நீட் : பலியான மகனும் தந்தையும் - நீட் தேர்வுக்கு முடிவு எட்டப்படுமா? என்ன சொல்கிறது திமுக? Twitter
தமிழ்நாடு

நீட் : பலியான மகனும் தந்தையும் - நீட் தேர்வுக்கு முடிவு எட்டப்படுமா? என்ன சொல்கிறது திமுக?

"இந்த தேர்வை ஒழித்தால் தான் எல்லாரும் நல்லா இருக்க முடியும். நீட்டை நீக்க போராடுவதற்கு நான் ரெடி, நீங்கதான் சப்போர்ட் செய்யணும். முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நேற்று நேர்காணல் அளித்த மாணவரின் தந்தை நள்ளிரவில் உயிரை மாய்த்துக்கொண்டார்.

Antony Ajay R

சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஜகதீசன். இவர் பல்லாவரத்தில் உள்ள பிரபல சி.பி.எஸ்.சி பள்ளியில் ஏ கிரேடு 85 விழுக்காடு மதிப்பெண் பெற்றார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தனியார் நீட் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். இருந்தாலும் அவரால் இரண்டு முறை முயன்றும் மருத்துவ தேர்வில் வெற்றிபெற முடியவில்லை.

இதனால் மனமுடைந்தார் ஜகதீசன். பெற்றோர் அவரை 3வது முறையாக நீட் தேர்வை எழுத அண்ணாநகரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். விரக்தியிலிருந்த ஜகதீசன் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த ஜதீசனின் தந்தை செல்வசேகர், "எனக்கு நடந்தது போல யாருக்கும் நடக்கக் கூடாது. இந்த தேர்வை ஒழித்தால் தான் எல்லாரும் நல்லா இருக்க முடியும். நீட்டை நீக்க போராடுவதற்கு நான் ரெடி, நீங்கதான் சப்போர்ட் செய்யணும். முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவர் ஜகதீசனின் நண்பரான பயாசுதீன் நேற்று பத்திரிகையாளர்களிடம் அளித்த நேர்காணலில், "ஜகதீசன் என்னை விட நல்லா படிக்கக் கூடிய மாணவர். என்னைவிட நீட்டில் அதிக மதிப்பெண் எடுத்தான். ஆனால் நான் 25 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட்டேன்.

சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் பேசிய போது, "உனக்கு கிடச்ச வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. படிச்சு முடிச்சுட்டு மக்களுக்காக பணி செய்"னு சொன்னார் ஜகதீசன். அப்படி நல்ல மனநிலை இருந்த மாணவர் அவர்.


”எங்க அப்பாவிடம் காசு இருந்ததால் நான் சேர்ந்துவிட்டேன். ஆனால் என்னை விட நல்லா படிக்கக் கூடிய ஜகதீசனால் மருத்துவப்படிப்பில் சேர முடியவில்லை. இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். சி.பி.எஸ்.சி பள்ளியில் படிச்சு வந்த எங்களுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கும் போது அரசு பள்ளியிலும் சிறிய பள்ளிகளிலும் படிக்கக் கூடிய மாணவர்களின் நிலையை கற்பனைக் கூட செய்து பார்க்கமுடியவில்லை.

இப்போது நீட்டில் 720 மதிப்பெண் எடுத்திருக்கக் கூடிய மாணவர் 11, 12ம் வகுப்பிலேயே வருடத்துக்கு 15 லட்சம் கட்டி படித்தவர்.

அதிக பணம் கொடுத்து படிப்பவர்கள் பணத்தை சம்பாதிக்கத்தான் பார்ப்பார்கள். எப்படி மக்களுக்கு பணியாற்ற முன்வருவார்கள்? வருங்கால சுகாதார கட்டமைப்பை நினைத்துப் பார்க்கையில் அச்சமாக இருக்கிறது." எனப் பேசினார்.

கடந்த வாரம் நீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி "நான் எப்போதும் நீட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்க மாட்டேன். கடந்த ஒரு வருடமாக நீட் காரணமாக யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை" எனப் பேசியிருந்தார்.

ஆளுநரை கண்டித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு பெற வேண்டும் என்பதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். அதற்காக நீட் தேர்வு விலக்கு மசோதா தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதுடன் திருப்பி அனுப்பினார். அதனால் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் வேறு வழியின்றி ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

மா.சுப்பிரமணியன்



குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அங்கிருந்து தமிழக சுகாதாரத்துறை, ஆயூஷ், கல்வித்துறைக்கு சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ளோம். அதனால் அந்த மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனி எந்த தொடர்பும் கிடையாது. அவர் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட வேண்டிய அவசியமே கிடையாது. அதனால் அவர் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று பேசியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்று பேசியிருந்தார்.

நீட் தேர்வினால் மரணமடைந்துள்ள தந்தை மற்றும் மகனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், "``நீட்‌ தேர்வு மையத்தில்‌ பயின்று வந்த குரோம்பேட்டையைச்‌ சேர்ந்த மாணவர்‌ ஜெகதீஸ்வரன்‌ தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்‌. அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல்‌ சொல்வது என்று நினைத்துக்‌ கொண்டிருந்த நிலையில்‌, ஜெகதீஸ்வரனின்‌ தந்தை செல்வசேகரும்‌ மறுநாளில்‌ தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌.

ஜெகதீஸ்வரன்‌ குடும்பத்துக்கும்‌, உறவினர்க்கும்‌, நண்பர்களுக்கும்‌ என்ன சொல்லி ஆறுதல்‌ கூறுவது எனத்‌ தெரியவில்லை. நன்றாகப்‌ படிக்கும்‌ மகன்‌, மருத்துவர்‌ ஆவான்‌ என்று தான்‌ அவரைப்‌ பெற்ற பெற்றோர்‌ நினைத்திருப்பார்கள்‌. ஆனால்‌ நீட்‌ தேர்வு எனும்‌ பலிபீடத்தில்‌ பலியானவர்கள்‌ பட்டியலில்‌ ஜெகதீஸ்வரன்‌ சேர்ந்துவிட்டது மிகக்‌ கொடூரமான நிகழ்வாகும்‌. எந்தச்‌ சூழலிலும்‌ உயிரை மாய்த்துக்‌ கொள்ளும்‌ முடிவை எந்த மாணவரும்‌, எப்போதும்‌ எடுக்க வேண்டாம்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

மு.க.ஸ்டாலின்



உங்கள்‌ உயர்வுக்குத்‌ தடைக்கல்லாக இருக்கும்‌ நீட்‌ தேர்வு முறையை நிச்சயம்‌ நீக்க முடியும்‌. அதற்கான சட்ட ரீதியான முயற்சியில்தான்‌ தமிழ்நாடு அரசு தீவிரமாகச்‌ செயல்பட்டு வருகிறது.

பணம்‌ படைத்தவர்களுக்கே மருத்துவக்‌ கல்வி என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்‌. அதை மீறி இதனுள்‌ நுழையும்‌ ஏழை எளிய - அரசுப் பள்ளி மாணவர்கள்‌ தமிழ்நாடு அரசால்‌ வழங்கப்படும்‌ 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால்‌ சேர்பவர்களாகவே இருக்கிறார்கள்‌.

ஆனால்‌ இது எதுவும்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவிக்குத்‌ தெரியவில்லை. புரிந்து கொள்ள மறுக்கிறார்‌. அல்லது பயிற்சி நிறுவனங்களின்‌ கைப்பாவையாக அவர்‌ செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்‌ வருகிறது. ஆன்லைன்‌ சூதாட்ட மசோதாவுக்குக்‌ கையெழுத்துப் போடாமல்‌ இருந்த நேரத்தில்‌ அந்த நிறுவனத்தைச்‌ சேர்ந்தவர்களையே சந்தித்தார்‌.

ஜெகதீஸ்வரன்‌ போன்ற எத்தனை உயிர்கள்‌ பலியானாலும்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி போன்றவர்களின்‌ இதயம்‌ கரையப்‌ போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின்‌ காலத்தில்‌ மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. இன்னும்‌ சில மாதங்களில்‌ நாங்கள்‌ ஏற்படுத்த நினைக்கும்‌ அரசியல்‌ மாற்றம்‌ நடக்கும்‌ போது நீட்‌ தடுப்புச்‌ சுவர்‌ பொலபொலவென உதிர்ந்து விழும்‌. கையெழுத்துப் போடமாட்டேன்‌ என்பவர்கள்‌ எல்லாம்‌ காணாமல்‌ போய்விடுவார்கள்‌.



மாணவன்‌ ஜெகதீஸ்வரன்‌, அவரது தந்தை செல்வசேகர்‌ ஆகிய இருவரது மறைவுக்கும்‌ எனது ஆழமான அஞ்சலியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இவர்களது மரணமே, நீட்‌ பலிபீடத்தின்‌ இறுதி மரணமாக இருக்கட்டும்‌. அறிவுமிகு மாணவக்‌ கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்‌ காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள்‌. வாழ்ந்து காட்டுங்கள்‌. பிறரையும்‌ வாழ வையுங்கள்‌. உயிரை மாய்த்துக்‌ கொள்ளும்‌ சிந்தனை வேண்டாம்‌ என்று மீண்டும்‌ மீண்டும்‌ உங்களை மன்றாடிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌" என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?