கட்ட கட்ட அவிழ்ந்த தூக்குக் கயிறு; மரண தண்டனை விதிக்கப்பட்ட திருடன் - தப்பித்த கதை என்ன? canva
உலகம்

கட்ட கட்ட அவிழ்ந்த தூக்குக் கயிறு; மரண தண்டனை விதிக்கப்பட்ட திருடன் - தப்பித்த கதை?

Keerthanaa R

செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கிலிடப்போகும் சமயத்தில் நூழியில், மூன்று முறை உயிர் தப்பியிருக்கிறார் ஜோசப் சாமுவேல் என்ற நபர்.

யார் இந்த ஜோசப் சாமுவேல்? இவருக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது? அதிர்ஷ்டம் இவரை இவ்வளவு இறுகப்பிடித்து மூன்று முறை மரணவாயிலிலிருந்து காப்பாற்றியது எப்படி?

7 ஆண்டுகள் சிறை

இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் சாமுவேல், ஒரு திருடன். சிறு சிறு குற்றச்சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த ஜோசப், 1795ல் திருடிய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். அப்போது இவனுக்கு வயது 14 மட்டுமே.

தண்டனைக் காலத்தின் முதல் சில வருடங்களை இங்கிலாந்து சிறையில் கழித்திருந்த பிறகு, ஆஸ்திரேலியாவிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டான் ஜோசப்.

அந்த சமயத்தில், பிரிட்டன் அரசு, ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் ஒரு கைதிகள் முகாமை பராமரித்துவந்தது. தண்டனைக் கைதிகளை தனிமையில் வைக்கும் நோக்குடன் இந்த சிறை சிட்னியில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சிறையில் பாதுகாப்பு சற்று குறைந்ததாகவே இருந்தது. காட்டுப்பகுதிக்கு மத்தியில் இந்த கட்டிடம் இருந்தது. இதனால் கைதிகள் தப்பித்துச் சென்றாலும், வனத்தின் கொடிய சுற்றுச்சூழலை அவர்களால் சமாளித்து தப்பிக்க இயலாது என்ற நம்பிக்கை அதிகாரிகளுக்கு இருந்தது.

சிறையிலிருந்து தப்பித்த ஜோசப்

இப்படியிருக்க 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இரவில் ஜோசப் மற்றும் இன்னும் சில குற்றவாளிகள் கைதிகள் முகாமில் இருந்து தப்பித்தனர்.

இந்த கும்பல் ஒரு பணக்கார பெண்ணின் வீட்டிலிருந்து 24 கினியாக்கள் மற்றும் இன்னும் சில விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றனர். திருட்டுச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோசப் லூக்கர் என்ற காவலாளி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்றார்.

மறுநாள் காலை லூக்கரின் சிதைந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. காவலாளியின் கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், பணியிலிருந்த ஒரு காவல் அதிகாரி கொல்லப்படுவது ஆஸ்திரேலியாவில் இதுவே முதன் முறை.

இறந்து கிடந்த லூக்கரின் உடலுக்கு அருகில் ரத்தக் கரை படிந்த ஒரு சக்கரம் இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர்

அகப்பட்ட ஜோசப்

திருட்டுச்சம்பவ விசாரணை, கொலை குற்ற விசாரணையாக மாறியது.

உள்ளூர் காவல் அதிகாரிகள் முதல் ராணுவ அதிகாரிகள் வரை குற்றவாளியை தேட வரவழைக்கப்பட்டனர். கொலை அரங்கேரிய இடம் மக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

சந்தேகிக்கும்படியாக, முன்னர் குற்றச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருந்த அனைவரும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர்.

கொலை நடந்த இடத்தைச் சுற்றி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், சாரா லாரன்ஸ் என்ற பெண்ணின் வீட்டில் சக்கரம் இல்லாத ஒரு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோசப் மற்றும் அவனது கூட்டாளிகள் அடிக்கடி சென்று தங்குமிடம் இந்த சாரா லாரன்ஸின் வீடு தான்.

ஆகையால், மீண்டும் கைது செய்யப்பட்டார் ஜோசப்

ஜோசப்புக்கு எதிராக வலுத்த ஆதாரம்

நாங்கள் காவலாளியை கொலை செய்யவில்லை என வாதிட்டது ஜோசப் மற்றும் குழு. முக்கியமாக ஜோசப் திருடச் சென்றது என்னவோ நிஜம் தான் ஆனால் நான் கொலை செய்யவில்லை என்றான்.

துரதிர்ஷ்டவசமாக விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஜோசபிற்கு எதிராக இருந்தன. கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜோசபிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்

1803 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள், ஜோசப் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டான். அப்போது கடைசி முறையாக அவனிடம் உண்மையை ஒப்புக்கொள்ளுமாறு கேட்கப்பட்டது.

இதனை மறுத்த ஜோசப், கொலை செய்தது தனது கூட்டாளிகளில் ஒருவனான சிம்மன்ஸ் என தெரிவித்தான். ஆனால் அதனை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை.

கட்ட கட்ட அவிழ்ந்த கயிறு

ஜோசப்பை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனது கடைசி பிரார்த்தனையை ஜோசப் செய்துகொண்டிருக்கும்போதே கழுவேற்றப்பட்டான். ஐந்து சணல் கயிறுகளாலான கயிறு அது.

சிக்னல் கொடுக்கப்பட்டவுடன் ஜோசப் அமரவைக்கப்பட்டிருந்த வண்டி நகர்த்தப்பட்டது. அப்போது தான் யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பொதுவாக ஆயிரம் பவுண்ட் எடைவரை தாங்கக்கூடிய அந்த கழு அறுந்து விழுந்தது. ஜோசப் கீழே விழுந்தான். அவசரமாக மறுமுறை கயிற்றை தயார் செய்து ஜோசப்பின் கழுத்தில் மாட்டினர். மீண்டும் வண்டி நகர்த்தப்பட்டது. இம்முறை, கயிற்றில் போடப்பட்ட முடிச்சு தானாக அவிழ்ந்தது. ஜோசப் இந்த முறையும் தப்பித்தான்.

இரண்டு முறை தூக்குக்கயிறு அவிழ்ந்து ஜோசப் தப்பித்ததை பார்த்த மக்கள், அவனை விடுவிக்குமாறு ஆர்ப்பரித்தனர்.

விடாக்கண்டனாக மூன்றாவது முறையாக மிகவும் இறுக்கமாக சணலை கட்டி, மீண்டும் ஜோசப்பின் கழுத்தில் கயிறு மாட்டிவிடப்பட்டது. ஆனால், இந்த முறையும் கயிறு அவிழ்ந்து விழுந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

நான்காவது முறை இவர்கள் தன்னை தூக்கிலிட முயலும் முன் தப்பித்து விடலாம் என நினைத்த ஜோசப் அங்கிருந்து ஓடிச்சென்று அங்கிருந்த மேலதிகாரியை அணுகினான்.

அவர் ஜோசப்பின் கதையை கேட்டு அவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

ஜோசப் தப்பித்த கதை இன்னும் மர்மமாகவே இருக்கிறது. மரண தண்டனையிலிருந்து தப்பித்த பிறகு, ஒரு சுரங்கத்தில் வேலை பார்த்துவந்துள்ளான். அங்கிருந்து தப்பிக்க நினைத்து படகில் சென்றுக்கொண்டிருக்கும்போது படகு மூழ்கியதாகவும், அவன் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜோசப்பின் உடல் கூட கிடைக்கவில்லை! ஒருவேளை தப்பித்திருப்பாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?