sinkholes Twitter
உலகம்

சீனா, மெக்சிகோ : பூமிக்கு பல நூறு அடிகளுக்கு கீழே இயங்கும் அற்புத உலகம் குறித்து தெரியுமா?

NewsSense Editorial Team

மனிதர்களின் மூச்சுக் காற்று கூட படாத இடம் இந்த பூமியில் இருக்கத் தான் செய்கிறது. அப்படியான சிங் ஹோலை சீன விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.

மனிதர்களின் கண்ணில் படாத சிங்க் ஹோல் ஒன்றை சீன விஞ்ஞானிகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடித்து, அதில் இறங்கி சில ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.அந்த சிங் ஹோலில் அற்புதமான காடு இருப்பது தெரிய வந்தது.

இதற்கு முன்பும் இதுபோன்ற sinkholes உலகெங்கும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சரி... sinkholes எனப்படும் மூழ்கிகள் என்றால் என்ன?

நிலத்தில் குறிப்பாகச் சுண்ணாம்பு அடிப்பாறையில் நீர் அரிப்பினால் ஏற்படுகின்ற ஒரு குழியாகும். இதனால் மேற்பரப்பு நீர் நிலத்தடியில் மறைவதற்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு இணையதளத்தின் படி இயற்கையான வெளிப்புற மேற்பரப்பு வடிகால் இல்லாத நிலத்தில் ஏற்படும் தாழ்வுப் பகுதி என மூழ்கி வரையறுக்கப்படுகிறது. இவை பொதுவாக "கார்ஸ்ட் நிலப்பரப்பில்" காணப்படுகின்றன. அங்கு நிலப்பரப்பிற்குக் கீழே உள்ள பாறைகள் நிலத்தடி நீரில் கரையக் கூடியவை.

கார்ஸ்ட் என்பது சுண்ணாம்பு, டோலமைட் மற்றும் ஜிப்சம் போன்ற கரையக்கூடிய பாறைகளின் கரைப்பிலிருந்து உருவான நிலப்பரப்பு ஆகும். இது குகைகள் மற்றும் குகைகளின் நிலத்தடி வடிகால் அமைப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது.

இஸ்ரேல், மெக்சிகோ, ஸ்பெயின், பஹாமஸ், பெலிஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய பிரபலமான சிங்க்ஹோல்கள் எனப்படும் மூழ்கிகள் காணப்படுகின்றன.

சிங்க்ஹோல்ஸ் என்ற வார்த்தை பொதுவில் தெருக்களிலும் வளரும் நகரப்பகுதிகளிலும் உள்ள தாழ்வான கட்டமைப்பைக் குறிக்கிறது. உலகெங்கிலும் சீனா, மெக்சிகோ, பப்புவா நியூ கினியா மற்றும் அமெரிக்கா உட்படப் பிற இடங்களில் இயற்கையான சிங்க்ஹோல் - மூழ்களைக் காணலாம். தெற்கு சீனாவில் காடுகளுடன் கூடிய ராட்சச மூழ்கும் குழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மூழ்கிகள் குறித்த உலகளாவிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மான்டெசுமா கிணறு

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள மான்டெசுமா கோட்டை தேசிய நினைவுச் சின்னத்தில் ஒரு சுண்ணாம்பு குகையின் சரிவு காரணமாக மான்டெசுமா கிணறு உருவாகியுள்ளது. யூஎஸ்ஏ டுடேவின் டாப் 10 மூழ்கிகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் கேலன் நீர் இந்த மூழ்கி வழியாகப் பாய்கிறது.

லேயே ஃபெங்ஷான் குளோபல் ஜியோபார்க்

இந்த புகைப்படம் ஏப்ரல் 19, 2020 அன்று எடுக்கப்பட்ட ஒரு வான்வழிப் புகைப்படமாகும். இது தெற்கு சீனாவின் குவாங்சி ஜூவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள லேயே ஃபெங்ஷான் குளோபல் ஜியோபார்க்கில் உள்ள ராட்சச முழ்கியாகும். இங்குக் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகள் பல உள்ளன. பெரிய நிலத்தடி ஆறுகள், இயற்கையான பாலங்கள் மற்றும் விரிவான குகை அமைப்புகளை நீங்கள் ரசிக்கலாம்.

ப்ளூ ஹோல்ஸ்

இந்த மூழ்கி கரீபியன் நாடான பஹாமாஸின் ப்ளூ ஹோல்ஸில் உள்ளது. நீருக்கடியில் படமெடுக்கும் வல்லுநர்கள் ஆழமான நீருக்கடியில் உள்ள குகைகளைப் படமெடுத்த தயாராகிறார்கள்.

காரா பிளாங்கா

2014 ஆம் ஆண்டில் கரீபியன் நாடான பெலிஸின் மத்தியில் அமைந்துள்ள காரா பிளாங்காவில் உள்ள இந்த மூழ்கியில் பண்டைய மாயா நாகரீக கலைப்பொருட்களை நீர் மூழ்கி வல்லுநர்கள் தேடினர். அப்போது சொத்தைப் பல் பாகங்கள் மற்றும் பிற எலும்புகளை அவர்கள் கண்டுபிடித்தனர்.

சினோட்

ஒரு சினோட் என்பது தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு மூழ்கியாகும். தென் கிழக்கு மெக்சிகோவில் இருக்கும் யூகடன் தீபகற்பத்தில் இது போன்ற பல சினோட்கள் உள்ளன. இதில் மூழ்கி ரசிப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகிறார்கள்.

செனோட் ஜாசி

ஸ்பெயின் நாட்டின் வல்லாடோலிடின் மையத்தில் உள்ள செனோட் ஜாசி. இது ஒரு வசதியான உள்ளூர் நீச்சல் முழ்கியாகும். இந்த மூழ்கியைச் சுற்றி ஒரு அழகான நகராட்சி பூங்கா உள்ளது. கல்பாதைகளோடு இருக்கும் பூங்காவில் ஒரு உணவகமும் இருக்கிறது.

பேக்லர்

அமெரிக்காவின் அலபாமா பகுதியில் உள்ள பேக்லரில் 162 அடி ஆழமுள்ள செங்குத்தான நெவர்சின்க் குழி இது. இதில் பயணிக்க அனுமதி பெற வேண்டும்.

டவுண்ஷெண்ட்

ஆறு வயதான பில் வானந்தாவும் அவனது ஒரு நண்பனும் டென்னசி மாநிலத்தின் டவுண்ஷெண்டில் உள்ள ஒரு கிராமப்புற மூழ்கி குழியைச் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது 4 அடி திறந்த பகுதி ஒன்றைக் கண்டனர். அதன் மூலம் பல குகைகளின் வலைப்பின்னலைக் கண்டுபிடித்தனர்.

Dead Sea

இந்த வான்வழிப் புகைப்படம், நவம்பர் 10, 2011 அன்று இஸ்ரேலின் கிப்புட்ஸ் ஜன் கெடிக்கு அருகில் உள்ள Dead Sea எனப்படும் சவக்கடலின் உலர்வினால் உருவான மூழ்கிகளைக் காட்டுகிறது.

காண்டூன் சி

மெக்சிகோவில் கான்குனுக்கு 56 மைல் தெற்கே உள்ள ரிவியரா மாயாவில் உள்ள காண்டூன் சியில் உள்ள செனோட்டகளின் நிலத்தடி சுற்றுப்பயணத்தின் நுழைவாயில். இதில் இறங்கி ஏழு குகைகளைப் பார்க்கலாம்.

அக்துன் சென்

மெக்சிகோவின் ரிவியரா மாயா பகுதியில் அகுமாலுக்கு அருகில் உள்ள அக்துன் சென் இயற்கை பூங்காவில் ஒரு சுற்றுலாப் பயணி நீர் நிறைந்த ஒரு மூழ்கியில் நீந்துகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?