sasikala twitter
தமிழ்நாடு

Morning News Today: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீஸார் இன்று விசாரணை

Antony Ajay R

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீஸார் இன்று விசாரணை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமானது கொடநாடு எஸ்டேட். நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு அருகே உள்ளது. இந்த எஸ்டேட்டில், 24-4-2017 அன்று எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். வழக்கு சம்பந்தமாக போலீஸார் தேடிவந்த கார் டிரைவர் கனகராஜ் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். எஸ்டேட் கணினி ஆபரேட்டராக வேலை செய்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மேல் விசாரணை நடந்துவருகறது. இதற்கென கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்டேட் மேலாளர் நடராஜன் தொடங்கி சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். சமீபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீஸார், சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

இரண்டு மனைவி

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை! - தமிழக அரசு

1973 தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அப்படி 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக்கேடானது என்றும் அரசின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை. இத்தகைய காரணங்களால், முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கவர்னர்

கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள்மீது கற்கள் வீசப்படவில்லை - சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தமிழக கவர்னரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினர் அதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தர்மபுரம் ஆதீனத்தைச் சந்திக்க கவர்னர் திருக்கடையூர் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி அறிக்கையில்,‘இந்த ஆர்ப்பாட்டத்தில் கவர்னருடைய பாதுகாப்பு வாகனங்கள் (கான்வாய்) மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதைக் காவல் துறை கூடுதல் இயக்குநர் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்." எனப் பேசினார்

சுரங்கப்பாதை

காஷ்மீரில் ரூ.2,027 கோடியில் 8.45 கி.மீ. சுரங்கப்பாதை!

காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியிலிருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கப்பாதை ரூ.2,027 கோடியில் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும் நிலையில் உள்ளது. வருகிற 24-ம் தேதி பிரதமர் மோடி காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்துக்குச் செல்கிறார். அங்குப் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அப்போது இந்தச் சுரங்கப்பாதையையும் அவர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா காந்தி நடத்திய சந்திப்பு!

நாடாளுமன்றத் தேர்தல், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் தொடர் தோல்வியைக் காங்கிரஸ் சந்தித்தது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடன் கட்சித்தலைவர் சோனியா அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை நேற்று சந்தித்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தனர். சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். அப்போது, வரவிருக்கிற சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் கட்சியைப் பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மோடி, போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். லண்டனிலிருந்து குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு இன்று வருகிறார். அங்குள்ள பல்கலைக்கழகத்து செல்கிறார். மேலும் குஜராத்தில் முதலீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளார். 22-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார். இந்தியா புறப்படுவதற்கு முன்பு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய போரிஸ் ஜான்சன், ‘இரு தரப்பு உறவுகள் வலுவடையும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

வார்னர்

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?