அமெரிக்காவும் சீனாவும் இணைய போகும் இந்தப் புள்ளி  Pexels
உலகம்

அமெரிக்காவும் சீனாவும் இணைய போகும் இந்தப் புள்ளி - எதற்காக தெரியுமா?

காலநிலை குறித்த சீனாவின் நிலைப்பாட்டால் அமெரிக்கா இந்த கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று சீனாவின் அரசியலால் ஜப்பானும் இந்த கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

NewsSense Editorial Team

ஜி7 என்பது உலகின் முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளின் குழுமமாகும். இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.

சமீபத்தில் ஜி7 நாடுகளின் 48வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்தியது. இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்படுத்திய புவிசார் அரசியல் நெருக்கடி முதன்மையாக பேசப்பட்டது. கூடவே காலநிலை மாற்றம் அதன் பிரச்சினைகளும் பேசப்பட்டது. இத்தலைப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

உச்சி மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாகவே புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்படுமாறு ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார். மேலும் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஒரு காலநிலை கிளப்பையும் அவர் முன்மொழிந்தார்.

காலநிலை மாற்றம்

காலநிலை கிளப் என்றால் என்ன?

யேல் பல்கலை பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் நார்தாஸ் என்பவர்தான் இந்த காலநிலை கிளப் ஆலோசனையை முதலில் முன்மொழிந்தார். தற்போது உள்ள காலநிலை ஒப்பந்தங்கள் நாடுகள் தானே முன்வந்து சுயமாக செயல்படும் வண்ணம் உள்ளதால் அது காலநிலை சிக்கலைக் குறிப்பிடத்தக்க விதத்தில் தீர்க்க பங்களிக்கவில்லை என்பது அவர் கருத்து.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதை ஏற்று கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து அதைக் குறைக்க வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தத்தை ஏற்காத நாடுகள் காலநிலை தொடர்பான வர்த்தக கட்டணங்களிலிருந்து பிணை எடுப்பதற்கும் இந்த கிளப் பயன்படும் என்று நார்தாஸ் முன்மொழிந்தார்.

காலநிலை மாற்றம்

காலநிலை கிளப்பின் சாத்தியமான உறுப்பினர்கள் யார்?

அனைத்து ஜி7 நாடுகளையும் இந்த கிளப்பில் சேர்ப்பதற்கு ஜெர்மன் அதிபர் ஆர்வமாக உள்ளார். பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் காலநிலை தொடர்பான இலக்குகளை அடைவதற்கு இந்த கிளப்பில் சேர்க்கலாம் என்பது ஒரு கருத்து. கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையில் காலநிலை மாற்றம் குறித்த இந்த கிளப் முயற்சியை மேற்கொள்ளலாம்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் ஒரு பிரச்சினை உள்ளது. என்றாலும் ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகள் இந்த காலநிலை கிளப்பில் உறுப்பினர்களாக இருப்பதால் பிரிட்டனும் இதில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஜார்ஜ் புஷ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பு அதிபர்களாக இருந்த காலத்தில் 1997 கியோட்டோ ஒப்பந்தம் மற்றும் 2015 பாரிஸ் ஒப்பந்தம் இரண்டிலிருந்தும் விலகியது. இது உலக காலநிலை மாற்றம் குறித்த முயற்சிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஜோ பிடன் காலத்தில் காலநிலை ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

காலநிலை குறித்த சீனாவின் நிலைப்பாட்டால் அமெரிக்கா இந்த கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று சீனாவின் அரசியலால் ஜப்பானும் இந்த கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் ஜப்பான், ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவுடன் மேம்பட்ட வர்த்தக உறவுகளை வைத்து கொள்ளலாம்.

காலநிலை மாற்றம்

பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் நாடாக இருக்கும் சீனா கடந்த காலங்களில் காலநிலை நடவடிக்கையில் அதிக தயக்கம் காட்டியது. ஏனெனில் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் உமிழ்வு முயற்சிகளை விமர்சித்தது. விதிகளை கடைப்பிடிக்காத மாசுபடுத்தும் நாடுகள் கட்டணம் செலுத்துவதை சீனா விரும்பவில்லை. இதையே அது தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும் முன்மொழிந்தது. ஆனால் கோவிட்டுக்கு பிந்தைய சூழ்நிலையில் சீனா ஒரு பொருளாதார கட்டணம் மற்றும் கட்டுப்பாட்டையும் ஏற்க விரும்பாது. அதன் பொருட்டு சீனாவும் காலநிலை கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

காலநிலை கிளப்பின் வாய்ப்புகள் என்ன?

கிளப்பின் யோசனை இன்னும் ஒரு முன்மொழிவாக இருப்பதால் கிளப்பின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கான கட்டமைப்பும் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஜி7 நாடுகள் போக ஐ.நா இந்த வாரம் எகிப்தில் காலநிலை உச்சி மாநாட்டை நடத்தியது. அதில் இந்த கிளப் குறித்த யோசனை பேசப்படலாம். காலநிலை மாற்றத்தை அமல்படுத்த ஏராளமான நாடுகள் மனமுவந்து கணிசமான திட்டத்துடன் முன்வந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இந்நேரத்தில் காலநிலை குறித்துள்ள தற்போதைய திட்டங்கள் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. எனவே காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கான புதிய தொடக்கம் அவசியமாக தெரிகிறது. பல நாடுகளும் தற்போது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பிரச்சினைகளை உணர்ந்து வருகின்றன. அந்த வகையில் காலநிலை கிளப் எதிர்காலத்தில் ஏற்பட்டால் இந்தப் பிரச்சினை தீவிரத்துடன் அணுகப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?