Gotabaya Rajapaksa Twitter
உலகம்

Morning News Today: ஜப்பானிடம் உதவி கோரிய இலங்கை அதிபர் ராஜபக்சே

NewsSense Editorial Team

ஜப்பானிடம் உதவி கோரிய இலங்கை அதிபர்


இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக வன்முறை அரங்கேறியது. இந்நிலையில், புதிய பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். பல நாடுகளும் இலங்கைக்கு உதவி வருகிறது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே காணொலிக்காட்சி வழியாகப் பேசியதில், " இலங்கையின் முக்கிய வளர்ச்சிகளுக்கான கூட்டாளிகளில் முக்கிய பங்காளி ஜப்பான். இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை போக்குவதற்குத் தேவையான நிதியுதவியை ஜப்பான் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது." என்றார்.

Madras University

சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்தது. இந்நிலையில், அந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இதுகுறித்த அறிவிப்பில், "ஜூன் 2-ம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது."

பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர்

முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அதிபரானார்!


பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றி பெற்றார். இவர், பிலிப்பைன்ஸின் சர்வாதிகாரியாக இருந்த பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியர் -ன் மகன். தந்தை ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட 36 ஆண்டுகளாகிறது. இப்போது மகன் பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் அதிபராகியிருக்கிறார். அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டு அமர்வில் இவர் அந்த நாட்டின் அதிபராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். " நாம் அனைவரும் சரியானவர்களாக இருக்கமுடியாது. ஆனால் எப்போதும் சரியாக இருக்க முயற்சிசெய்வோம். அதிபர் நன்றாக இருந்தால், நாடும் நன்றாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

Shah Rukh Khan

ஷாருக் கானுக்கு கடிதம் எழுதிய மாணவி


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தட்கன் ஜெயின் பி.ஏ. முதல் ஆண்டு படிக்கிறார். அவர் டிவிட்டரில் நடிகர்களின் பான் மசாலா விளம்பரம் குறித்து முன்பு பதிவிட்டிருந்தார். தற்போது, பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதைக் கைவிடுமாறு ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், "நீங்கள் பான் மசாலாவை அதிகம் விளம்பரம் செய்கிறீர்கள். உங்கள் பான் மசாலாவுக்காக 5 ரூபாய் மணி ஆர்டரும் அனுப்பியிருக்கிறேன். எனக்கு பான் மசாலாவை அனுப்புங்கள். உங்கள் இருவரையும் நான் என் சகோதரர்களாகவே பார்க்கிறேன். அதனால்தான், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இந்தியாவின் அடையாளம். " என எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

RCB

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?