தஞ்சை பெரிய கோவில் canva
தமிழ்நாடு

வருகிறார் சோழர்: தென் கிழக்கு ஆசியா வரை வெற்றி கண்ட Cholas - சோழர் வரலாறு மினி தொடர் 1

உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நீண்ட அரச பரம்பரைகளில் சோழர்களும் உண்டு. 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் சோழர்களின் ஆட்சி உச்சத்தை தொட்டது. அப்போது துங்கபத்ரா நதிக்கு கீழே உள்ள முழுப்பகுதியையும் சோழர்கள் ஒரு ராஜ்ஜியமாக ஆண்டனர்.

NewsSense Editorial Team

சோழர்களின் வரலாற்றைக் கற்பனையோடு எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் நாவலை 1955ஆம் ஆண்டு வெளியிட்டார். கல்கியின் எழுத்துக்கள் நாட்டுடமையாக்கம் செய்யப்பட்ட பின்னர் அந்நூலைப் பலரும் வெளியிட்டிருக்கின்றனர். தமிழகத்தில் இலட்சக்கணக்கானோர் அந்நாவலைப் படித்திருக்கின்றனர்.


தென்னிந்தியாவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சோழர்கள் கடல்கடந்து தென்கிழக்கு ஆசியா வரை தமது வெற்றியை விரிவுபடுத்தினர். பொற்காலம் என்று சிலரால் அழைக்கப்படும் சோழர்களின் ஆட்சி குறித்து வரலாற்று அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

தஞ்சை பெரிய கோவில்

உண்மையில் சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

“கலை, கட்டிடக்கலை சாதனைகள், இலக்கியம் மற்றும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் பார்த்தால் சோழர்கள் தென்னிந்திய வரலாற்றில் முதன்மையான, பிரபலமான அரச வம்சத்தினர்" என்று உலோகவியலாளரான சாரதா சீனிவாசன் கூறுகிறார். உலோகவியல் என்பது தொல்லியல் பிரிவுகளில் ஒன்று. மேலும் சோழர்களின் நிர்வாகம், சமூக வாழ்க்கை, கலாச்சாரம், பொருளாதாரம் பற்றிய நுணுக்கமான தகவல்களை தரும் கல்வெட்டுக்கள் ஏராளம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். கிபி 1010 ஆம் ஆண்டில் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் ( தஞ்சை பெரிய கோவில் ) மட்டும் கிட்டத்தட்ட நூறு கல்வெட்டுகள் உள்ளதாகவும் சாரதா கூறுகிறார்.


உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நீண்ட அரச பரம்பரைகளில் சோழர்களும் உண்டு. 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் சோழர்களின் ஆட்சி உச்சத்தை தொட்டது. அப்போது துங்கபத்ரா நதிக்கு கீழே உள்ள முழுப்பகுதியையும் சோழர்கள் ஒரு ராஜ்ஜியமாக ஆண்டனர். மேலும் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பி வடக்கே நகர்ந்து பின்னர் கிழக்கு இந்தியாவிற்குச் சென்ற ஒரே வம்சத்தினர் சோழர்கள்தான். ராஜேந்திர சோழனது படைகள் இன்றைய வங்கத்தில் இருக்கும் பாடலிபுத்திரத்தின் பாலா மன்னனை தோற்கடித்தன.

மேலும் இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே போர் மற்றும் வணிகம் செய்த முதல் பேரரசர்களாக சோழர்கள் இருக்கிறார்கள். இலங்கை, மாலதீவுகள், ஜாவா - சுமத்ரா, தென்கிழக்கு ஆசியா, இறுதியில் சீனா வரை சோழர்கள் தடம் பதித்திருக்கிறார்கள். இந்த அசாத்தியமான வெற்றிக்கு ஆதாரமாக சோழர் கால கல்வெட்டுக்களோடு, தாய்லாந்தில் உள்ள கல்வெட்டுகள், சீன மொழித் தொடர்புகள், தென்கிழக்கு சீனாவின் குவான்சோவில் சோழர்களின் செல்வாக்கு நிறைந்த சிவன் கோவில் ஆகியவற்றைக் கூறலாம். இந்த சிவன் கோவில் இருக்கும் குவான்சோ நகரம் தமிழகத்திலிருந்து கடல்வழியில் சுமார் 6,878 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. எனில் சோழர்களின் பிரம்மாண்டமான வெற்றியைக் கற்பனை செய்து பார்க்கலாம்.

வரலாற்றில் சோழர்களை வைத்துப் பார்ப்பதில் அரசியலும் இருக்கிறது. இந்தியா ஆங்கிலேயர்களின் காலத்தில் காலனிய நாடாக இருக்கும் போதுதான் வரலாற்றில் சோழர்களின் ஆட்சி கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்திற்கென ஒரு சொந்த வரலாறு இல்லை என்று ஆங்கிலேயர்களின் கூற்றுக்கு எதிரான உண்மையை சோழர்கள் முன்வைத்தனர்.

சோழர் கல்வெட்டுகள்

ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம்

கிபி 985 இல் அருள்மொழி வர்மன் சோழப் பேரரசராக அரியணை ஏறியதும் அவருக்கு ராஜராஜன் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இதன் பொருள் மன்னர்களின் மன்னர். ராஜராஜ சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு எப்படி பிரம்மாண்டமாக காட்சியளித்தது என்பதை வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி 1955ஆம் ஆண்டில் வெளியிட்ட சோழர்கள் எனும் நூலில் விரிவாக விளக்குகிறார். சோழர்களின் அரண்மனைகள், அதிகாரிகள் மற்றும் சடங்குகள் அனைத்தும் சோழர்களின் கம்பீரமான ஆட்சியை, பேரரசை எப்படிக் காண்பித்தன என்று அதில் விவரிக்கிறார். ராஜராஜ சோழன் காலத்தைச் சார்ந்த பதிவுகளில் அவர் மூன்று உலகங்கள் அல்லது பிரபஞ்சத்தின் பேரரசர் என்று அழைக்கப்படுகிறார்.

இன்றைய தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் தெற்குப் பகுதி பழந்தமிழகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழந்தமிழகத்தைச் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகிய மூன்று பெரிய வம்ச மன்னர்கள் ஆண்டனர். முதலாம் ராஜராஜன் அரியணை ஏறுவதற்குள் சோழர்கள் பாண்டியர்களை அடக்கியதோடு, தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முதன்மையான சக்தியாக உருவெடுத்தனர்.

ராஜராஜன் காலத்தில் சோழர்களின் கடல் கடந்த வணிகம் மற்றும் படையெடுப்புகள் சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தின. எழுத்தாளர் ஹேமா தேவாரே, “சோழர்கள், கோரமண்டல கடற்கரையிலிருந்து இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் வழியாக பெரும் கடல் பகுதிகளைக் கட்டுப்படுத்தினர்" என்று கூறுகிறார். மேலும் அவர் சோழர்கள் பல வகையான கப்பல்கள் மற்றும் படகுகளை பயன்படுத்தியதாகவும் கூறுகிறார். கங்கையில் பயணிக்கும் கொலந்தியா எனும் பெரிய கப்பல்கள் முதல் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு பயன்பட்ட சிறுபடகுகள், மலேயா,சுமத்ராவிற்கு நீண்ட தூரம் பயணிக்கும் பெருங்கப்பல்கள் வரை சோழர்களின் கப்பற்படையும், கப்பல்களும் பிரம்மாண்டமாய் விளங்கின.

ராஜராஜ சோழனின் வெற்றிகள்

கடல் கடந்த வணிகத்தின் முக்கியத்துவத்தை ராஜராஜ சோழன் உணர்ந்திருந்தார். வரலாற்றாசிரியர் அனிருத் கனிசெட்டி தனது Lords of the Deccan: Southern India நூலில் சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரையிலான அரசர்களின் ஆட்சியை விளக்குகிறார். அந்நூலில் ராஜராஜ சோழன் எப்படி கேரளாவின் மலபார் கடற்கரையில் சேரர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதை புரிந்து கொண்டு படையெடுத்ததைக் குறிப்பிடுகிறார்.

அக்காலத்தில் எகிப்தின் செழிப்பான ஃபாத்திமிட் பகுதி வரை சேரர்கள் கடல் வணிகத்தில் தலை சிறந்து விளங்கினர். இதன் காரணமாக ராஜராஜ சோழன் காந்தளூர் துறைமுகத்திற்குப் படையெடுத்து அங்கே இருந்த சேரர்களின் கப்பல்களைத் தாக்கி எரிக்கிறார். மேலும் அந்நகரிலிருந்த செல்வத்தைச் சோழர் படை வீரர்கள் கொள்ளையடிக்கின்றனர். இந்த வெற்றியின் மூலம் துணைக்கண்டத்தின் எழுச்சி மிக்க மன்னர்களாகச் சோழர்கள் உருவெடுக்கின்றனர்.

Jayam Ravi as Ponniyin Selvan

அதுவரை தென்னிந்தியா கண்டிராத புத்திசாலித்தனமான அரசியல் மற்றும் இராணுவ வியூகங்களை வகுக்கும் நிபுணராக ராஜராஜ சோழன் விளங்கினார். 10ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் அவர் பாண்டியர்களின் அனைத்து பிரதேசங்களையும் கைப்பற்றி அங்கே தனது சொந்த ஆளுநர்களை நியமித்தார்.

அதன் பிறகு அவர் இலங்கை மீது படையெடுத்தார். அங்கே இருந்த சில பௌத்த விகாரங்களைக் கொள்ளையடித்து சிவன் கோவில்களை கட்டினார். இதன் மூலம் இலங்கையிலும் சோழர்களின் ஆட்சி நடைபெற்றது. சோழப் பேரரசின் விரிவாக்கம் ராஜராஜ சோழனது மகனான ராஜேந்திர சோழன் காலத்திலும் தொடர்ந்தது. இவர் கங்கையை வென்றவர் எனும் பொருளில் கங்கை கொண்ட சோழர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கங்கை கொண்ட சோழபுரம்

ராஜேந்திர சோழன் கிபி 1025இல் இன்று வங்காளம் என்று அழைக்கப்படும் கிழக்கு இந்தியாவிலிருந்த பாலா வம்சத்தின் மீது படையெடுத்து வெற்றி பெறுகிறார். இந்த வெற்றியின் நினைவாக திருச்சிக்கு அருகில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் நகரை உருவாக்கி அதை சோழர்களின் தலைநகரமாக அறிவிக்கிறார். அங்கே இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவன் கோவிலையும் கட்டுகிறார்.

இராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசிய வெற்றியை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?