Corona Virus Twitter
உலகம்

Corona : மீண்டும் தலைதூக்கும் வைரஸ்: 2022ல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் எவை? ஒரு பார்வை

Priyadharshini R

கொரோனாவின் தாக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா கட்டுபாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

2022 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை முடிவடைந்து மூன்றாவது அலை தொடங்கியது.

ஆனால், இந்த ஆண்டு முடிவில் சீனாவில் கொரோனாவின் புதிய அலை தொடங்கியுள்ளது.

சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் BF.7 வகை கொரோனா வைரஸ் குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WHO இன் அறிக்கையின்படி, 19 டிசம்பர் 2022 வரை, உலகம் முழுவதும் கொரோனாவால் 6,645,812 பேர் இறந்துள்ளனர். இது தவிர, 649,038,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளைப் பற்றி இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

Corona test

அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகள்

1. அமெரிக்கா

மொத்த வழக்குகள் : 98,525,870

இறப்பு எண்ணிக்கை : 1,077,129

2. இந்தியா

மொத்த வழக்குகள் : 44,676,087

இறப்பு எண்ணிக்கை : 530,674

3. பிரான்ஸ்

மொத்த வழக்குகள் : 37,716,837

இறப்பு எண்ணிக்கை : 156,731

4. ஜெர்மனி

மொத்த வழக்குகள் : 36,980,883

இறப்பு எண்ணிக்கை :159,884

5. பிரேசில்

மொத்த வழக்குகள் : 35,751,411

இறப்பு எண்ணிக்கை : 691,449

Corona

2022 ஆம் ஆண்டின் எந்த மாதங்களில் எந்தெந்த நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது என்று காணலாம்.

ஜனவரி முதல் மார்ச் 2022 வரை

ஜனவரி முதல் மார்ச் 2022 வரை, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இருந்தது.

அப்போது, ​​டெல்டா வேரியண்ட் மற்றும் ஓமிக்ரான் மாறுபாடு குறித்த வழக்குகளும் பதிவாகின.

ஊரடங்கள் முடிவடையும் போது, ​​​​கொரோனா தாக்கத்தின் அலையானது திடீர் அதிகரிப்புக்கு பின் குறைந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை

அதன்பிறகு திடீரென ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் கொரோனா வழக்குகள் அதிகரிப்பதாக செய்தி வந்தது.

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவுவதாக தகவல்கள் பரவின.

அங்கு தடுப்பூசி இல்லாததால், ஓமிக்ரான் மாறுபாடு BA.2, BA.4 மற்றும் BA.5 ஆகியவை மக்களிடையே பரவின.

அந்த சமயத்திலேயே கொரோனாவின் நான்காவது அலை இந்தியாவிற்கு வரும் என்று செய்திகள் வந்த நிலையில் அவ்வாறு வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இடைவிடாமல் BA.4 மற்றும் BA.5 வகை கொரோனா வழக்குகள் பதிவாகின.

ஜூலை முதல் நவம்பர் 2022 வரை

ஜூலை முதல் நவம்பர் 2022 வரை, உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியது.

மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முற்றிலும் திரும்பினர். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

டிசம்பர்

டிசம்பர் 2022 இல் சீனாவில் கொரோனா மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியை நெருங்கிவிட்ட நிலையிலும் கொரோனாவின் தாக்கம் சீனாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.

இன்னும் 90 நாட்களில் உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நோய்த்தொற்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சீனாவில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த தாக்கம் வரும் நாட்களில், அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlus

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?