10 interesting facts about ATM Twitter
உலகம்

ATM : இந்தியாவுக்கு எப்போது வந்தது? மிதக்கும் ATM பற்றி தெரியுமா? - Wow Facts

தற்போது தவிர்க்க முடியாத ஒரு சேவையாக இருக்கும் ஏடிஎம் எப்போது, ​​யாரால் கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? ATM பற்றிய பத்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Priyadharshini R

நவீன உலகில் ஏடிஎம்களின் பயன்பாடு மனித வழக்கத்தின் முக்கிய அங்கமாகிவிட்டது. இந்த இயந்திரம் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனைகள் தொடர்பான சேவைகளை வழங்குகிறது.

தற்போது தவிர்க்க முடியாத ஒரு சேவையாக இருக்கும் ஏடிஎம் எப்போது, ​​யாரால் கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? ATM பற்றிய பத்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஏடிஎம் இயந்திரம் கண்டுபிடிப்பு

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பரோன் என்பவரால் ஏடிஎம் உருவாக்கப்பட்டது.

1965 ஆம் ஆண்டில், ஒரு நாள் ஜான் பணம் எடுக்க ஒரு வங்கிக்கு வந்திருக்கிறார். ஆனால் ஒரு நிமிடம் தாமதமானதால் வங்கி மூடப்பட்டது.

இதற்குப் பிறகு ஜான் ஷெப்பர்ட் பரோன் 24 மணி நேரமும் பணம் எடுக்கக்கூடிய இயந்திரத்தை ஏன் உருவாக்கக்கூடாது என்று யோசித்தார். இந்த சிந்தனையுடன், ஜான் ஷெப்பர்ட் பரோன் சுமார் 2 ஆண்டுகளில் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

Reg Varney

1967 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி லண்டன் பார்க்லேஸ் வங்கியில் பணம் எடுக்க முதல் ஏடிஎம் வைக்கப்பட்டது. இந்த ஏடிஎம்மில் முதலில் பணம் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் ரெக் வார்னி.

ஏடிஎம் பின்

ஜான் ஷெப்பர்ட் பரோன் 6 இலக்க ஏடிஎம் பின் நம்பரை வைத்திருக்க விரும்பினார். ஆனால் அவரது மனைவி கரோலின் 6 இலக்கங்களை நினைவில் வைத்துகொள்ள முடியவில்லை என்பதால், அவர் 4 இலக்க ஏடிஎம் பின் எண்ணை உருவாக்கினார்.

இந்தியாவின் முதல் ஏ.டி.எம்

இந்தியாவில் முதல் முறையாக, 1987 ஆம் ஆண்டு ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது. முதலில், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷன் (எச்எஸ்பிசி) மும்பையில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியது.

ஏடிஎம்மில் இருந்து தங்கம் எடுத்தல்

ஏடிஎம்மில் பணம் மட்டுமின்றி தங்கத்தையும் எடுக்கலாம். முதல் தங்கம் எடுக்கும் இயந்திரம் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலின் லாபியில் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தில் இருந்து 320 வகையான தங்க பொருட்களை எடுத்தனர்.

மிதக்கும் ஏடிஎம்

கேரளாவின் கொச்சியில் முதல் மிதக்கும் ஏடிஎம் நிறுவப்பட்டது. இந்த ஏடிஎம் இயந்திரம் பாரத ஸ்டேட் வங்கியால் நிறுவப்பட்டது. இது கேரளா ஷிப்பிங் & இன்லேண்ட் நேவிகேஷன் கார்ப்பரேஷன் (KSINC) நிறுவனத்தால் மேற்பார்வையிடப்பட்டது.

கணக்கு இல்லாத ஏ.டி.எம்

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் இத்தகைய வசதிகள் இல்லை.

பயோமெட்ரிக் ஏடிஎம்

பிரேசிலில், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பானதாக்க பயோமெட்ரிக் ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏடிஎம்களில் பயனர் முதலில் விரல்களை ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஏடிஎம் பெயர்கள்

ஏடிஎம் பல பெயர்களில் அறியப்படுகிறது. யுகே மற்றும் நியூசிலாந்தில், இது கேஷ் பாயிண்ட் அல்லது கேஷ் மெஷின் என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இது Money Machine என்று அழைக்கப்படுகிறது.

உலகின் மிக உயரமான ஏடிஎம்

உலகின் மிக உயரமான ஏடிஎம் பாகிஸ்தானில் உள்ள நாது-லாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 14,300 அடிகள். இது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவால் இயக்கப்படுகிறது. இந்த ஏடிஎம் இந்திய-சீனா எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?