Travel: ஸ்பெயின் முதல் பிரான்ஸ் வரை - சுற்றுலா செல்ல வரி செலுத்த வேண்டிய நாடுகள் | Part 1 Canva
உலகம்

Travel: ஸ்பெயின் முதல் பிரான்ஸ் வரை - சுற்றுலா செல்ல வரி செலுத்த வேண்டிய நாடுகள் | Part 1

Keerthanaa R

உள்ளூர் முதல் உலகத்தின் இறுதி வரை சுற்றிப்பார்க்க நமக்கு நேரம் கிடைத்தால் சுற்று பயணம் மேற்கொண்டே இருக்கலாம்.

நேரம் மட்டுமா, கையில் பணமும் வேண்டும் தானே? பொதுவாக இந்த பணம் என்பது நாம் சுற்றுலா சென்றால் எதற்கு பயன்படுத்துவோம்? நமது போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடம், ஷாப்பிங் உள்ளிட்டவை.

ஆனால், ஒரு சில நாடுகளில் இந்த செலவுடன் சேர்த்து நாம் வரியும் செலுத்தவேண்டும் என்றால்?

உலகின் இந்த சில நாடுகளை சுற்றிப்பார்க்க நாம் டாக்ஸ் கட்ட வேண்டும். என்னென்ன நாடுகள்? இங்கு பார்க்கலாம்

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் நாம் தங்கும் இடத்துக்கு ஏற்றார்போல நாம் செலுத்தும் வரி மாறுபடும். இங்கு ஒரு இரவு தங்க, ரூ.181 ஐ செலுத்தவேண்டும். அதுவும் முதல் 40 நாட்களுக்கு மட்டுமே. 40 நாட்களை கடந்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்படும்.

ஸ்பெயின்

ஸ்பெயினிலும் நாம் சுற்றுலா வரி செலுத்தவேண்டும். ஒரு இரவு தங்க 310 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. இது 5 ஸ்டார் ஓட்டலில் தங்குவதாய் இருந்தால். மற்ற இடங்களில் 191 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

ஸ்லோவேனியா

இங்கும், நாம் தங்கும் ஊர்களுக்கு, ஓட்டல்களுக்கு ஏற்றவாறு நாம் செலுத்தும் வரி கட்டணம் மாறும். பெரு நகரங்களில் 260 ரூபாய் வசுலிக்கப்படுகிறது. சிறு நகரங்கள் என்றால், கொஞ்சம் குறையும்.

போர்ச்சுகல்

இங்கு ஒரு இரவுக்கு வரிப்பணமாக நாம் ஒருவருக்கு 177 ரூபாய் செலுத்தவேண்டும். ஆனால், 13 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த விதி. முதல் 7 நாட்களுக்கு இந்த கட்டணம் செல்லுபடியாகும்.

ஆஸ்த்ரியா

இங்கு நாம் ஓட்டல்களில் தங்கினால் வரிக்கட்டணம் செலுத்தவேண்டும். அதேபோல பெல்ஜியத்திலும், நாம் தங்கும் ஒரு ஒரு இரவுக்கும் நாம் வரி பணம் செலுத்தவேண்டும்

நாம் தங்கும் நகரத்துக்கு ஏற்றவாறு இந்த அமௌண்ட் ஒருவருக்கு 600 ரூபாய் வரை இருக்கிறது

பூட்டான்

பூட்டானில் செலுத்தப்படும் வரிப்பணமானது, தினசரி நிலையான வளர்ச்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒருவர் ஒரு இரவுக்கு 1200 ரூபாய் நாம் செலுத்தவேண்டும்

செக் குடியரசு

செக் குடியரசின் தலநகரான ப்ராக்கில் மட்டுமே நாம் சுற்றுலா வரி செலுத்தவேண்டும். இங்கு ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு 89 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 60 நாட்கள் வரை நீட்டிக்கப்படும் இந்த கட்டணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் செலுத்தப்படும் வரி நமது உணவக பில்களில் சேர்க்கப்படுகிறது. இங்கு ஒரு நபருக்கு 350 ரூபாய் வரை வரிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த தொகை சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு செலவிடப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?