இந்தி எதிர்ப்பு அரசியலின் முழுமையான பின்னணி: இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்- நூல் அறிமுகம் Twitter
தமிழ்நாடு

இந்தி எதிர்ப்பு அரசியலின் முழுமையான பின்னணி: இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்- நூல் அறிமுகம்

பல்லாயிரம் ஆண்டுகள் சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் வாழும் மக்களை சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தி மொழி ஆட்சி செய்கிற அவலத்தை தரவுகளின் மூலம் கண்முன்னே நிறுத்துகிறது இந்த நூல்.

Antony Ajay R

இந்தி திணிப்புக்கு எதிரான அரசியல் சுருக்கென தமிழக களத்தை சூடுபடுத்துவதாக இருக்கிறது. மத்திய ஆட்சியாளர்கள் தமிழைப் போற்றிப் புகழ்ந்தவாறே இந்தியைத் திணிக்கும் ஒரு வார்த்தையை விட்டாலும் அதனை ஒட்டா நறுக்கி தமிழுக்கு அரண் செய்ய பல செயற்பாட்டாளர்கள் உள்ளனர்.

இந்த அரசியல் தெளிவும் வீரியமும் இயல்பாக இந்த மண்ணில் விளைவதற்கு பின்னால் நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. இந்த விவகாரத்தை 360 டிகிரி விளக்க முயல்கிறது 'இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்'.

இந்தி என்ற மொழி தமிழகத்துக்கு மட்டுமல்ல வட இந்தியாவின் பெரும் பகுதிகளுக்கும் அந்நியமான ஒன்றே என்பதை அழுத்தச் சொல்லி தொடங்குகிறது இந்த நூல்.

இந்தியாவில் இருக்கும் மக்களின் நாகரீகம் எத்தனை பழமையானது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் வாழும் மக்களை சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி ஆட்சி செய்கிற அவலத்தை தரவுகளின் மூலம் கண்முன்னே நிறுத்துகிறது இந்த நூல்.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த நாட்டில் ஒரு மொழியை உயர்த்தி பிடிப்பதற்கு எத்தனை மொழிகளின் குரல்வளையை நெரிக்க வேண்டியது இருந்தாலும் அதிகார வர்க்கம் இரக்கமற்று நெரித்துக்கொன்றதை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

ஆசிரியர் கார்திக் புகழேந்தி

புத்தகத்தில் இருந்து,

1961ல் இந்திய அரசு குறிப்பிட்ட மொழிகளின் எண்ணிக்கை 1652. அதில் 780 மொழிகள் ஆவணப்படுத்தப்பட்டன. முப்பது ஆண்டுகள் கழித்து 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1576 மொழிகள் வகுப்புவாரியாக அணி பிரிக்கப்பட்டது. அதில் 18 மொழிகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ அரசு மொழிகள் என்ற இடம் தரப்பட்டிருந்தது. 1796 மொழிகள் பட்டியலுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்தியை உயர்த்திப்பிடிப்பது நம் அதிகார வர்கத்தின் உச்சபட்ச நோக்கமில்லை. இந்தியின் வழியாக சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கலாம். இன்று ஒரே மொழி என்பவர்கள் நாளை 'ஒரே நாடு ஒரே கலாச்சாரம்" என முழங்கமாட்டார்கள் என என்ன நிச்சயம்? என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த நூல்.

"சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்" என்பதன் படி இந்தியால் வளர்ச்சி அடையாத, நவீன காலத்துக்கு தகாத மொழிகள் மட்டும் கொல்லப்படவில்லை. மாறாக இந்தியை விட பழமையான இலக்கியப்படைப்புகளைக் கொண்ட போஜ்புரி போன்ற மொழிகளும் அழிந்து வருகின்றன.

இந்தி ஒரு மொழி மட்டுமல்ல ஆதிக்கவாதிகளின் அரசியல் ஆயுதம் என்பதையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். இந்தியால் அடக்கப்பட்ட மொழிகளுக்குரியவர்கள் அல்லது இந்தியை ஏற்றுக்கொண்டவர்களின் இன்றையே நிலையே அதற்கு சாட்சி. பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகும், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இருக்கும் பீகார் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

இந்தி தெரிந்தவர்கள், இந்தி தெரியாதவர்கள் இடையே பாரபட்சம் காட்டுவதைப் போல இந்தி - பிற மொழிகளிடையேயும் பாரபட்சம் காட்டிவருகிறது இந்திய அரசு. இந்தியைத் தவிர எல்லா மொழிகளையுமே மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது அதிகாரவர்க்கம். இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது.

"இந்தியாவின் மிகச் சிறிய அலுவல்மொழியான சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை 24,821. அதற்கு 2017 முதல் 2020 வரை ஒதுக்கப்பட்ட தொகை 643.84 கோடி ரூபாய். அதே காலத்தில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 23 கோடி மட்டுமே." என புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

50 பக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியல் பற்றிய ஆழமான பார்வையை நமக்குத் தருகிறது இந்த புத்தகம். இந்த காலத்தில் அரசியல் பழக நினைக்கும் ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டிய ஒன்று.

ஆதிக்கக்காரர்களுக்கு லாவகமாகவே நம் சட்டமும் இருப்பது தான் நம் போராட்டம் ஓயாததற்கு காரணம் என்கிறது இந்த புத்தகம். சட்டரீதியான மாற்றங்கள் ஏற்படும் வரை இந்'தீ' பற்றவைத்த அனல் ஓயாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?