NEOM Twitter
உலகம்

செளதி அரேபியா: உலகின் மிகப்பெரிய கட்டடங்கள் இனி இங்கு தான் இருக்கும் - ஆச்சர்ய செய்தி

இந்த திட்டம் ரகசியமானது என்பதால் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் சிலர், செங்கடல் கடற்கரையிலிருந்து பாலைவனம் செல்கிற வழியில் பிரம்மாண்டமான நியோம் கட்டிடத்தை எழுப்ப இருப்பதாகக் கூறினார்கள்.

NewsSense Editorial Team

சவூதி அரேபிய அரசாங்கம், $500 பில்லியன் பொருட்செலவில் நியோம் எனப்படும் மிகப் பிரம்மாண்டமான உலகின் மிகப்பெரிய கட்டிடத்தைக் கட்ட திட்டமிடுகிறது. அதிக மக்கள்தொகை இல்லாத பகுதியில் கட்டப்பட இருக்கிற இந்த கட்டிடம் சவுதி அரேபியாவின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக இருக்கும் என்கிறார்கள் விஷயத்தை நன்கு அறிந்தவர்கள்.

சவூதியின் பட்டத்து இளவரசரும் தற்போதைய ஆட்சியாளருமான முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான நியோம் திட்டத்தின் படி, சுமார் 500 மீட்டர் (1,640 அடி) உயரமுள்ள இரட்டை வானளாவிய கட்டிடங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாக சவுதி அரேபிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டம் ரகசியமானது என்பதால் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் சிலர் கூறுகையில், செங்கடல் கடற்கரையிலிருந்து பாலைவனம் செல்கிற வழியில் தான் இந்த நியோம் கட்டிடத்தை எழுப்ப இருப்பதாகக் கூறினார்கள். அந்த கட்டிடமானது, முக்கியமான அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் சில்லறை வணிக வளாகங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்குமென்றும் கூறினார்கள்.

முகமது பின் சல்மான்

வடிவமைப்பாளர்கள் தற்போதைக்கு அரை மைல் பரப்பளவில் நியோம் கட்டிடத்தின் முன்மாதிரியைச் செய்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால், அந்த கட்டிடம் முழுமையடையும் போது உலகின் மிகப் பெரிய கட்டிடமாக இருக்கும் என்று அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார்.

2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நியோம் என்பது, நாட்டின் தொலைதூரப் பகுதியைத் தொழில்நுட்ப அரை தன்னாட்சி கொண்ட மாநிலமாக மாற்றும் இளவரசர் முகமதுவின் திட்டமாகும். இது வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது மற்றும் எண்ணெய் விற்பனையை நம்பாமல் சவூதியின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த உருவாக்கப்படும் அவரது திட்டங்களின் ஒரு பகுதியாகும். நியோமின் முதுகெலும்பாகக் கூறப்படும் முக்கியமான அம்சமான “கார் இல்லாத லீனியர் நகரமாக” அமைக்க மட்டும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று இளவரசர் கடந்த ஆண்டு கூறினார்.

Saudi Arabia

நியோம் தலைமை நிர்வாக அலுவலகம் நத்மி அல்-நஸ்ர் ஒரு பேட்டியில் “நாங்கள் இதை முழுவதுமாக முடிக்கும் போது, அது நல்ல வரவேற்பைப் பெறும், மேலும் புரட்சிகரமாகப் பார்க்கப்படும்” என்று தெரிவித்தார். இது தவிர இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டார்.

கட்டுமானத்திற்குச் செலவாகும் நிதியைப் பற்றி இதுவரையில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால், கடந்த காலத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் தோல்வியடைந்ததை ஒப்பிட்டு பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

நியோம் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அலி ஷிஹாபி கூறுகையில், “இந்த வடிவமைப்பு எங்கள் பார்வைக்கு வந்தபோது அது பிரமிப்பை ஏற்படுத்தியது. இது சாதாரண தொழிலாளி முதல் பெரிய கோடீஸ்வரர் வரை அனைவருக்குமான ஒரு திட்டமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?