Modi with Boris Johnson Twitter
தமிழ்நாடு

Morning News : G7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு இவைதான் - விரிவான தகவல்

Antony Ajay R

ஜி-7 மாநாடு காஸ்ட்லி பரிசுப் பொருட்கள் வழங்கிய பிரதமர் மோடி

ஜெர்மனி நாட்டின் எல்மாவ் நகரில் நடந்த 'ஜி-7' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கடந்த 26, 27-ம் தேதிகளில் கலந்து கொண்டார். வெளிநாடுகளில் தான் சந்தித்துப் பேசுகிற தலைவர்களுக்கு இந்திய கலாசாரம், பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிற பரிசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிளாட்டினப் பூச்சுகொண்ட டீ - செட்டைப் பரிசாக வழங்கினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வாரனாசியிலிருந்து அலங்கார கொக்கிகள் மற்றும் கப்லிங் செட். ஜப்பான் பிரதமருக்கு கருப்பு மட்பாண்டங்கள், இந்தோனேசிய அதிபருக்கு ராமாயண பொம்மை, தென்னாப்ரிக்க பிரதமருக்கு ராமாயணத்தை பிரதிபலிக்கும் Dokra Art சிலை, அர்ஜன்டினா பிரதமருக்கு நந்தி சிலை, கனடா பிரதமருக்கு காஷ்மீர் பட்டு விரிப்பு ஆகிய பரிசுப்பொருள்கள் வழங்கியிருக்கிறார்.

Electricity

தமிழக மின்வாரிய ஊழியர்கள் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும்

தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களுக்கான சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், அலுவலகத்துக்குச் சாதாரண உடை அணிந்து வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆண்கள் வேட்டி, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து வரலாம் எனவும், பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Plastic Waste

பிளாஸ்டிக்: ஜூலை 1-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கான செயல் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்தியா முழுவதும், அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாகக் கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், இறக்குமதி, விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1-ம் தேதி முதல் தடை செய்யப்படும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

india vs ireland

இந்தியா - அயர்லாந்து போட்டி

இந்தியா , அயர்லாந்து இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 225 ரன்கள் எடுத்தது. அடுத்ததாகக் களமிறங்கிய அயர்லாந்து அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தீபக் ஹுடா அதிரடியாக விளையாடி 104 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?