Hopshoots Twitter
உலகம்

Hopshoots : ஒரு கிலோ ரூ.1 லட்சமா! உலகிலேயே விலையுர்ந்த காய்கறி - அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த காய்கறியானது காசநோய்க்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குவதோடு, தூக்கமின்மை, அமைதியின்மை, பதற்றம், எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Priyadharshini R

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கூட விலையுர்ந்தவையாக உள்ளன. உதரணமாக பேக், செருப்பு, வாட்ச், உணவு பொருட்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

விலையுயர்ந்த உணவுகளாக பொதுவாக இமயமலையில் வளரும் குங்குமப்பூ மற்றும் காட்டு காளான்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்

ஆனால் விலையுர்ந்த காய்கறி குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த காய்கறி ஒரு கிலோ கிட்டதட்ட ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகிறதாம். அப்படி என்ன காய்கறி? வாங்க பார்க்கலாம்.

ஹாப் ஷூட்ஸ் எனப்படும் இந்த காய்கறி ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது. உலகின் மிக விலையுயர்ந்த காய்கறியாக ஹாப் ஷூட்ஸ் அறியப்படுகிறது.

மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற இந்த காய்கறி பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை.

அறிக்கைகளின்படி, இது முதலில் இமாச்சல பிரதேசத்தில் நடப்பட்டது.

இந்த காய்கறியின் விலை அதிகம். தவிர, சந்தையில் எளிதில் கிடைப்பதில்லை.

ஹாப் ஷூட்ஸ் என்றால் என்ன?

ஹுமுலஸ் லுபுலஸ் என்ற அறிவியல் பெயரால் அறியப்படும் ஹாப் ஷூட்ஸ் ஒரு வற்றாத தாவரமாகும்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இது உலகின் விலையுயர்ந்த காய்கறி என்று அறியப்படுகிறது.

இது 6 மீ (19 அடி 8 அங்குலம்) வரை வளர்ந்து 20 ஆண்டுகள் வரை வாழ்கிறது.

ஹாப்-ஷூட்கள் ஏன் மிகவும் விலை உயர்ந்தவை?

தி கார்டியன் அறிக்கையின்படி, ஹாப் தளிர்கள் அறுவடைக்கு தயாராக மூன்று ஆண்டுகள் வரை எடுத்து கொள்கிறது.

இந்த செடியின் அறுவடைக்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் செடியின் சிறிய பச்சை நுனிகள் பறிக்கப்படும் போது அதிக கவனிப்பு தேவைப்படுகிறது.

ஹாப்ஸின் ஆரோக்கிய நன்மைகள்

மருத்துவ ஆய்வுகளின்படி, இந்த காய்கறியானது காசநோய்க்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குவதோடு, தூக்கமின்மை, அமைதியின்மை, பதற்றம், எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த விலையுயர்ந்த காய்கறியின் பூ, பீர் தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது.

இதே போன்ற விலையுயர்ந்த காய்கறி : குச்சி, காட்டு காளான்

இந்தியாவில் ஹாப்ஷூட்கள் பயிரிடப்படாததால், அவற்றின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், இதேபோன்ற விலை உயர்ந்த காய்கறியான குச்சியும், இமயமலை அடிவாரத்தில் விளையும் காட்டுக் காளானும் ஒரு கிலோ ரூ.30,000க்கு விற்கப்படுகிறது.

இந்த காளான் மிதமான பகுதிகளில் உள்ள காடுகளில் வளர்கிறது. மேலும் இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள இமயமலையின் குளிர்ந்த அடிவாரங்கள் அவைகளுக்கு ஏற்ற பிரதேசமாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?