M K Stalin twitter
தமிழ்நாடு

HBDMKStalin70: தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பிரபலங்கள்

Keerthanaa R

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் 8வது மற்றும் தற்போதைய முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இவருக்கு திரையுலக, அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனக்கே உரித்தான பாணியில் வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

“தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவை தகர்ப்பவராக திகழும் திராவிட முன்னேற்ற கழத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு மு க ஸ்டாலின் நீடூழி வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “ மு க ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில்,

“மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... மக்களுக்கு "தி"னமும் "மு"ழு உடல் நலத்துடன் "க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்....” என பதிவிட்டிருந்தார்

நடிகர் ரஜினிகாந்த், ஒரு நாள் முன்னதாகவே தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"மு க ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று பேசியிருந்தார் ரஜினி

நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் ட்வீட்...

முதல்வரின் தங்கையும், எம்பியுமான கனிமொழி கருணாநிதி முதவருக்கு வாழ்த்துக் கூறி வீடியோ பதிவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?