Google layoffs Twitter
உலகம்

Google layoff - ”இது செயல்பாட்டின் அடிப்படையிலான பணிநீக்கம் அல்ல” - கதறும் இந்திய ஊழியர்

NewsSense Editorial Team

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், தன்னிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் செய்தியை நாம் பத்திரிகைகளில் பார்த்திருப்போம் படித்திருப்போம்.

அமெரிக்காவில் பணிநீக்க வேலைகளை தொடங்கிய கூகுள் தற்போது இந்தியாவில் வேலை பார்க்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வேலையை தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கூகுள் இந்தியா நிறுவனம் பணி நீக்க வேலைகளை தொடங்கியது.

இந்த பணி நீக்கம் எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என்றால், ஊழியர்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்பட்டிருந்த பல்வேறு தொழில்நுட்ப ரீதியான அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.

ஊழியர்கள் பணிநீக்கம்

கூகுள் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது, அவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது என கூகுள் நிறுவனம் கூறி வருகிறது.

ஆனால் உண்மையில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் செயல்பாடுகளை பொறுத்து இந்த பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என யூடியூப் அணியில் பணியாற்றி வந்த இந்திய ஊழியர் ஒருவர் கூறியதாக இந்தியா டுடே வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏன் என்று அவரிடமே கேட்டபோது…

கடந்த டிசம்பர் 2022ல் தான் தனக்கு ஸ்பாட் போனஸ் வழங்கப்பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட அணியில் மிகப் பிரமாதமாக வேலை பார்த்த ஒருவருக்கு தான் இந்த ஸ்பாட் போனஸ் வழங்கப்படும் என்றும், 1.85 லட்சம் பேரில் 4,000 பேருக்கு மட்டுமே இந்த ஸ்பாட் போன்ஸ் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

அப்படி சிறந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஸ்பாட் போனஸ் பெற்ற நானே பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறேன் என்றால் இது செயல்பாட்டில் அடிப்படையிலான பணி நீக்கம் அல்ல என்று சில ஊடகங்களிடம் கூறியுள்ளார் அந்த ஊழியர்.

நாங்கள் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில் ஒரு பார்ட்டியில் இருந்தோம். அப்போதுதான் நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அலுவலகம் வர வேண்டாம் என்றும் மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பல ஊழியர்களும் உடைந்து போய்விட்டனர். அடுத்து என்ன செய்வது என்று கூட தெரியாமல் உறைந்து போயினர். கூகுள் நிறுவனம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கான சம்பளத்தை சிவரென்ஸ் பே செக்காகக் கொடுக்கிறது. அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் விடுமுறை நாட்களை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அதைச் சம்பளமாகக் கொடுக்கிறது.

ஆனால் எங்களை ஏன் பணியில் இருந்து நீக்கியது என்கிற காரணத்தை தெளிவாக சொல்ல விரும்பவில்லை.

கூகுள் தரப்பில் தெளிவு இல்லை

எதன் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு, கூகுள் நிறுவனத்தின் மனித வள மேம்பாடு துறையிலிருந்தோ, கூகுள் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளோ வாய் திறக்க மறுக்கிறார்கள்.

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை ஒரு மின்னஞ்சலை அனுப்பி உள்ளது. அதில் கூகுள் நிறுவனத்தில் நடைபெறும் பணி நீக்கத்திற்கு பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அதிக முக்கியத்துவம் கொண்ட விஷயங்களுக்கு மட்டுமே தங்களுடைய வளத்தை செலவழிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த பதிலில் தெளிவு இல்லை என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதோடு கூகுள் நிறுவனத்திற்கு உள்ளேயே பணியமர்த்தப்படும் வேலைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதாவது ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் ஒரு அணியில் ஒரு பதவியில் வேலை பார்த்து வரும் ஒருவர், அந்நிறுவனம் நடத்தும் தேர்வுகளை எதிர்கொண்டு வேறு ஒரு அணிக்கோ அல்லது உயர் பதவிக்கோ செல்வது கூட நிறுத்தப்பட்டு இருக்கிறது .

lay off

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

நாம் முன்பே கூறியது போல பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை சிவரென்ஸ் பே செக்காகக் கொடுக்கிறது கூகுள் நிறுவனம். அதோடு பணிநீக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மனநலத்திற்காக ஒரு தனி அணியை உருவாக்கி இருப்பதாகவும் இந்தியா டுடே வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக கூகுள் இந்தியா நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஒரு தனி பிளேஸ்மெண்ட் செல்லையும் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. வேலை இழந்த ஊழியர்களுக்கு விரைவில் வேலை கிடைத்தால் நல்லது தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?