பிரேசில் முதல் அமெரிக்கா வரை - உலகின் மிக நீண்ட 5 கடற்கரைகள் canva
உலகம்

பிரேசில் முதல் அமெரிக்கா வரை - உலகின் மிக நீண்ட 5 கடற்கரைகள்

Keerthanaa R

கடற்கரைகள் எப்போதும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்த தவறியதில்லை. பரந்து விரிந்திருக்கும் அந்த நீர்நிலை, மனித மூளைக்கு எட்டாத அதிசயம்.

உலகெங்கிலும் பல்வேறு வகையான கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகள் பல்வேறு அளவுகளிலும் இருக்கின்றன. அந்த வகையில், உலகின் மிக நீண்ட 5 கடற்கள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.

பிரையா டோ கஸினோ, பிரேசில்

இது உலகின் மிக நீண்ட கடற்கரைகளில் முதலிடத்தில் உள்ளது. இந்த கடற்கரையின் நீளம், சுமார் 254 கிலோமீட்டர்.

பெலாடோஸ் என்ற பிரேசிலிய நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

ஆங்காங்கே சிதைந்த கப்பல்களை காணலாம்.

தி கூராங், ஆஸ்திரேலியா

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த கடற்கரையானது, சுமார் 194 கிலோமீட்டர் நீளம் உள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட பீச் ஆகும். அடிலெய்டு நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தென் கிழக்கில் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை.

ஒரு ஜீப்பை வாடகைக்கு பெற்று இங்குள்ள இடங்களை சுற்றிப்பார்ப்பது சிறந்த ஐடியாவாக இருக்கும்

நனைன்டி மைல் பீச், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு நீண்ட கடற்கரை இது. இங்கு வாட்டர் ஸ்போர்ட்ஸ் விளையாட வசதிகள் உள்ளன. மேலும் இங்கிருக்கும் மணற்பரப்பு தங்க நீரத்தில் இருக்கிறது. ஒரு நல்ல லாங் டிரைவ் செல்லவேண்டும் என்பவருக்கு இந்த கடற்கரை சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

இந்த கடற்கரையின் நீளம் 145 கிலோமீட்டர் ஆகும்

காக்ஸ் பஜார் பீச், வங்கதேசம்

ஆசியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்று இந்த காக்ஸ் பஜார் பீச். இதன் நீளம் 120 கிலோமீட்டர். இங்கு பீச் ரெசார்ட்கள் ஏராளமாக இருக்கின்றன.

இது பல சிறிய கடற்கரைகளின் தொகுப்பு.

பாட்ரே தீவுகள், அமெரிக்கா

அமெரிக்காவின் மிக நீண்ட கடற்கரையான இது, தெற்கு பாட்ரே தீவுகள் மற்றும் வடக்கு பாட்ரே தீவுகள் என இரண்டு பாகங்களாக உள்ளன. இந்த தெற்கு தீவு கடற்கரையில் wind மற்றும் water games, பறவை கண்காணிப்பு, குதிரை சவாரி, அத்துடன் கோடை மாதங்களில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பதைக் காணுதல் போன்ற ஆக்டிவிட்டீஸ் இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

World cupChessFinals

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?