தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் அழகான நிலப்பகுதி. இங்கு அடர்ந்த பசுமையான காடுகள், அழகிய ஏரிகள் மற்றும் நெஞ்சையள்ளும் நீர்வீழ்ச்சிகள் எனக் கண்கவரும் பகுதிகள் பலவுள்ளன. பருவமழைகள் வந்துவிட்டால் தமிழ்நாடு ஒரு அழகான அதிசய பூமியாக மாறி காட்சி தரும்.
தமிழ்நாட்டின் மிக அழகான, பார்க்க வேண்டிய சில நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் இங்கே
975 அடி உயரத்தில் இருந்து விழும் தலையாறு நீர்வீழ்ச்சி காண்போரைப் பிரமிக்க வைக்கும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் உள்ள இந்த அருவி தமிழகத்தின் மிக உயரமான அருவிகளில் ஒன்றாகும். இது எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் புகழ் பெற்றது.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 50 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியில் நீச்சல் குளம் உள்ளது. அருகிலேயே சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலும் உள்ளது.
கோயம்புத்தூர் ஆனைமலை மலைத்தொடரில் உள்ளது குரங்கு நீர்வீழ்ச்சி. இது ஒரு முக்கிய சுற்றுலா தளமாக இருப்பதால் சீசன் உச்சத்தில் இருக்கும் போது இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமிருப்பர்.
இப்பகுதி முழுவதும் பசுமையான காடுகளால் சூழப்பட்டிருப்பதால் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் மற்றொரு பிரமிக்க வைக்கும் அருவி ஒகேனக்கல் அருவி. இது இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சி தர்மபுரி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் உள்ளது. அருவியில் மருத்துவ குணம் உள்ளதாகக் கூறப்படுவதால், மக்கள் அடிக்கடி இங்கு வந்து நீராடுவது வழக்கம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust