விநாயகர் Twitter
உலகம்

தாய்லாந்து முதல் திபெத் வரை : விநாயகர் கோலோச்சும் நாடுகள்

Priyadharshini R

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. யானையின் தலையுடைய விநாயகர் அனைவரின் பிரியமான கடவுளாகப் பார்க்கப்படுகிறார்.

எந்தவொரு மங்களகரமான முயற்சியின் தொடக்கத்திலும் விநாயகர் தென்படுவார். முழுமுதற் கடவுளும் ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி விமர்சையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. பிரியமான தெய்வமாக அனைவராலும் வணங்கப்படும் பிள்ளையாரை இந்தியா மட்டுமில்லாது உலகின் பிற நாடுகளும் கொண்டாடி வருகிறது. திபெத் முதல் சீனா, ஜப்பான் ஆப்கானிஸ்தான் வரை விநாயகரைக் கொண்டாடி வருகின்றனர். அப்படி விநாயகரின் புகழ் பரவி இருக்கும் நாடுகள் குறித்துக் காணலாம்...

கம்போடியா

கம்போடியாவில், 7 ஆம் நூற்றாண்டிலிருந்து விநாயகர் முதன்மைக் கடவுளாக வழிபடப்பட்டு அவருக்கு கோயில்கள் இருந்திருக்கிறது.

விநாயகர் வழிபாடு இந்தியாவில் புகழ் பெறுவதற்கு முன்பே இது இருந்ததாகக் கூறப்படுகிறது.

கம்போடியாவில், யானைத் தலை மற்றும் மனித உடலுடன் நிமிர்ந்து நிற்பது போன்று விநாயகர் காட்சியளிப்பார்.

தாய்லாந்து

தாய்லாந்தில், விநாயகர் ஃபிரா ஃபிகானெட் (Phra Phikanet) அல்லது ஃபிரா ஃபிகனேசுவான் ( Phikanesuan) என்று போற்றப்படுகிறார். இந்தியாவைப் போலவே, தாய்லாந்திலும் விநாயகரை அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் அளிப்பவராகக் கருதுகிறார்கள்.

வியாபாரம் நன்றாக இருக்க வேண்டும் எனத் தங்கம், இனிப்புகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றைப் படைத்து அங்கேயும் விநாயகரைக் கௌரவிக்கிறார்கள். குறிப்பாகத் தொழிலதிபர்களுக்கு விநாயகர் மிகவும் மரியாதைக்குரிய கடவுள்.

இருப்பினும், வியாபாரம் குறையும் போது, ​​விநாயகர் படம் அல்லது சிலையை தலைகீழாகத் தொங்கவிட்டு விடுவார்களாம். கலாச்சார நகரமான சாச்சோங்சாவோ "தாய்லாந்தில் உள்ள விநாயகரின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இது சாச்சோங்சாவோவைச் சுற்றியுள்ள மூன்று வெவ்வேறு கோயில்களில் மூன்று பெரிய விநாயகர் சிலைகள் உள்ளன.

இராஜதந்திரத்தின் தலைசிறந்த தெய்வமாகக் கருதப்படும் விநாயகர், பாங்காகின் வெளியே உயரமான பீடத்தில் காட்சியளிப்பார். மேலும் அரசாங்கத்தின் நுண்கலைத் துறையின் சின்னத்தின் ஒரு பகுதியாகவும் விநாயகர் உள்ளார்.

சீனா

வட சீனாவில் பழமையான விநாயகர் சிலை கல்வெட்டுகள் காணப்படுகிறது. இருப்பினும், சீனாவில், விநாயகர் எதிர்மறை சக்தியாக பார்க்கப்படுதாக கூறப்படுகிறது.

ஜப்பான்

இந்தியாவிலிருந்து, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பயணம் செய்து, விநாயகர் 8 ஆம் நூற்றாண்டில் ஜப்பானுக்குச் சென்றார்.

விநாயகரின் ஜப்பானியக் கடவுளான காங்கிடென் இரண்டு விநாயகர்களைத் தழுவிக்கொண்டிருக்கும் வடிவமாகும். காங்கிடென் சக்திவாய்ந்த அதிர்ஷ்ட தெய்வமாக அந்நாட்டில் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு அருகில் உள்ள கார்டெஸ் என்ற இடத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இந்து கோவில்கள் உள்ளன.

திபெத்

திபெத்திய பௌத்தத்தில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான விநாயகர் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்நாட்டில் விநாயகர் பற்றிய பல இந்திய நூல்களை மொழிபெயர்த்ததாக நம்பப்படுகிறது. விநாயகரின் புராணங்களையும் வழிபாட்டையும் திபெத்தியர்கள் வளர்த்து வந்துள்ளனர்.

இவ்வாறு விநாயகர் ஆசியா முழுவதும் வழிபாட்டுத் தெய்வமாக உள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?