மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts Canva
தமிழ்நாடு

மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

இங்கு கடற்கரை கோவில் மிகவும் பிரபலம். இந்த கோவில் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் பண்டையக் காலத்தின் கலை நுணுக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.

Keerthanaa R

தமிழ்நாட்டின் முக்கிய பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்று மகாபலிபுரம். பல்லவ வம்சத்தினரின் ஆட்சியின்போது எழுப்பப்பட்ட இந்த நகரம் அதன் சிற்பக் கலைகளுக்காக, பிரம்மாண்ட கோவில்களுக்காக அறியப்படுகிறது.

இவ்விடத்தை பார்க்க, வரலாற்றை தெரிந்துகொள்ள உலகளவில் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்

அவற்றில் கடற்கரை கோவில் மிகவும் பிரபலம். இந்த கோவில் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் பண்டையக் காலத்தின் கலை நுணுக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.

ஷோர் டெம்பிள் எனப்படும் கடற்கரை கோவில் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இந்த பதிவில்

தேர் வடிவம்

இந்த கோவில் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ரதத்தின் (தேர்) வடிவத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பது போல காட்சியளிக்கிறது.

இந்திய புராணக்கதையான மகாபாரதத்தில் வரும் தர்மராஜனின் தேரின் வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது

சுனாமியால் வெளியான கோவில்

கிட்ட தட்ட 7 முதல் 8 ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மகாபலிபுரத்தில் காலத்தின் தாக்கத்தால் சில கோவில்கள், சிற்பங்கள் மண்ணுக்கடியில் புதைந்தன. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால், இந்த கடற்கரை கோவிலின் மறைந்திருந்த பகுதிகள் வெளியாகின.

தவிர கடற்கரை கோவிலைச் சுற்றி இருந்த சிறு சிறு கோவில்கள் சிலவும் வெளிவந்தன

இதனையடுத்து தொல்லியல் துறையினர் தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இது ஏதுவாக அமைந்தது

ஜலசயனா

கடற்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் இந்த கோவிலை ஜலசயனா, அதாவது நீரின் மேல் இருக்கும் கோவில் என்ற பெயரும் உள்ளது

கட்டமைப்பு

மகாபலிபுரத்தின் மற்ற கட்டமைப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த கடற்கரை கோவிலானது, மேல் இருந்து கீழ் கட்டப்பட்டுள்ளது. இது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கோவிலாகும்.

மூன்று கோவில்கள்

கடற்கரை கோவில் என்பது மூன்று கோவில்கள் கொண்ட கட்டமைப்பாகும். அதில் இரண்டு கோவில்களில் பிரமிடு வடிவில் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு சிறிய கோவில்கள், ஒரு பெரிய கோவில் இங்கு இருக்கின்றன. இதில் இரண்டு சிவபெருமானுக்கும், ஒரு கோவில் மகாவிஷ்ணுவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பல்லவ ஆட்சியின்போது பரவலாக பின்பற்றப்பட்ட சைவ வைணவ நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாக இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாபலி கண்டெடுத்த மகாபலிபுரம்

புராணக் கதைகளில் வரும் பிரகலாதன், தன் தந்தை இரனியகஷிபு மரணித்த பிறகு, பிரகலாதன் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

அவரது மகனான மகாபலி தான் இந்த இடத்தை கண்டுபிடித்ததாகவும், இதனால் இவ்விடத்திற்கு மகாபலிபுரம் என்ற பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது

கோவில்களின் பெயர்கள்

கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு படி, மூன்று கோயில்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • க்ஷத்ரியசிம்ம பல்லவேஸ்வரர் - க்ரிஹம்,

  • ராஜசிம்ம பல்லவேஸ்வரர் - க்ரிஹம்

  • மற்றும் பில்லிகொண்டருளிய - தேவர்

7 பகோடா கோவில்

இந்த கடற்கரை கோவிலின் பெயர் 7 பகோடாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் கோபுர வடிவமே இதற்கு முக்கிய காரணம்.

முன்பு 7 கோவில்கள் அவ்விடத்தில் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக இந்த பெயர் வந்தது, ஆனால் அதில் தற்போது கடற்கரை கோவில் மட்டுமே நிலைத்து நிற்கிறது

வணிக தலம்

பல்லவ ஆட்சிக்காலத்தின்போது மகாபலிபுரம் ஒரு முக்கிய வர்த்தக துறைமுகமாக திகழ்ந்தது. இங்கிருந்து வணிக கப்பல்களை வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றியது

பல்லவர்களும் சோழர்களும்

கடற்கரை கோவிலின் கட்டமைப்பு பல்லவ மன்னர் இரண்டாம் நரசிம்ம வர்மரின் காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், கட்டிமுடிப்பதற்கு உள்ளாகவே சோழர்கள் பல்லவ தேசத்தை கைப்பற்றியதால், சோழர் காலத்தில் தான் கோவில் கட்டி முடிக்கப்பட்டது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?