அமெரிக்கா : திவாலான வங்கிகள், சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்? Joe Biden (Representative)
உலகம்

silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாவதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெறுகிறது, அதிகம் விவாதிக்கப்படுகிறது.

NewsSense Editorial Team

உலக அளவில் எப்போது கரன்சி நோட்டுகள் புழங்கத் தொடங்கினவோ அப்போதே பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் புது உருவம் எடுக்கத் தொடங்கிவிட்டன. கரன்சி வந்தது முதல் வங்கிகள் பொருளாதாரங்களில் அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.

கடந்த பல நூற்றாண்டுகளாக, பல நாடுகளிலும் வங்கிகள் திவாலாகி வருவதைச் செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ, இந்தியா போன்ற வளரும் நாடுகளிலோ வங்கிகள் திவாலாகும் போது அது சர்வதேச அளவில் அதிக கவனம் பெறுகிறது, அதிகம் விவாதிக்கப்படுகிறது.

அப்படி சமீபத்தில் அமெரிக்காவில் அடுத்தடுத்து இரு வங்கிகள் திவாலாகி, ஒட்டுமொத்த சர்வதேச ஊடகத்தின் கவனமும் அமெரிக்கா மீதும், அதன் பொருளாதாரத்தின் மீதும் குவிந்துள்ளது.

வங்கிப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியான செய்தியறிக்கையில், அமெரிக்காவில் வங்கி நெருக்கடி உருவாகக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உறுதியளித்தார்.

அமெரிக்காவில் வங்கிகளை வரைமுறைப்படுத்தும் நெறியாளர்கள், நியூ யார்க் நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த பிராந்திய அளவிலான சிக்நேச்சர் வங்கி மூடப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியறிக்கை வெளியானது.

சில நாட்களுக்கு முன்பு தான், அமெரிக்காவில் பிரபலமாக செயல்பட்டு வந்த சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சிலிக்கான் வேலி வங்கி, சமீபத்தில் அமெரிக்காவின் சிறந்த வங்கிகளில் ஒன்றாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டு இருந்ததும் சுட்டுதலுக்கு உரியது.

திங்கட்கிழமை, அமெரிக்க வங்கித் துறையைக் குறித்து தான் பேச இருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க வங்கி துறையை எப்படி பராமரிக்க இருக்கிறோம், என்பது குறித்தும் அந்த உரையில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஜெனெட் எலன், தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குநர் ஆகியோர், வங்கி நெறிமுறையாளர்களோடு இணைந்து, அமெரிக்க நிதி அமைப்பை பாதுகாப்பது தொடர்பாக ஒரு முடிவை எட்டி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி & சிக்நேச்சர் வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள், சிறு குறு வணிகர்கள், அமெரிக்காவில் வரி செலுத்துபவர்கள், அமெரிக்காவின் நிதி அமைப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் என்றும் ஜோ பைடன் கூறினார்.

திங்கட்கிழமை முதல், மேற்கூறிய வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் & முதலீட்டாளர்கள் அனைவரின் பணமும் எடுத்துக் கொள்ளும் வகையில் வங்கி நடவடிக்கைகள் இருக்கும் என அமெரிக்க அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களுக்கும் சரி, அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கும் சரி.. அவர்களுக்கு தேவையான போது, அவர்களுடைய டெபாசிட் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என அதிபர் ஜோ பைடனே கூறியதாக என் டி டிவி வலைதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?