திரைப்படங்கள், கதை, கட்டுரை, புத்தகம் வழியாகவே மனித இனம் தன்னுடைய ஏலியன் மீதான காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மனிதர்களைப் போலவே வேறு சில உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பல அறிவியல் சமூகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் கூட "ஏலியன் : 32 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தெளிவான UFO புகைப்படம்" என ஒரு செய்தியைப் பார்க்க முடிந்தது. அக்கட்டுரையை கீழே கொடுத்திருக்கும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
ஏலியன் : 32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தெளிவான UFO புகைப்படம் - உடையுமா மர்மங்கள்?
இதற்கு எல்லாம் தீர்வு காணும் வகையில், கடந்த 2022 ஜூலை மாதம், விவரிக்கமுடியாத பறக்கும் பொருட்கள் (Unidentified flying objects - UFOs) குறித்து ஆராய அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் ஒரு தனி அமைப்பை உருவாக்கியது.
பல முறை பலரும் யூ எஃப் ஓ-க்கள் பறப்பதாகக் கூறினர். ஆனால் இதுவரை ஏலியன்கள் வாழ்வதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என அந்த அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16ஆம் தேதி) கூறியதாகச் செய்திகள் வெளியாயின.
இவற்றையும் வாசியுங்கள்:
ஏலியன் தொடர்பு டூ காலநிலை மாற்றம் - Stephen Hawking கணித்த 5 அறிவியல் உண்மைகள்
"என் மகன் ஒரு ஏலியன்" தாயும், மர்ம சிறுவனும் மாயம் - பின்னணி என்ன?
இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருக்கின்றனவா? புதிய விடை கொடுத்த ஆய்வு
All-domain Anomaly Resolution Office - AARO என்றழைக்கப்படும் அமைப்பு தான் விவரிக்க முடியாத பறக்கும் பொருட்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதோ, நீருக்கடியிலோ, விண்வெளியிலோ பயணிக்கும் போது கண்டுபிடிக்க வேண்டிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பென்டகன் அமைப்பு பல்வேறு யூ எஃப் ஓ தொடர்பாகப் பல சம்பவங்களைப் பதிவு செய்தது அல்லது மற்றவர்கள் குறிப்பிட்டதைக் கணக்கில் எடுத்துக் கொண்டது என அந்த அமைப்பின் இயக்குநர் முனைவர் ஷான் கிர்க்பேட்ரிக் (Sean Kirkpatrick) ஊடகங்களிடம் கூறினார். இதே ஷான், ஏலியன்கள் இருக்கலாம் என்கிற சாத்தியக்கூற்றைத் தட்டிக் கழிக்கவில்லை. அவர் ஏலியன்கள் குறித்தும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
All-domain Anomaly Resolution Office - AARO என்கிற அமைப்பு, பென்டகன், அமெரிக்க உளவுத் துறை போன்ற பல அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இதனால் விமானங்கள், போர் விமானங்கள், டிரோன்கள் ஆகியவை யூ எஃப் ஓ எனக் கணக்கிடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளது.
இந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கக் காங்கிரஸ் அமைப்பு யூ எஃப் ஓக்கள் குறித்த ஒரு விளக்கக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த தலைப்பில் கூட்டம் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.
அக்கூட்டத்தில் பங்கெடுத்த பல உறுப்பினர்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். உண்மையாகவே யூ எஃப் ஓக்கள் எலியன்களுடையது தானா அல்லது அமெரிக்காவுக்குத் தெரியாத ஏதோ ஒரு புதிய தொழில்நுட்பத்தைச் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றனவா, எதிரியின் புதிய சக்திவாய்ந்த டெக்னாலஜியா எனக் கேள்விகள் எழுந்தன. இது என்னவென்று தெரியாதது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் வான்வெளிப் பகுதியில் அனுமதி பெறாமல் நுழையும் எந்த ஒரு தொழில்நுட்பமும் அமைப்பையும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே கருதப்படும் என அமெரிக்க உளவு & பாதுகாப்புத் துறையின் கீழ்நிலைச் செயலர் ரொனால்ட் மால்ட்ரி (Ronald Moultrie) கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் All-domain Anomaly Resolution Office - AARO என்கிற அமைப்பு தொடர்ந்து விவரிக்க முடியாத பறக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust