டைட்டானிக் கப்பலின் சிதைந்த மிச்சங்களை பார்ப்பதற்காக சுற்றுலா அழைத்துச் செல்லும் கப்பல் டைட்டன். இந்த நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் பயணித்துள்ளனர்.
கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில் அது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. இந்த கப்பலில் இருப்பவர்கள் 96 மணி நேரம் உயிர் வாழ்வதற்கு மட்டுமே அதில் ஆக்ஸிஜன் இருக்கும். ஜூன் 19ம் தேதி கப்பல் காணாமல் போனது. இன்னும் சில மணி நேரத்தில் காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் கனட பாதுகாப்புப்படை, அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் சில ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
டைட்டன் கப்பல் ஓசன் கேட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் ஏற்கெனவே இரண்டு முறை டைடன் கப்பலில் டைட்டானிக் சுற்றுலாவை நிகழ்த்தியிருக்கிறது.
8 நாட்கள் செல்லும் இந்த சுற்றுலாவுக்கு, 2.5 கோடி ரூபாய் வசூலிக்கப்படடுகிறது. “டைட்டன் கப்பலை சாதாரண கேமிங் ஜாய்ஸ்டிக் கொண்டு தான் இயக்குகிறோம்” என சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் சில முன்னர் வெளியிட்டிருந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைட்டானிக் கப்பலை காணும் ஆர்வத்தில் சென்ற 3 சுற்றுலா பயணிகள், ஒரு வழிகாட்டி மற்றும் ஓசன் கேட் நிறுவனத்தின் சிஇஓ ஆகியோர் இப்போது சிக்கலில் மாட்டியுள்ளனர்.
ஷாஸாதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகனான சுலேமான் தாவூத் பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளிகள். மிக மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்.
பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர்.
பிரிட்டன் கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங்வும் அந்த கப்பலில் இருந்தார்.
அட்லாண்டிக் கடலின் குளிர் எப்படியிருக்கும் என்பதை நாம் டைட்டானிக் படத்திலேயே பார்த்திருப்போம். இந்த குளிரால் விரைவில் சுயநினைவை இழக்கும் நபர் உயிருடன் காப்பாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.
ஒசன் கேட் நிறுவனத்தில் பணியாற்றிய டேவிட் லாக்ரிட்ஜ் என்ற நிபுணர் இந்த டைட்டான் கப்பலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை 2018ம் ஆண்டே கூறியிருந்தார். அதனை நிறுவனம் காதில் வாங்கவில்லை.
பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து முறைப்படி ஆவணங்கள் தயாரித்து எடுத்துரைத்த போது அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிட்டதாக அவர் மீது வழக்கும் தொடுத்தனர். அந்த வழக்கில் இருவரும் சமரசம் செய்துகொண்டனர்.
நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கியிருப்பவர்கள் மீழ முடியுமா? உயிருடன் பாதுகாப்பு படையினர் அவர்களைக் கண்டுபிடிப்பார்களா என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துகொள்ளலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust