ஆர்.என்.ரவி : ஆளுநருக்கு எதிராக சட்டபேரவையில் 4 மாதங்களில் 2வது தீர்மானம் - காரணம் என்ன? Twitter
தமிழ்நாடு

ஆர்.என்.ரவி : ஆளுநருக்கு எதிராக சட்டபேரவையில் 4 மாதங்களில் 2வது தீர்மானம் - காரணம் என்ன?

Priyadharshini R

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 4 மாதங்களில் 2 முறை ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற என்ன காரணம்? விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் அதிமுக சார்பில் தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை நீக்க வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

R N Ravi

அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வரவுள்ள தனி தீர்மானம் இன்று நிறைவேற்றி விட்டு நாளை உங்களுடைய தனித் தீர்மானம் குறித்து விவாதிப்போம் என்று சபாநாயகர் கூறினார். இதனை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையில் ஆளுநர் குறித்து பேசக்கூடாது என்றுள்ள விதியைத் தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

அந்தத் தீர்மானத்திற்கு பெருபான்மையான ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வாக்கெடுப்பின் போது தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் (பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள்) கணகிடப்பட்டது.

இதற்குப் பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

பேசிய முதலமைச்சர், ”ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இது போன்ற தீர்மானத்தைக் கொண்டு வரும் நிலையை ஆளுநர் ஏற்படுத்தியிருக்கிறார்.

4 மாதங்களில் இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஆளுநரின் செயல்பாடுகள் ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கு வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும் என்று எத்தனையோ உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நமது ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் “நண்பராக” இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார்.

அதுவும் குறிப்பாக, பிரதமர் தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அரசியல் சட்டப்பிரிவு 200-ன்கீழ் “ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி விட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி ஆளுநருக்கு இல்லை” என்பதே அர்த்தம்.

ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என்று நான் கூறவில்லை மாறாக அவருக்கு இருக்க வேண்டிய அரசியல் சட்ட விஸ்வாசத்தை, 'அரசியல் விஸ்வாசம்' அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பார்த்துப்பார்த்து உருவாக்கிய சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால், அதை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு, ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசின் ஆளுநர் உரையில் இருந்த சில சொற்களைத் தவிர்த்து விட்டு ஆளுநர் உரையாற்றியதை திருத்துவதற்காகவும், அரசின் ஆளுநர் உரையை முழுமையாக பதிவு செய்வதற்காகவும், நானே முன்மொழிந்து இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் 9-1-2023 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறி முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்தார்.

RN Ravi

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவ்வபோது பல சர்ச்சை கருத்துகளை கூறி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறார்.

ஒரே ஆண்டில், ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் ஆளுநருக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது மாநிலத்தின் மோசமான நிலையை சுட்டிக்காட்டுகிறது.

இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு யுபிஎஸ்சி மாணவர்களிடம் பேசிய ஆளுநர், ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அந்த மசோதா இறந்துவிட்டதாகத்தான் அர்த்தம் என்று கூறியது சர்ச்சையானது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது மட்டுமல்லாமல், அவை இறந்து விட்டன என்ற அவரது பேச்சு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை

இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

2022 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பிய நிலையில், எந்த மாற்றமும் செய்யாமல் மசோதா மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?