மனிதர்களுக்கு எப்போதுமே தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்துத் தெரிந்து கொள்வதில் ஒரு இனம் புரியாத ஆர்வம் இருந்து வருகிறது.
அது, 2023 ஆம் ஆண்டை போல அறிவியலின் உச்சத்தில் இருக்கும் காலகட்டமாகவும் இருக்கலாம், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற அரசர்கள் தஞ்சையை ஆட்சி செய்து வந்த 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டாகக் கூட இருக்கலாம்.
இந்த எதிர்காலத்தைக் குறித்துத் தெரிந்து கொள்ளும் விஷயத்தை வானியல் சாஸ்திரம் அல்லது ஜோதிடம் அல்லது ஆரூடம் சொல்வது என ஒரு சில வார்த்தைகளில் அடக்கலாம். ஒருவர் இதெல்லாம் நடக்கும் என்று சொல்லும் போது நமக்குக் கிடைக்கும் பூரிப்பை விட அவர் சொன்னதெல்லாம் அச்சு பிசகாமல் நடந்தால் ஏற்படும் வியப்பு மிகப்பெரியது.
அப்படி 2023-ம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கலாம் என உலகப் புகழ்பெற்ற இரு தீர்க்கதரிசிகளான நாஸ்ட்ராடமஸ் மற்றும் பாபா வாங்கா ஆகிய இருவரின் கணிப்புகளைத் தான் இங்குப் பார்க்கப்போகிறோம். ஏற்கனவே இவர்கள் கூறிய பல விஷயங்கள் கடந்த பல ஆண்டுகளில் நடந்து வருவதாக பல்வேறு வலைத்தளங்கள் பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.
உக்ரைன் போர்
2023 ஆம் ஆண்டில் ஒரு மிகப் பெரிய போர் நடக்கும் என நாஸ்ட்ராடமஸ் கணித்தார். ஏற்கனவே அது 2022ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய பிராந்தியத்தில் நடக்கும் மிகப் பெரிய போர் உக்ரைன் ரஷ்யா போர் தான் என்றால் அது மிகையல்ல. இந்தப்போர் மேற்கொண்டு தீவிரமடையலாம் என்று நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார். அப்படி தீவிரமடைந்தால் அது அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் நாஸ்ட்ராடமஸ் கணித்தது பொய்யாக வேண்டும் என நாம் நம்புவோம்.
ஏற்கனவே உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தைக் குறித்து பெரிய அச்சத்தில் அழ்ந்திருக்கிறார்கள். எதையாவது செய்து மனித இனத்திற்கு என இருக்கும் ஒரே ஒரு பூமியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என ஒரு தரப்பு மக்கள் அலறிக் கொண்டு இருக்கிறார்கள்.
மற்றொரு தரப்பு மக்களோ தங்களுடைய வாழ்க்கை சுகமாக வாழ்வதிலும், சுரங்கம், மரபு சார் எரிபொருள், கார்பன் உமிழ்பு, பசுமையில்ல வாயுக்கள் உமிழ்வு போன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதனால் பூமியின் தட்பவெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என நாம் செய்திகளில் அனுதினமும் பார்த்து வருகிறோம். 2023ஆம் ஆண்டில் பூமியின் தட்பவெப்ப நிலை மேலும் உயரும், கடல் மட்டமும் அதிகரிக்கும் என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடமஸ் கணித்திருக்கிறார். சுருக்கமாக கருங்கடல் கொதிக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டில், பல நாடுகளில் மக்கள் போராட்டம் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார். இதே 2023-ம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றங்கள், பயங்கரமான திகில் சம்பவங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் அரங்கேறும் என்றும் கணித்திருக்கிறார் நாஸ்ட்ராடமஸ். வெகுஜன மக்கள் மிகப்பெரிய பணம் படைத்தவர்களுக்கு எதிராக கலகம் செய்யலாம் என சில வலைதளங்கள் இதை டீ - கோட் செய்திருக்கின்றன.
கிறிஸ்தவ மதத்தினருக்கு போப் ஆண்டவர் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. 2023ஆம் ஆண்டு புதிய போப் பொறுப்பேற்பார் என்று கணித்திருக்கிறார். அவர் தான் உண்மையான கடைசி போப்பாக இருப்பார் என்றும் கணித்திருக்கிறார் நாஸ்ட்ராடமஸ். நாமறிந்த கத்தோலிக்க தலைவர்களில் கடைசி தலைவர் இவர்தானா…? என்கிற கேள்வியும் எழுகிறது.
2023ஆம் ஆண்டு, மனிதர்களுக்கும் செவ்வாய் கோளுக்குமான தொடர்பு வலுக்கும் என்பதை “Light falling on Mars”என குறிப்பிட்டிருக்கிறார் நாஸ்ட்ராடமஸ். மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பதை இது குறிக்குமா என்றும் சில வலைதளங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. எலான் மஸ்கோ 2029ஆம் ஆண்டில் செவ்வாய் கோளில் தரையிறங்க திட்டமிட்டுள்ளார் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.
இந்த 2023 ஆம் ஆண்டில் மிக மோசமான அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்றும், அது மனிதர்களால் சரி செய்ய முடியாத அளவுக்கு வலியை கொடுக்கும் என்றும் கணித்திருக்கிறார் நாஸ்ட்ராடமஸ். உணவு தானியங்களின் விலை மிக அதிகமாக இருக்கும் இதனால் மனிதன் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் சாப்பிடும் நிலை வரும் என்கிற அளவுக்கு கடுமையான சொற்களில் எச்சரித்திருக்கிறார் நாஸ்ட்ராடமஸ்.
1911ஆம் ஆண்டு உஸ்ட்ரும்கா (Ustrumca) நகரத்தில் ஒட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் பிறந்த வன்கேலியா பண்டெவா குஷ்டெரோவா (Vangeliya Pandeva Gushterova) என்கிற பெண்மணி, அடுத்த பல நூற்றாண்டுகளில் நடக்க உள்ள விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
இவர் 1996ஆம் ஆண்டே பல்வாரியா நாட்டில் உள்ள சோஃபியா நகரத்தில் காலமாகிவிட்டார். இருப்பினும் அவரது கணிப்புகளை இப்போதும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
பாபா வாங்கா குறித்து யாருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. 1996ஆம் ஆண்டு இளவரசி டயானா உயிரிழப்பு ஏற்படும், 9 / 11 தாக்குதல் போன்ற பல விஷயங்களை முன்கூட்டியே கணித்த தீர்க்கதரிசி அவர்.
2023 ஆம் ஆண்டில் ஒரு அபாயகரமான சூரியப் புயல் உருவாகும் என கணித்திருக்கிறார் பாபா வாங்கா. ஒருவேளை பாபா வாங்க எச்சரிக்கும் அளவுக்கு மிக கடுமையான சூரியப் புயல் உண்டானால் அது பூமியில் மிகப்பெரிய மின்சார சேவைத் துண்டிப்புகளை ஏற்படுத்தும். இதனால் பெரிய கலவரங்களும் சமூகத்தில் குழப்பமும் நிலவும் என சில வலைதளங்கள் கூறுகின்றன.
இது 2023-ம் ஆண்டில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மாறும் என்றும் கணித்திருக்கிறார் பாபா வாங்கா. ஒருவேளை பாபா வாங்கா கணித்தது போலவே பூமியின் சுற்றுவட்ட பாதை மாறினால் அது பூமியில் கதிரியக்க அளவு அதிகரிக்கும், பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிக்கும். சுருக்கமாக, இந்த விளைவுகள் பூமியில் பிரளயத்தை உருவாக்கலாம் என சில செய்தி வலைதளஙகள் சொல்கின்றன.
2023 ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய நாடு தன்னுடைய உயிரியல் ஆயுதங்களை பரிசோதிக்கும் என்று கணித்திருக்கிறார் பாபா வாங்கா. ஆனால் எந்த நாடு அப்படி ஒரு பெரிய சோதனையை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க உள்ளது என்றால் அது மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கலாம். அதற்கு சமீபத்தில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா வைரஸ் ஒரு நல்ல உதாரணம். இன்று வரை இந்த வைரஸ் எப்படி வந்தது? யார் உருவாக்கினார்கள்? என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இவை அனைத்துமே கணிப்புகள் மட்டுமே. இதை அறிவியல் உடன் ஒப்பிட்டு அல்லது பொருத்திப் பார்க்காமல், வெறுமனே யாரும் பார்த்து பயப்பட வேண்டாம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரு பெரும் தீர்க்கதரிசிகள் சொன்னதில் நல்லவைகள் அனைத்தும் நடக்கட்டும், கெட்டவைகள் திரிந்து நல்லவைகளாக நிகழட்டும். நிகழும் என நம்புவோம். நம்பிக்கை… அது தானே எல்லாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust