூறுகின்றனர். எந்த அடிப்படையில் தகுதி என்பதை தெளிவுப்படுத்தவில்லை.
இந்த திட்டத்துக்காக 7000 கோடி தான் ஒதுக்கீடு செய்துள்ளனர். அப்படிப் பார்த்தால் 1 கோடி பேருக்கு கூட கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டை மின்மினிப் பூச்சியாக பார்க்கிறோம். இது நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கு எந்தவித வெளிச்சத்தையும் தராது. வெறும் கானல் நீர் தான் யாருடைய தாகத்தையும் தணிக்காது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust