ரஷ்யா அதிபர் புதின் NewsSense
உலகம்

ரஷ்யா அதிபர் புதின் : 'கக்காவை' சூட்கேசில் எடுத்து செல்ல மெய்காப்பாளர் - ஏன் தெரியுமா?

NewsSense Editorial Team

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் அடுத்த கட்டம் என்ன என்பது பற்றிய தகவல்களை விட, ரஷ்ய அதிபர் புதினின் அந்த மேட்டர் தான் இரண்டு நாள்களாக உலகளாவிய ஊடகங்களில் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது.

கொரோனா முதல் அலைக்கு அடுத்தே புதினின் உடல்நிலையைப் பற்றி மாறுபட்ட தகவல்கள் வரத்தொடங்கின. பல மாதங்களாகப் பொதுவெளியில் அவர் அதிகம் தலைகாட்டாதது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இவை ஒருபக்கம் நீடித்தாலும் ரஷ்ய அரசுத் தரப்பில் இடைவிடாமல் மறுப்பு தெரிவித்துவருகிறார்கள். புதினின் உடல்நிலை பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக அவர்கள் ஒரேயடியாக முடித்துக்கொள்கிறார்கள்.

Putin

சில நாள்களாக அடுத்தடுத்து பன்னாட்டு ஊடகங்களில் புதினின் உடல்நிலை பற்றி அல்ல, உவ்வே செய்திகளாக வந்தபடி இருக்கின்றன.

பாக்ஸ் நியூஸ் டிஜிட்டல் ஊடகத்தில் வந்த தகவல்தான், சமீபத்திய பரபரப்புக்குத் தீ மூட்டிவிட்டுள்ளது எனக் கூறலாம்.

ரஷ்யாவில் பிறந்த அமெரிக்க இராணுவ- பாதுகாப்புத் துறை உளவு வல்லுநரான ரெபெக்கா கோஃப்லரின் பேட்டியும் அதில் இடம்பெறவே, அந்தச் செய்திக்குப் பரவலான கவனமும் கூடுதலான முக்கியத்துவமும் கிடைத்துள்ளது.

அந்த ஊடகப் பேட்டியில் கோஃப்லர், “ இப்போதெல்லாம் புதின் தன்னுடைய உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளியில் பரவிவிடுமோ என ரொம்பவும் அதிகமாகப் பயப்படுகிறார். தன்னுடைய உடல்நலம் பற்றிய தகவல்கள் சிறிதுகூட வெளிநாடுகளின் உளவுத்துறையின் கைக்குச் சென்றுவிடவே கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Putin

புதினைப் பற்றி இவர் எழுதிய ‘ புதின்ஸ் பிளேபுக்’ எனும் புத்தகம் விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது. அதுவும் உக்ரைன் போருக்குப் பின்னர் பல மடங்கு விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

“புதின் ரஷ்யாவில் தானே மேன்மேலும் ஆட்சியில் நீடிக்கவேண்டும் என விரும்புகிறார். தான் அதிகாரத்தில் நீடிப்பதற்கு எந்தவிதக் குழப்பமோ தடையோ வந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்துவருகிறார். அதற்கு ஏற்பவே தன்னுடைய பிம்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறார்.” என்று கோஃப்லர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Putin

அடுத்ததாக பிரான்சு நாட்டில் வெளியாகும் பாரிஸ் மேட்ச் எனும் வார இதழில் வந்த செய்திதான், உச்சக்கட்டமானது. சிறுநீர் பற்றியது!

அதில்தான், புதினின் அயல்நாட்டுப் பயணங்களின் போதான அவரின் உவ்வே (சிறுநீர், மலம் ) சங்கதியை, தனியாக ஒரு பெட்டியில் போட்டு, மாஸ்கோவுக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள் என்கிற தகவல் வெளியானது.

கடந்த 2017ஆம் ஆண்டில் புதின், பிரான்சு நாட்டுக்குச் சென்றபோது, இவ்வாறு செய்யப்பட்டது என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவையைச் சேர்ந்தவர்கள் இதற்காக அமர்த்தப்பட்டனர்; ஒவ்வொரு நாளும் உவ்வே மேட்டர் மாஸ்கோவுக்கு அனுப்பிவைக்கப்படுவதைக் கவனித்துக்கொள்வதற்காகத் தனியாக ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார் என்றும் பாரிஸ் மேட்ச் செய்தி தெரிவிக்கிறது.

பிரான்சு நாட்டில் உள்ள ரசியத் தூதரகப் பணியாளர்கள் இதை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்; அதையும் மீறி தகவல் கசிந்துவிட்டது.

Putin

பிபிசி ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் வெளியிட்ட காணொலியும் இதில் பரபரப்பை உண்டாக்கியது.

அந்தக் காணொலியில், ஓர் அறையிலிருந்து ரசிய பெடரல் பாதுகாப்புச் சேவை ஏஜண்டுகள் இருவர் வெளியில் வருவதும் அவர்களில் ஒருவரின் கையில் தனியான ஒரு சூட்கேஸ் இருப்பதும் தெரிகிறது. அவர்களுக்குப் பின்னால் இரண்டு பாதுகாவலர்களுடன் புதின் நடந்துவருவதும் இடம்பெற்றுள்ளது.

ஒருவேளை, புதின் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் அரசாங்கம் நினைத்தால், அவருடைய உவ்வே சங்கதியை வைத்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். இதனால்தான் அவர் தரப்பில் அதைச் சேகரித்து விமானத்தில் மாஸ்கோவுக்கு அனுப்பிவைக்கிறார்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Putin

அதிகாரத்துக்கு வந்தது முதலே புதின் இப்படியாகத் தன்னைப் பற்றி வினோதமான தகவல்கள் வெளிவரும்படி நடந்துகொள்கிறார் என்கிறது இன்னொரு பிரிட்டன் ஊடகம்.

இந்த சூழலை விவரிக்கும் கோஃப்லர், “ புதினுக்கு தன்னுடைய உடல்நலம் பற்றிய அதீதமான பயம் உண்டு. இதனால் தனக்கு என்னென்னவோ நடந்துவிடும் என கண்டபடி யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவரின் உடல்நிலை குறித்து திட்டவட்டமான தகவலாக இல்லாமல் எல்லாமே ஊகமாகக் கூறப்படுகிறது.

எப்படியோ ரஷ்யாவின் ஆட்சித்தலைவராக 2024வரை புதின் இருக்கமுடியும். அவரோ 2036வரை இருக்க விரும்புகிறார். அதையொட்டி அவரின் பெயரையும் பிம்பத்தையும் பெரிதுபடுத்துவது நடக்கிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது.” என்கிறார்.

என்னவோ இருக்கட்டும், அதற்காக, ஒரு மனிதர் தன் உவ்வே சங்கதியை எல்லாமா, அடுத்த நாட்டிலிருந்து விமானத்தில் அனுப்பிவைப்பார் எனும் கேள்வி எழுந்தால் வியப்பு இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?