Turkey NewsSense
உலகம்

துருக்கி முதல் இலங்கை வரை : பெயர் மாற்றம் செய்து கொண்ட 7 நாடுகள் - காரணம் என்ன?

NewsSense Editorial Team

டர்க்கி (Turkey) என்கிற நாடு இனி டுர்க்கியே (Türkiye) என்றழைக்கப்படுமென ஐக்கிய நாடுகள் சபை கடந்த புதன்கிழமை அறிவித்தது.

பொதுவாக மேலை நாடுகளில் டர்க்கி என்றால் வான்கோழி என்பர். இந்த பிம்பத்திலிருந்து வெளி வர வேண்டும் என்பதற்காகத் தான் டர்க்கி, டுர்க்கியே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், பூகோள ரீதியில் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்து வரும் துருக்கி, தன் பிம்பத்தைச் சரி செய்து கொள்ள, அந்நாட்டு அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன் இந்த பெயர் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி வேறு ஏதேனும் நாடுகள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டதாக வரலாறு இருக்கிறதா? திடீரென ஒரு நாட்டின் பெயரையே மாற்ற என்ன காரணம்? வாருங்கள் பார்ப்போம்.

தி நெதர்லாண்ட்ஸ்

தி நெதர்லாண்ட்ஸ்

டச்சு அரசு ஹாலந்து என்கிற பெயரைக் கைகழுவிவிட்டு, தி நெதர்லாண்ட்ஸ் என்கிற பெயரைச் சூட்டிக் கொண்டது. 2020 நிலவரப்படி, தொழிலதிபர்கள், அந்நாட்டின் சுற்றுலாத் துறை, மத்திய அரசு என அனைத்து தரப்பும் ஹாலந்தை, தி நெதர்லாண்ட்ஸ் என்றே அழைக்கிறார்கள்.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விபச்சாரத் தொழில், பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்களுக்கு போன்றவற்றுக்குப் பெயர் போன ஹாலந்துக்கு பல நாட்டவர்களும் இந்த இரு காரணங்களுக்காகப் படை எடுத்தனர். இந்த பிம்பத்தை மாற்றத்தான் அந்நாட்டவர்கள், ஹாலந்து என்கிற பெயரை விடுத்து, தி நெதர்லாண்ட்ஸ் என்கிற பெயரைச் சூட்டிக் கொண்டனர்.

இப்போதும் அந்நாட்டில் வடக்கு ஹாலந்து, தெற்கு ஹாலந்து என இரு மாகாணங்கள் இருக்கின்றன. வடக்கு ஹாலந்து இப்போதும் போதைப் பொருட்கள் மற்றும் விபச்சாரத்துக்குப் பேர் போன இடமாகத் திகழ்கிறது.

நார்த் மசிடோனியா

நார்த் மசிடோனியா

கடந்த 2019ஆம் ஆண்டு ரிபப்ளிக் ஆஃப் மசிடோனியா என்று இருந்தது, 'ரிபப்ளிக் ஆஃப் நார்த் மசிடோனியா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எல்லா நாடுகளும் தங்கள் பிம்பத்தையோ, தங்கள் உணர்வையோ பிரதிபலிக்க தங்கள் நாட்டின் பெயரை மாற்றுவர்.

ஆனால் நார்த் மசிடோனியா சில அரசியல் காரணங்களுக்காக தன் பெயரை மாற்றிக் கொண்டது. கிரீஸ் நாட்டுடனான தன் உறவை மேம்படுத்திக் கொள்ளவும், நேட்டோ அமைப்பில் இணையவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவும் விரும்புகிறது வடக்கு மசிடோனியா.

வடக்கு மசிடோனியா மற்றும் கிரீஸ் நாட்டுக்கிடையில் ஒரு சுமுகமான உறவு இல்லை. மசிடோனியா என்கிற பெயரில் கிரீஸ் நாட்டில் ஒரு பிராந்தியம் இருக்கிறது. அந்த பெயரால் குழப்பம் ஏற்படுவதால், அதைத் தீர்க்கவும், கிரீஸ் நாட்டோடு விட்டுக் கொடுத்து உறவை மேம்படுத்திக் கொள்ளவும் தன் பெயரை மாற்றிக் கொண்டது. மசிடோனியா பண்டைய கிரேக்கச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று. இந்த பெயரால் பல அடிதடி சண்டைகள் கூட ஏற்பட்டுள்ளதாம்.

இன்றைய வடக்கு மசிடோனியா, மசிடோனியா என்கிற பெயரையே பயன்படுத்தாமல் 'வர்டார் ரிபப்ளிக்' அல்லது 'ரிபப்ளிக் ஆஃப் ஸ்காப்ஜே' என வைத்துக் கொள்ள வேண்டும் என்றது கிரீஸ். ஆனால் மசிடோனியா விட்டுக் கொடுக்காமல், அதே நேரத்தில் கிரீஸை வெறுப்பேற்றாமல் ரிபப்ளிக் ஆஃப் மசிடோனியா என்று இருந்த பெயரை 'ரிபப்ளிக் ஆஃப் நார்த் மசிடோனியா' என வைத்துக் கொண்டது.

எஸ்வாதினி (Eswatini)

எஸ்வாதினி (Eswatini)

சுவாசிலாந்து என்கிற பெயரைக் கடந்த 2018 ஏப்ரலில் எஸ்வாதினி என மாற்றினார் அந்நாட்டு அரசர் மூன்றாம் சுவாதி. சுவாசிலாந்து என்றால், சுவாசிக்கள் வாழும் நிலம் என்று பொருள்.

இதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன.

1. சுவிட்சர்லாந்து நாட்டுக்கும் சுவாசிலாந்துக்கும் இடையில் உள்ள குழப்பம்.

2. சுவாசிலாந்து தன் காலனிய ஆதிக்க காலத்திலிருந்து விடுபட வேண்டும். இதற்காகத் தான் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்டதாம்.

செக்கியா (Czechia)

செக்கியா (Czechia)

செக் குடியரசைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 2016ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் புதிய பெயர் தான் செக்கியா. இந்த பெயருக்கு என்ன குறை? என்றால் நீளமாக இருக்கிறதாம்.

பிரான்ஸ் நாட்டின் அதிகாரப்பூர்வமான பெயர் பிரென்சு ரிபப்ளிக். அது போக செக் குடியரசு என நீட்டி முழக்கிச் சொல்வதற்குப் பதிலாக 'செக்கியா' என்றால் நன்றாக இருக்கிறதல்லவா எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒரு சந்தைப்படுத்தல் முயற்சியின் பாகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

செக்கியா என ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் எல்லாம் அழைக்கத் தொடங்கினாலும், சர்வதேச அளவில் அது பரவலாகப் பதியவில்லை. செக்கியா என்கிற பெயர், ரஷ்யாவில் உள்ள செச்னியா பிரதேசத்தோடு ஒரு சிறிய குழப்பத்தை ஏற்படுத்துவதையும் கவனிக்க வேண்டும்.

காபோ வெர்டே (Cabo Verde)

காபோ வெர்டே (Cabo Verde)

செனகல் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த தீவு தேசம், கேப் வெர்டே (Cape Verde) என்றழைக்கப்பட்டு வந்தது. அது காபோ வெர்டே என்கிற போர்ச்சுகீசிய சொல்லின் ஆங்கிலயமாக்கப்பட்டப் பெயர் என்றுக் கூறப்படுகிறது.

அந்த ஆங்கிலயமாக்கப்பட்டப் பெயர் தேவை இல்லை என்றும், காபோ வெர்டே என்பது சூரியன், கடல், மகிழ்ச்சியான மக்களைக் குறிக்கும் என, 2013ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் கூறினார்.

ஶ்ரீலங்கா

ஶ்ரீலங்கா

எஸ்வாதினி போல தன் காலனியாதிக்கத்துடன் தொடர்புடைய காலத்திலிருந்து விடுபட சிலோன் என்கிற பெயர், 1972ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா என மாற்றப்பட்டது. தமிழில் நாம் அதை இலங்கை என்றழைக்கிறோம்.

ஆனால் 2011ஆம் ஆண்டு வரை, இலங்கையின் சில பல அரசு அலுவலகங்களில் கூட சிலோன் என்கிற பெயர் பயன்படுத்தப்பட்டு வந்தது என சில வலைதளங்கள் கூறுகின்றன. அவ்வளவு ஏன் இன்று வரை சிலோன் டீ என்கிற பெயரில் தான் இலங்கையின் உலகத் தரம் வாய்ந்த தேயிலை வணிகம் தொடரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?