Apple event: iPhone 14 சீரிஸ், 3 விதமான Apple Watch, Airpods- என்னென்ன ரிலீஸ் ஆகிறது? Twitter
உலகம்

Apple event: iPhone 14 சீரிஸ், 3 விதமான Apple Watch, Airpods- என்னென்ன ரிலீஸ் ஆகிறது?

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான முதல் நிகழ்வு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்பிளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Antony Ajay R

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 லாஞ்ச் நிகழ்வு இன்று நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து ஆப்பிள் ரசிகர்கள் ஐபோனின் விலையை தெரிந்துகொள்ளவும், மற்ற அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்ளவும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

டிம் கூக் வழிநடத்தும் ஆப்பிள் நிறுவனம் பல தொழில்நுட்ப ஆர்வலர்களால் பாராட்டப்படும் ஒன்றாக இருக்கிறது. ஐபோன் 14 மட்டுமின்றி, ஏர்பாட்ஸ்களின் இரண்டாவது தலைமுறையான ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மற்றும் 3 விதமான, ஆப்பிள் வாட்ச்கள் வெளியாக இருக்கிறது.

Apple Far Out event : லைவில் பார்ப்பது எப்படி?

கலிபோர்னியாவில் உள்ள கூபெர்டீனோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான முதல் நிகழ்வு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்பிளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வை உலகம் முழுவதும் இருந்து நேரலையில் காண முடியும். ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளம், யூடியூப் மற்றும் ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பப்படும்.

iPhone 14

ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் அல்லது மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் 14 சீரிஸ் வர இருக்கிறது.

ஐபோன் 14 மற்றும், ஐபோன் 14 ப்ளஸ் அல்லது மேக்ஸ் மேம்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப் மற்றும் ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் A16 பயோனிக் சிப் கொண்டு இயக்கப்படும் என்று வதந்திகள் எழுந்திருக்கின்றன.

ப்ரோ மாடல்களில் 48 MP பெரிய கேமரா கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 13 விட அளவிலும் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Apple Watch

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வெளியாவது கிட்டத்தட்ட உறுதி எனலாம். இந்த வாட்ச் இதுவரை வந்த மாடல்களில் இருந்து வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தவிர அப்பிள் வாட்ச் ப்ரோ மற்றும் குறைந்த விலையில் ஆப்பிள் வாட்ச் எஸ்இ ஆகியவையும் வெளியாவதனால் இந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அப்பிள் 8 விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் சிறப்பான அம்சங்களை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதில் சிறப்பாக இருப்பதற்காக ஆப்பிள் வாட்ச்கள் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்பிள் வாட்ச் 6 உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் வசதியும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற வாட்ச்களை விட பெரிய திரையும் பேட்டரியும் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Apple AirPods Pro 2

ஏர்பாட்ஸில் இருக்கும் தண்டுப்பகுதி சிறிதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மற்றபடி பெரிய வித்தியாசங்கள் எதுவும் இருக்காது. மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சார்ஜிங் கேஸ்களை எதிர்பாக்கலாம்.

புதிய மேக் வகைகள், 10வது தலைமுறை ஐபேட், ஐபேட் ப்ரோ போன்றவை வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?