10 ஆயிரம் பேரின் கொலைக்கு காரணமான 97 வயது பெண் - அதிர்ச்சி தகவல் Pexels
உலகம்

10 ஆயிரம் பேரின் கொலைக்கு காரணமான 97 வயது பெண் - அதிர்ச்சி தகவல்

NewsSense Editorial Team

10 ஆயிரம் பேரின் கொலைக்கு காரணமாக ஒரு பெண் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? இது ஏதோ புனைவோ, கற்பனையோ அல்ல. இந்த உலகை உறைய வைத்த நிஜ சம்பவம். நம் மனசாட்சியை உலுக்கிய ரத்தச் சரித்திரம். அவர் நேரடியாக கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆனால், படுகொலைகள் நடந்த சமயத்தில் படுகொலைக்கு காரணமான பாதகர்களுடன் இருந்தார். ஹூம்… மெளனமாக இருந்தார். 

இப்போது அந்த பெண்ணுக்கு, அதாவது  ஃபர்ச்னர்க்கு வயது 97. குற்றம் நடந்த சமயத்தில் வயது 18.

என்ன நடந்தது? எங்கு நடந்தது?

நடந்தது: பச்சை படுகொலைகள் | நடந்த இடம்: ஹிட்லரின் வதை முகாம்.

நடந்தவை அப்படியே இங்கு எழுத்து வடிவில்.

நாஜி வதை முகாமில் நடந்த 10 ஆயிரம் கொலைகளுக்கு உதவியாக இருந்ததாக ஒரு பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இப்போது அந்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த பெண்ணுக்கு, அதாவது  ஃபர்ச்னர்க்கு வயது 97. குற்றம் நடந்த சமயத்தில் வயது 18.

10 ஆயிரம் பேரின் கொலைக்கு காரணமான 97 வயது பெண் - அதிர்ச்சி செய்தி 

இன்னும் விரிவாக

நாஜி வதை முகாமில் கமாண்டராக இருந்தவருக்கு செயலாளராக இந்தப் பெண் பணியமர்த்தப்பட்டு இருந்திருக்கிறார். அப்போது இவருக்கு 18 வயது. 

ஸ்டதோஃப் முகாமில் ஃபர்ச்னர் 1943ஆம் ஆண்டிலிருந்து 1945ஆண்டு வரை பணியில் இருந்தார்.

ஸ்டதோஃப் முகாமில் சுமார் 65 ஆயிரம் பேர் வரை மிக மோசமான நிலையில் உயிரிழந்ததாக கூறுகின்றன நெஞ்சை உறைய வைக்கும் வரலாற்று குறிப்புகள். 

அங்கு கொல்லப்பட்டவர்களில் யூத சிறைவாசிகள், போலிஷ் குடிமக்கள், சிறைபிடிக்கப்பட்ட சோவியத் சிப்பாய்கள் என அனைவரும் அடக்கம்.

ஸ்டதோஃப் என்பது, தற்போதைய போலாந்து நகரமான டான்ஸ்கிற்கு அருகில் உள்ள ஒரு நகரம். 

அங்கு ஜூன் 1944 தொடங்கி பல்வேறு கொடூர முறைகளில் சிறைப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

கேஸ் சாம்பரை கொண்டும் பலர் கொல்லப்பட்டனர். ஃபர்ச்னர் வெறும் டைபிஸ்டாக இருந்தாலும் அவர் அங்கு மக்கள் கொல்லப்படுவது குறித்து நன்கு அறிந்திருந்தார் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

ஃபர்ச்னர் மீதான் விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அவர் தங்கியிருந்த ஓய்வூதிய இல்லத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின் அவரை ஹாம்பர்கின் சாலையில் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஃபர்ச்னர் 40 நாட்களாக எதுவும் பேசாமல் மெளமாகவே இருந்தார். அதன்பின் ஒரு நாள் “நடந்தவை அனைத்திற்கும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று தெரிவித்தார். 

“ஸ்டதோஃப் முகாமில் நடந்தவை குறித்து நான் வருந்துகிறேன். என்னால் அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலாது,” என்று தெரிவித்தார்.

ஃபர்ச்னர் ஸ்டதோஃப் முகாமின் கமாண்டர் பால் வெர்நருடன் நேரடியாக பணி புரிந்து வந்தார். கொலைக்குற்றத்தில் 1955ஆம் ஆண்டு பால் வெர்நர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

ஃபர்ச்னரின் இந்த தண்டனை, முகாமில் இருந்து தண்டிக்கப்பட்ட நபர்களின் சாட்சியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சாட்சியங்களை கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே சாட்சி சொன்னவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் மற்றொரு முக்கிய சாட்சியம் வரலாற்றியளாளர் ஸ்டீபன் ஹோர்ட்லர். 

ஹோர்ட்லர், “1944ஆம் ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் 27 வாகனங்கள் 48 ஆயிரம் பேரை ஏற்றிக் கொண்டு இந்த முகாமிற்கு வந்தடைந்தன. அப்போது நாஜிக்கள் இவர்களை கேஸ் சாம்பர்கள் மூலம் கொல்ல திட்டமிட்டனர்.” என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

தண்டனை

ஃபர்ச்னருக்கு இரண்டு வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல வருடங்களில் பெண் ஒருவரை நாஜிய குற்றத்திற்காக தண்டிப்பது இதுவே முதல்முறை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?