Monkeypox Twitter
உலகம்

Monkeypox குரங்கம்மை : பாலுறவினால் பரவுமா? - அறிவியல் கூறுவது இதுதான்

மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அல்லது உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இந்த நோய் தாக்கும் அபாயம் இல்லை. ஆபத்தில் இருக்கும் எவரும் ஒரு தொற்று நோயுள்ள நபருடன் நெருங்கிய உடல் தொடர்பில் வந்தாலே பிரச்சினைதான்.

Govind

உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மையை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்திருக்கிறது. அதனால் பல கவலைகள், மக்களுக்கு எழுந்துள்ளன. அதில் ஒன்று பாலியல் நடத்தை பற்றியது. ஏனெனில் இந்த வைரஸ் தொற்று உள்ள ஒருவருடன் முத்தமிடுதல், அரவணைத்தல், பாலுறவு கொள்ளுதல் மூலமாகவும் பரவும்.

உலக சுகாதார நிறுவனத்தின்படி இந்த வைரஸ் உமிழ் நீர், சீழ், புண்களிலிருந்து வரும் இரத்தம் ஆகியவை மூலம் பரவக்கூடிய தொற்றாகும். தொற்று வந்தவர் பயன்படுத்தும் பாத்திரங்கள், உடைகள், படுக்கை, இதர பொருட்கள் மூலமாகவும் தொற்று இன்னொருவருக்குப் பரவலாம்.

இப்படித் தொற்று வந்தவரின் தனிப்பட்ட தொடர்பு மூலம் வைரஸ் பரவுவதால் இந்த நோய் பாலியல் வாழ்க்கையை சீர்குலைக்குமா என்ற கவலைகள் பரவலாக எழுந்திருக்கிறது. குரங்கம்மை தொற்று வந்தால் ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகள் மூலம் அறிய முடியும். அப்போதிலிருந்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் குரங்கம்மை தொற்று ஏற்பட்டு அறிகுறி இல்லாத முதல் நாட்களில் இந்த வைரஸ் இன்னொருவருக்குப் பரவுமா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Monkeypox

சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் டிரேன் குப்தாவின் கூற்றுப்படி, பாலியல் தொடர்பு குரங்கம்மை காய்ச்சலின் பரவலை அதிகரிக்கிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ஆண்குறி, யோனி, விரைகள், உதடு, ஆசனவாய் போன்றவற்றோடு இன்னொருவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டால் இந்த வைரஸ் பரவும் என்கிறார் அவர். நீண்ட நேரம் நேருக்கு நேர் தொடர்பு கொள்வது, முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது மற்றும் மசாஜ் செய்வது ஆகியவை வைரச் பரப்பலாம்.

கூடுதலாக, குரங்கம்மைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றும் சுத்தம் செய்யப்படாத ஒரு நபர் பயன்படுத்திய படுக்கை, துண்டுகள் மற்றும் பாலியல் பொம்மைகளைத் தொடுவதன் மூலம் ஒரு நபர் நோயைப் பெறலாம். நீங்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் (அதாவது குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்டவரோடு) குரங்கம்மை வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும். நிபுணரின் கூற்றுப்படி, உங்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துவது உங்களின் அபாயத்தைக் குறைக்கலாம். யோனி அல்லது விந்து போன்ற உடல் திரவங்களில் வைரஸ் இருக்குமா என்பதைப் புரிந்துகொள்ள அறிவியல் முயற்சிக்கிறது.

ஆணுறை பயன்படுத்துவது உதவுமா?

உதவாது என்பதுதான் இதுவரை நாம் பெற்றிருக்கும் அனுபவம். "இது கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் அல்லது பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் படுக்கை, உடைகள் அல்லது பொருள்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவலாம், எனவே ஆணுறை பயன்படுத்துவது போன்ற தடுப்பு முறைகள் பயனுள்ளதாக இருக்காது" என்று டாக்டர் சர்மா மேலும் கூறினார்.

மூத்த தோல் மருத்துவரான டாக்டர் தீபாலி பரத்வாஜ் கூறுகையில், “குரங்கம்மை உடலுறவின் மூலம் பரவும். எனவே எந்த வகையான தொடுதல்களும் இல்லாமல் தனிமைப்படுத்துவது முக்கியமானது. மீண்டும் எச்சரிக்கையாகவும், நிச்சயமாக சுகாதாரமாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. சுகாதார அமைப்பு சீர்குலைந்து, அதுபோன்ற சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குடிமக்களாகிய நம் கடமை. கண்டிப்பான முகமூடி, கை சுகாதாரம், சமூக விலகல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றும் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் கூடிய விரைவில் மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

ஒரே பாலின நடத்தை இருக்கும் போது இந்நோயை தடுக்க முடியாதா?

இந்த தொற்று பரவல் தொடர்பாகக் குறிப்பிட்ட வகை நபர்களை களங்கப்படுத்தும் செய்திகள் பொருத்தமற்றவை என்று உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் உடலுறவு கொள்ளத் தேர்வு செய்கிறார்கள் அல்லது வேறு எந்தச் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், குரங்கம்மை உள்ள ஒருவருடன் எந்த வகையிலும் நெருங்கிய உடல் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் ஆபத்தில் உள்ளனர்.

நோயால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் எவரும் உதவி பெற வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்த தொற்றினால் தோன்றும் தடிப்புகள் ஹெர்பெஸ் மற்றும் சிபிலிஸ் போன்ற பல பாலியல் நோய்களை ஒத்திருக்கும். பாலியல் சுகாதார கிளினிக்குகளுக்கு சிகிச்சைக்காக வருகை தரும் ஆண்களிடம் தற்போதைய தொற்றுநோய்கள் ஏன் கண்டறியப்பட்டுள்ளன என்பதை விளக்க இது உதவும்.

மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் அல்லது உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இந்த நோய் தாக்கும் அபாயம் இல்லை. ஆபத்தில் இருக்கும் எவரும் ஒரு தொற்று நோயுள்ள நபருடன் நெருங்கிய உடல் தொடர்பில் வந்தாலே பிரச்சினைதான்.

எனவே ஓரினச்சேர்க்கை வழக்கமான பாலுறவோ எதுவாக இருந்தாலும் இந்த தொற்று பரவும். கண்டிப்பான தனிமைப்படுத்தலே தொற்று பரவுவதைத் தடுக்கும் கவசமாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?