சூப்பர் மார்கெட் Twitter
உலகம்

பொருளாதார கஷ்டத்தில் பிரிட்டன் மக்கள், உதவிக்கரம் நீட்டிய நிறுவனம் - விரிவான தகவல்கள்

பொருளாதார நெருக்கடிக்கு இடையே பிரிட்டனில் ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மக்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனை கொடுக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

NewsSense Editorial Team

இன்றைய தேதிக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் விலைவாசி தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஹோல்சேல் நுகர்வோர் பணவீக்கம் (WPI) ஜூலை 2022 காலத்திற்கு 13.93 சதவீதமாக இருக்கிறது. சிபிஐ என்று அழைக்கப்படும் நுகர்வோர் பணவீக்கக் குறியீடு கடந்த ஜூலை 2022 மாதத்திற்கு 6.71 சதவீதமாக இருக்கிறது.

இலங்கையில் பெட்ரோல், டீசல், அரிசி, பருப்பு, கோதுமை போன்ற அடிப்படை அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வார காலத்திற்குள் வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 50% அதிகரித்து இருக்கிறது. டீசல் மண்ணெண்ணெய் போன்ற மற்ற எரிபொருட்களின் விலை சுமார் 40 - 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இப்படி உலகம் முழுக்க பணவீக்கம் ஒரு மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் ரெசசன் கூட வரலாம் என பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் ஆருடம் கூறி வருகிறார்கள்.

பொதுவாக, இது போன்ற காலகட்டத்தில் அரசாங்கங்கள் மக்களுக்கு மானியங்களை வழங்கும் அல்லது அடிப்படை பொருட்களின் விலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைத்து விற்கக்கூடாது என கட்டுப்பாடுகளை விதிக்கும்.

ஆனால் பிரிட்டனில் தலைகீழாக ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மக்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனை கொடுக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐஸ்லாந்து என்று அழைக்கப்படும் அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை வாங்க வட்டியில்லா கடனை வழங்க இருப்பதாக பிபிசி ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இத்திட்டம் Huddersfield, Rhyl, Denbighshire போன்ற சில இடங்களில் சோதனை முறையில் நடத்தப்பட்டு இருக்கிறது. இச்சோதனை முயற்சியில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கெடுத்தனர்.

விரைவில் பிரிட்டன் நாட்டின் வேல்ஸ் மாகாணம் முழுக்க ஐஸ்லாந்து நிறுவன தரப்பில் இருந்து இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அவர்கள் தரப்பிலிருந்தே கூறப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வாரம் ஒரு முறை 10 பவுண்ட் ஸ்டெர்லங்கை திருப்பி செலுத்தினால் போதும். வாரத்தில் எந்த நாளில் கடன் தொகையைத் திருப்பி செலுத்துவது என்பதை வாடிக்கையாளர்களேத் தேர்வு செய்து கொள்ளலாம். எப்போதாவது கையில் அதிகம் பணம் புழங்கினால் கூடுதலாகக் கூட கடன் தொகையைத் திருப்பி செலுத்தலாம்.

இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஐஸ்லாந்து சூப்பர் மார்க்கெட் நிறுவனம் கொடுக்கும் இக்கடன் திட்டம் , நாடு முழுக்க அமல்படுத்தப்படும் போது வட்டி என்பதே கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Richard Walker

தகுதியான நபர்கள், நிரந்தர வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி படைத்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் என்றும், இத்திட்டத்தை இணையத்திலிருந்து கூட விண்ணப்பிக்கலாம் என ஐஸ்லாந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் வாக்கர் பிபிடி ரேடியோ 5 ஊடகத்திடம் கூறினார்.

பிரிட்டன் நாட்டில் கடந்த மூன்று மாத காலத்தில் மக்களின் வருமானம் அல்லது கூலித்தொகை வெறும் 4.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது. ஆனால் விலைவாசி (பணவீக்கம்) சுமார் 9.4 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆபீஸ் ஃபார் நேஷனல் ஸ்டாடிஸ்டிக்ஸ் அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

பிரிட்டன் நாட்டில் இப்படி வருமானம் கூலி மற்றும் விலைவாசிக்கு இடையிலான இடைவெளி இத்தனை அதிகமாக இருப்பது, கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலும் இப்படி ஏதேனும் வட்டி இல்லா கடன் திட்டம் வருமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?