Elon Musk Twitter
உலகம்

"நான் தற்கொலை செய்துகொண்டால்..." Twitter Space-ல் என்ன பேசினார் எலான் மஸ்க்?

Antony Ajay R

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தற்கொலை குறித்துப் பேசியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் எலான் மஸ்க்.

சமீபத்தில் இவரது நியூராலின்க் நிறுவனம் குரங்கின் மூளையில் சிப் செட் செய்து அதன் மூலம் கணினியில் டைப் செய்து சாதனை புரிந்தது.

இவரது நிறுவனங்கள் இவரை தலைசிறந்த முதலாளியாக ஆக்கினாலும் கடைசியாக இவர் வாங்கிய ட்விட்டர் நிறுவனம் தலை வலி கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

Elon Musk

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் இதற்காக அவர் டெஸ்லா நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தை இவர் வாங்கியது முதலே சர்ச்சைகள் மட்டுமே அதிகமாக வெடித்திருக்கின்றன.

நீல டிக்குக்கு பணம் வசூலிப்பது உள்ளிட்ட இவரது ஐடியாக்கள் மண்ணைக் கவ்வின.

ஊழியர்கள் பணிநீக்க விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.

கடைசி சில மாதங்களாக எலான் மஸ்க் உச்சகட்ட லைம் லைட்டில் இருந்தாலும் அவருக்கு சாதகமாக எதுவும் நிகழவில்லை என்பதே உண்மை.

51 வயதாகும் எலான் மஸ்க் வாரத்தில் 7 நாட்களும் தினமும் 24 மணிநேரம் வேலை செய்வதாக ஜி20 வர்த்தக மாநாட்டில் கூறினார்.

இந்த நிலையில் "Twitter Files" என்ற பெயரில் நேரடி உரையாடல் பகுதி ஒன்றை ட்விட்டரில் மேற்கொண்டார் மஸ்க்.

அதில் 1.8 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். அதில் ஒருவர் எலான் மஸ்க்குக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறதா என்ற ரீதியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதற்கு தனக்கு தற்கொலை எண்ணமெல்லாம் இல்லை என்ற ரீதியில் பதிலளித்த மாஸ்க், "நான் தற்கொலை செய்துகொண்டால், உண்மையில் அது தற்கொலையாக இருக்காது" என்று கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?